Published:Updated:

“ஆக்‌ஷன், காமெடி எல்லாமே எக்ஸ்ட்ரா!”

ஜோதிகா,  கார்த்தி,  சத்யராஜ்,  சீதா
பிரீமியம் ஸ்டோரி
ஜோதிகா, கார்த்தி, சத்யராஜ், சீதா

ஜீத்து ஜோசப்பின் ‘தம்பி’ சீக்ரெட்

“ஆக்‌ஷன், காமெடி எல்லாமே எக்ஸ்ட்ரா!”

ஜீத்து ஜோசப்பின் ‘தம்பி’ சீக்ரெட்

Published:Updated:
ஜோதிகா,  கார்த்தி,  சத்யராஜ்,  சீதா
பிரீமியம் ஸ்டோரி
ஜோதிகா, கார்த்தி, சத்யராஜ், சீதா

த்ரில்லர், காமெடி, ஃபேமிலி, ஆக்‌ஷன்... இப்படி எல்லா ஜானர்களிலும் படம் இயக்கக்கூடிய இயக்குநர்கள் இந்திய சினிமாவில் மிகவும் குறைவு. அந்தப் பட்டியலில் மிகவும் முக்கியமானவர் ஜீத்து ஜோசப். தன்னுடைய ‘த்ரிஷ்யம்’ படத்தின் ரீ-மேக்கான ‘பாபநாசம்’ மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நேரடியாக இயக்கியிருக்கும் முதல் தமிழ்ப்படம் ‘தம்பி.’ அவரிடம் பேசினேன்.

 கார்த்தி
கார்த்தி

‘` ‘பாபநாசம்’ படத்துக்கும் ‘தம்பி’க்கும் நான்கு வருட இடைவெளி... ஏன்?’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘` ‘பாபநாசம்’ படத்துக்குப் பிறகு ரொம்ப பிஸியாகிட்டேன். நிறைய ஃபேமிலி கமிட்மென்ட்ஸ் வந்திருச்சு. இடையில் சில புராஜெக்ட்ஸ் தேடி வந்தது. டிஸ்கஷன் வரைக்கும் போயிட்டு அப்புறம் டிராப் ஆகிருச்சு. இதுக்கு இடையில் ‘தம்பி’ படத்தோட தயாரிப்பாளரும், ஜோதிகாவின் தம்பியுமான சூரஜ், ஒரு டாக்குமென்ட்ரி பற்றிச் சொன்னார். அங்கிருந்து ஆரம்பிச்சதுதான் ‘தம்பி.’ ஜோதிகாவோடு கார்த்தி நடிச்சா நல்லா இருக்கும்னு யூனிட்ல சொன்னாங்க. ரெண்டுபேருமே நல்ல நடிகர்கள்ங்கிறதால நானும் ஆர்வமா ஓகே சொல்லிட்டேன். இடைவெளி அதிகம்தான்னாலும் மீண்டும் நல்ல படத்தோடு வர்றது சந்தோஷம். எல்லாமே நல்லதுக்குத்தான்.’’

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
சத்யராஜ், கார்த்தி
சத்யராஜ், கார்த்தி

‘`டாக்குமென்ட்ரியிலிருந்து உருவானதுதான் இந்தப் படமா?’’

‘`இந்த டாக்குமென்ட்ரி தொடர்பான தகவல்களைத் தேடும்போதுதான், அதை மையமா வெச்சே பாலிவுட் எழுத்தாளர் மற்றும் இயக்குநர் ரென்ஸில் டி சில்வா கதை ஒண்ணு ரெடி பண்ணியிருந்தது தெரியவந்தது. அவர் எழுதிய கதையைப் படிச்சேன். எனக்குள்ள இருந்த விஷயங்களையும் கதையில் கொஞ்சம் சேர்த்தேன். இப்படித்தான் ‘தம்பி’ படத்தோட கதை உருவானது. தமிழில் படம் பண்ணப்போறோம்ங்கிறதனால இங்க ஒரு எழுத்தாளர் எங்களுக்குத் தேவைப்பட்டார். அப்படி உள்ளே வந்தவர்தான் ‘விக்ரம் வேதா’ மணிகண்டன். திரைக்கதையில் எங்களுக்குத் தேவையான உதவிகளைப் பண்ணிக்கொடுத்தார்.’’

