Published:Updated:

"இந்தப் படத்திலும் ரெண்டு தனுஷ்!”

Dhanush, Sneha
பிரீமியம் ஸ்டோரி
Dhanush, Sneha

‘`தமிழர்கள் தற்காப்புக் கலையைச் சொல்லும் படத்துக்கு ‘பட்டாஸ்’ என்ற தலைப்பு ஏன்?’’

"இந்தப் படத்திலும் ரெண்டு தனுஷ்!”

‘`தமிழர்கள் தற்காப்புக் கலையைச் சொல்லும் படத்துக்கு ‘பட்டாஸ்’ என்ற தலைப்பு ஏன்?’’

Published:Updated:
Dhanush, Sneha
பிரீமியம் ஸ்டோரி
Dhanush, Sneha

“நான் வெற்றி மாறன் சாரிடம் உதவி இயக்குநராக இருந்தபோது தனுஷ் சாருக்காக கிக்பாக்ஸிங் கதை ஒன்றை எழுதிக்கொண்டிருந்தேன். ஆனால், கிக்பாக்ஸிங் வெளிநாட்டிலிருந்து வந்த சண்டைக்கலை எனப் புரிந்தது. அதனால் அந்தக் கதையை அப்படியே விட்டுவிட்டு, தமிழர்களின் வீரக்கலை குறித்துத் தேட ஆரம்பித்தேன். அப்படி உருவானதுதான் இந்தப் படம்’’ - ‘பட்டாஸ்’ உருவான கதை சொல்கிறார் இயக்குநர் துரை செந்தில்குமார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
"இந்தப் படத்திலும் ரெண்டு தனுஷ்!”
"இந்தப் படத்திலும் ரெண்டு தனுஷ்!”

‘`தனுஷுடன் ‘கொடி’க்கு அடுத்து ‘பட்டாஸ்.’ இந்தப் படத்தில் தனுஷுக்கு என்ன ஸ்பெஷல் ரோல்?’’

‘`வெற்றி மாறன் சாருடன் இருந்த காலத்திலிருந்தே தனுஷ் சாரைக் கூர்ந்து கவனிக்கிறேன். முதல்நாள் ஷூட்டிங்கில் மறுநாள் எடுக்கவேண்டிய கதைக்கான காட்சியை மட்டும் இயக்குநர் சொல்வார், மறுநாள் படப்பிடிப்பில் யாருமே எதிர்பார்க்காத பர்ஃபாமன்ஸ் காட்டி அசத்துவது தனுஷ் சாரின் ஸ்பெஷாலிட்டி. தமிழர் தற்காப்புக்கலையின் ஜாம்பவான் நாகர்கோவில் மாஸ்டர் செல்வராஜ். அவரிடம்தான் தற்காப்புக் கலைக்கான பயிற்சி எடுத்துக்கொண்டார் தனுஷ். அவரிடம் கற்றுக்கொண்ட கலையோடு தன்னுடைய பங்களிப்பையும் கலந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் நடித்து பிரமிக்க வைத்துவிட்டார் தனுஷ் சார்.’’

‘`தமிழர்கள் தற்காப்புக் கலையைச் சொல்லும் படத்துக்கு ‘பட்டாஸ்’ என்ற தலைப்பு ஏன்?’’

``சினிமாவை தியேட்டரில் வந்து பார்ப்பது இளைஞர் கூட்டமே. அவர்களைக் கவர்வதற்காகத்தான் ‘பட்டாஸ்’ தலைப்பு.’’

‘` ‘அசுரன்’ படத்துக்குப் பிறகு ‘பட்டாஸ்’ படத்துக்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியிருக்கிறதே?’’

``ஆமாம். ‘பட்டாஸ்’ படத்திலும் இரண்டு விதமான கேரக்டர்களில் தனுஷ் சார் நடித்திருக்கிறார். ஒன்று அவருடைய ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடித்த துறுதுறு கதாபாத்திரம். இன்னொன்று சீரியஸான கேரக்டர். இரண்டிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார். ‘அசுரன்’ படத்தில் நீங்கள் பிரமித்து ரசித்த தனுஷ்சாரின் நடிப்பை, ‘பட்டாஸ்’ திரைப்படத்திலும் பார்க்கலாம்.’’

‘` ‘புதுப்பேட்டை’க்குப் பிறகு தனுஷுடன் மீண்டும் சினேகா... ஆச்சர்யமாக இருக்கிறதே?’’

``தனுஷ் சாருக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்ஸிதா நடித்திருக்கிறார். ஆனால் ‘பட்டாஸ்’ படத்தின் ஆரம்பம் முதல் க்ளைமாக்ஸ் வரை பயணம் செய்யும் கனமான கதாபாத்திரத்தில் சினேகா நடித்திருக்கிறார்.

தனுஷ்சாருக்குத் தற்காப்புக் கலைப்பயிற்சி கொடுத்த செல்வராஜ் மாஸ்டரிடம் சினேகாவும் பயிற்சியெடுத்தார். தமிழர்களின் தற்காப்புக் கலையில் பெண்களின் பங்கு எந்த அளவுக்கு இருந்தது என்பதை ‘பட்டாஸ்’ திரைப்படம் மூலம் சொல்லியிருக்கிறோம். வீரத்தமிழச்சி கதாபாத்திரத்தில் அசத்தியிருக்கிறார் சினேகா.’’

‘` ‘எதிர்நீச்சல்’ படத்தில் பார்த்த சிவகார்த்திகேயன், இப்போதுள்ள சிவகார்த்திகேயன்... எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘`வெற்றி மாறன் சாரிடம் ‘ஆடுகளம்’ படத்தில் வேலைபார்த்தபோது தனுஷ் சாருக்கென்று நான் எழுதிவைத்திருந்த கதைதான் ‘எதிர்நீச்சல்.’ அந்தக் கதையை வெற்றி சாரிடம் சொல்லிவைத்திருந்தேன். அப்போது தனுஷ் சாரோடு ‘3’ படத்தில் சிவகார்த்திகேயன் சின்ன கேரக்டரில் நடித்துக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் வெற்றி சாரிடம் ‘என்னோட வொண்டர்பார் பிலிம் பேனர்ல சிவகார்த்திகேயனை ஹீரோவா வெச்சுப் படம் எடுக்கலாம்னு இருக்கேன்.

"இந்தப் படத்திலும் ரெண்டு தனுஷ்!”

யாராவது கதை இருந்தால் சொல்லுங்க’ என்று தனுஷ் சார் கேட்டிருக்கிறார். அப்போது நான் சொன்ன கதையை தனுஷ் சாரிடம் சொல்லியிருக்கிறார் டைரக்டர். அப்படி உருவானதுதான் ‘எதிர்நீச்சல்.’ சிவாவின் திறமையை முதலில் கண்டுபிடித்தவர் தனுஷ் சார்தான். அந்தப் படத்தில் நடிக்கும்போதே சிவகார்த்திகேயன் புத்திசாலி என்பது தெரியும். அந்தத் திறமைக்கேற்ற உயரங்களை இப்போது அவர் அடைந்துவருகிறார்.’’