லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
Published:Updated:

பெண்கள் ஜெயித்தால் இன்னும் சந்தோஷம்! - ஹலீதா ஷமீம்

ஹலீதா ஷமீம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஹலீதா ஷமீம்

திரைக்குப் பின்னே...

2019-ன் குறிப்பிடத்தக்க படைப்பான `சில்லுக் கருப்பட்டி’ படத்தின் இயக்குநர் ஹலீதா ஷமீம். எலெக்ட்ரானிக் மீடியா பயின்ற ஹலீதா, ஏழு ஆண்டுக்காலம் இயக்குநர்கள் சமுத்திரக்கனி, புஷ்கர் - காயத்ரி, மிஷ்கின் ஆகியோரின் பட்டறையில் திரைப்பாடம் பயின்றவர். இந்த இளம் இயக்குநருடன் மினி பேட்டி...

பெண்கள் ஜெயித்தால் இன்னும் சந்தோஷம்! - ஹலீதா ஷமீம்

‘சில்லுக் கருப்பட்டி’க்கான ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கு?

ரொம்பவே சந்தோஷமா இருக்கு. இயக்குநர்கள் ஷங்கர், பாலாஜி சக்திவேல், ஏர்.ஆர்.முருகதாஸ், ராஜா ஆகியோர் பாராட்டி ட்வீட் செய்திருக்காங்க. சூப்பர் ஹேப்பி!

ஹலீதா ஷமீம்
ஹலீதா ஷமீம்

ஆந்தாலஜி ஜானர்ல படம் இயக்கும் ஐடியா எப்படி வந்தது?

எழுத்தாளர்களுக்கு எப்படி ஒரு சிறுகதைத் தொகுப்பு கொண்டு வரணும்னு ஆசை இருக்குமோ, அதேபோல எனக்கு ஆந்தாலஜி திரைப்படம் இயக்கும் ஆசை வந்தது. இது குறும்படங்களின் தொகுப்பாக இருந்தாலும்கூட, தனித்தனியா நாலு படத்தை இயக்குறதுக்கு இணையான கடினமான வேலை. ரிஸ்க் அதிகம். இருந்தாலும் துணிஞ்சு இறங்கினேன். இனி இங்கும் பல இயக்குநர்கள் இணைந்து ஒரு திரைப்படம் இயக்குகிற மாற்றம் வரப்போகுது. இது வரவேற்கத்தக்க விஷயம்!

பெண் இயக்குநர்களின் எண்ணிக்கை அதிகமாகிட்டு வர்றதைக் கவனிக்கிறீங்களா?

பெண் இயக்குநர்கள் அதிகமாகிட்டு வர்ற செய்தியை கேட்கிறப்பவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஏன்னா, இதுநாள் வரை பெண் இயக்குநர்கள் தொடர்பா நான் எதிர்கொண்ட கேள்விகள் எல்லாம், ‘ஏன் பெண் இயக்குநர்கள் சினிமாவில் ஜெயிக்க முடியல? ஏன் அவங்க எண்ணிக்கை கம்மியா இருக்கு?’ போன்றவைதாம். இப்பதான் ‘ஏன் அதிகமாகிட்டு வருது’ங்கிற மாதிரி ஒரு கேள்வியைச் சந்திக்கிறேன். அதுவே, சந்தோஷம்தான். பெண் இயக்குநர்கள் எல்லோரும் ஜெயிச்சாங்கன்னா, இன்னும் சந்தோஷம்!

அடுத்தது?

படம் பெயர் ‘ஏலே’. ரிலீஸுக்குத் தயாரா இருக்கு!

வாவ்... வாழ்த்துகள்!