கார்த்தி, ஜோதிகா
கார்த்தி, ஜோதிகா

‘`வித்தியாசமான ஜானர்களில் படம் எடுப்பவர் நீங்கள். ‘தம்பி’ என்ன ஜானர் படம்?’’

‘` ‘பாபநாசம்’ மாதிரி இதுவும் ஒரு ஃபேமிலி டிராமா த்ரில்லர் கதைதான். ஆனால், அதில் இருந்த நகைச்சுவை, ஆக்‌ஷன், எமோஷன்ஸ், த்ரில்லிங் மொமன்ட்ஸ் எல்லாமே ‘தம்பி’யில் இன்னும் எக்ஸ்ட்ராவா இருக்கும். அக்கா - தம்பிக்கு இடையிலான அழகான உறவைப் படத்தில் காட்சிப்படுத்தியிருக்கோம். இது மேட்டுப்பாளையம் பகுதியில் நடக்குற மாதிரியான கதைக்களம்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜீத்து ஜோசப்
ஜீத்து ஜோசப்

‘`ஜோதிகா, கார்த்தி தாண்டி சத்யராஜ், செளகார் ஜானகின்னு பெரிய ஸ்டார் காஸ்ட்டிங் படத்தில் இருக்கே?’’

``நடிகர்களைத் தேர்வு பண்றதுல கார்த்தி எனக்கு ரொம்ப உதவியா இருந்தார். அவர் நிறைய சாய்ஸஸ் கொடுத்தார். சத்யராஜ் சாரோட ரசிகன் நான். காலேஜ் படிச்சப்போ அவரோட படங்கள் பார்த்து விசில் அடிச்சிருக்கேன். அவர்கூட இந்தப் படத்துல வேலை பார்த்தது எனக்குக் கனவு மாதிரி இருந்தது. செளகார் ஜானகி அம்மா ரொம்ப சீனியர். இந்தப் படத்துக்காக அவங்களுடைய கால்ஷீட் ஒன்பது நாள்கள்தான். அந்த நாள்களில் எங்க எல்லோருக்கும் ஒரு அம்மா மாதிரி செட்ல இருந்தாங்க. அவங்க கையால சமைச்சுக் கொடுத்தாங்க. இசை கோவிந்த் வசந்தா. திறமையான இளைஞர். படத்தில் மூணு பாட்டு இருக்கு. மூணுமே வித்தியாசமா இருக்கும். முக்கியமா படத்தோட பின்னணி இசை ரொம்ப நல்லா வந்திருக்கு. 67 நாள்கள் ஷூட்டிங் நடத்தினோம். ஷூட்டிங் முடியுற வரைக்கும் எல்லோரும் ரொம்ப ஜாலியா ஃபேமிலி மாதிரி என்ஜாய் பண்ணி வொர்க் பண்ணினோம். ஒரு நாள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சூர்யா வந்தார். ஸ்பாட்டையே கலகலப்பாக்கிட்டார்.’’

சத்யராஜ், ஜோதிகா, கார்த்தி, செளகார் ஜானகி
சத்யராஜ், ஜோதிகா, கார்த்தி, செளகார் ஜானகி

‘`இந்தியிலும் ஒரு படம் பண்ணிட்டிருக்கீங்களே?’’

