லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
Published:Updated:

உங்களை நம்புங்கள் உலகமும் நம்பும்! - மதுமிதா

மதுமிதா
பிரீமியம் ஸ்டோரி
News
மதுமிதா

திரைக்குப் பின்னே...

கோமாவில் இருந்து மீண்டெழுந்து வீட்டைவிட்டு வெளியேறும் 80 வயது முதியவருக்கும் ஆதரவற்ற சிறுவனுக்குமான உறவைச் சொல்லும் படம் கே.டி. `ஆஹா... அற்புதம்' என்று சினிமா வட்டாரங்களால் பாராட்டப்பட்டது. 2019-ம் ஆண்டின் வெற்றி இயக்குநர் மதுமிதாவுடன் சிறு உரையாடல்...

உங்களை நம்புங்கள் உலகமும் நம்பும்! - மதுமிதா

கே.டி பட வரவேற்பை எதிர்பார்த்தீங்களா?

சர்வதேச திரைப்பட விழாக்கள்ல திரையிடப் பட்ட `கே.டி (எ) கருப்புதுரை’ படம், சினிமா விமர்சகர்கள், பல்வேறு மக்களால பாராட்டப்பட்டுச்சு. அதுதான் எங்களுக்குக் கிடைச்ச பெரிய பலம். ஆனாலும், தமிழ்நாட்டுல படம் வெளியானப்ப திரையரங்குக்குப்போய் பார்க்கிற தைரியம் எனக்கு வரலை. என் உதவியாளர்கள், படக் குழுவினர்தான் என்னை வற்புறுத்தி அழைச்சுட்டுப் போனாங்க.

ஆச்சர்யம் என்னன்னா... ஒருபெரிய கதாநாயகனோட படத்துக்கு முதல் நாள் என்ன மாதிரி ஒரு வரவேற்பு இருக்குமோ அதே அளவுக்கு கைதட்டி, விசில் அடிச்சு `கே.டி' படத்தைப் பார்த்தாங்க. அப்போதான் எனக்கு ஒரு பெரிய நம்பிக்கை வந்தது. அன்னிக்கு முழுசும் நான் ஆனந்தக்கண்ணீர் விடாத குறைதான்!

அடுத்த திட்டம்?

`கே.டி’ படத்தை மும்பையில இருக்கிற ஒரு தயாரிப்பு நிறுவனம் பார்த்துட்டு, அவங்களுக்கு இந்திப் படம் பண்ணச் சொல்லியிருக்காங்க. ஆக்‌ஷன் த்ரில்லர் கதை சொல்லி, அவங்களுக்கும் அந்தக் கதை ரொம்பவே பிடிச்சுப்போச்சு. சீக்கிரம் ஷூட்டிங் ஆரம்பிச்சிடுவோம்.

மதுமிதா
மதுமிதா

எதிர்கால பெண் இயக்குநர்களுக்குச் சில வார்த்தைகள்?

எல்லா பெண் இயக்குநர்களுக்கும், ஏன் எல்லா இயக்குநர்களுக்கும் ஒரே வகை யான சவால்கள் வர்றதில்லை. ஆனா, ஒரு பொதுவான, மிகவும் தேவையான அறிவுரை என்னன்னா, உங்களைப் பற்றி முடிவெடுக்க வேற யாரையும் விடாதீங்க. உங்களுக்கு என்ன வரும், வராதுன்னு நீங்க தான் கண்டுபிடிக்கணும், தீர்மானிக்கணும். வேற யாருக்கும் அந்த உரிமையைக் கொடுத்துடாதீங்க.

ஒரே நேரத்துல பல வேலைகளைச் செய்ற மல்டி டாஸ்க்கிங் திறமை பெண் களுக்கு உண்டுங்கிறதை முதல்ல நீங்க நம்பணும். அப்போதான் உலகம் அதை நம்பும்!