‘` ‘த்ரிஷ்யம்’ படம் முடிச்சவுடனே ‘தி பாடி’ படத்தோட வாய்ப்பு என்னைத் தேடி வந்தது. இது ஸ்பானிஷ் படத்தோட ரீ-மேக். முதலில் இந்தப் படத்தை மலையாளத்தில் பண்ணத்தான் திட்டமிட்டிருந்தோம். ஆனா, சில காரணங்களால அது நடக்கல. உடனே இந்தியில் பண்ணலாம்னு முடிவு பண்ணி ரிஷிகபூர், இம்ரான் ஹஷ்மின்னு பெரிய ஸ்டார்களோடு ஷூட்டிங் ஆரம்பிச்சிட்டோம். எல்லாரும் நூறு சதவிகிதம் அவங்களுடைய உழைப்பைக் கொடுத்தாங்க. அதனால, ஸ்பாட்ல எனக்குக் கொஞ்சம்கூட டென்ஷனே இல்ல. அந்த அளவுக்கு எனக்கான சுதந்திரம் அங்கே கிடைச்சது. ஒரு வருஷத்துக்கு முன்னாடியே இந்தப் படம் வந்திருக்கணும். ஷூட்டிங் ஆரம்பிச்ச நேரத்துல ரிஷி கபூர் சாருக்கு உடம்பு சரியில்லாமப்போயிடுச்சு. ட்ரீட்மென்ட்டுக்காக நியூயார்க் போயிட்டு வந்தார். அவருக்காகக் காத்திருந்து ஷூட்டிங் முடிச்சோம். ‘தி பாடி’ த்ரில்லர் படம்.’’

‘`தமிழ், மலையாளம், இந்தின்னு மூணு மொழிகளிலும் இயக்குநரா இருந்திருக்கீங்க. ஒரு கிரியேட்டரா உங்களுக்கு எந்த மொழியில் அதிக சுதந்திரம் கிடைக்குறதா நினைக்கிறீங்க?’’

‘`எனக்கான சுதந்திரம் மூணு மொழிகளிலும் கிடைச்சது. நடிக்குற நடிகர்களும், படத்தைப் பார்க்கிற ரசிகர்களும்தான் வேற வேற. மலையாள சினிமாவைவிட தமிழ், இந்தி சினிமாக்களின் மார்க்கெட் ஏரியா ரொம்பவும் பெருசு. அதனால், மலையாளத்தில் ஃபர்ஸ்ட் லுக், டிரெய்லர் மாதிரியான விஷயங்கள் என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும். ஆனா, இங்க அந்த விஷயங்களெல்லாம் தயாரிப்பு நிறுவனங்களின் கையில் இருக்கு.’’

தம்பி
தம்பி

‘`ரிஷி கபூர், கமல், மோகன்லால்னு சினிமாவின் சூப்பர் சீனியர்களை இயக்கியிருக்கீங்க... அவர்களுடனான அனுபவம் சொல்லுங்க?’’

``தொழில் நேர்த்தின்னா என்னன்னு கண் முன்னாடி காண்பிச்சவங்க இவங்க. அஞ்சு மணிக்கு ஷூட்டிங் டைம்னு சொல்லிட்டா நமக்கு முன்னாடி அவங்க ஸ்பாட்டில் இருப்பாங்க. இன்னைக்கு இருக்குற நடிகர்கள்கூட வேலை பாக்குறப்போ இந்தக் காலதாமதம்தான் முக்கியமான விஷயமா இருக்கு. மலையாளத்தில் மோகன்லால் கூட வேலை பார்த்தப்போ எனக்கு எந்த மாதிரியான உணர்வு இருந்ததோ அதே உணர்வைத்தான் ‘பாபநாசம்’ பண்ணுனப்போ கமல்ஹாசனும் கொடுத்தார். ஷூட்டிங் நடக்கும்போது கேரவனுக்குள்ள போய் அவர் ரெஸ்ட் எடுத்து நான் பார்த்ததேயில்லை. அந்த வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து சிரிச்சிக்கிட்டு பேசிட்டிருப்பார். நிறைய அனுபவங்கள் சொல்வார். பாட்டெல்லாம் பாடியிருக்கார். ஒரு அண்ணன் மாதிரி நடந்துக்கிட்டார். ‘பாபநாசம்’ படத்துக்கு அடுத்து நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் பண்ண ஆர்வமா இருந்தோம். ஆனா, அது அப்போ நடக்காமப்போயிருச்சு. காலம் நடத்தி வைக்கும்னு நம்புறேன்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism