Published:Updated:

ஆக்‌ஷன் ஆபரேஷன்... காமெடி ட்ரீட்மென்ட்

 சிவகார்த்திகேயன்
பிரீமியம் ஸ்டோரி
சிவகார்த்திகேயன்

இதுதான் 'டாக்டர்' ஃபார்முலா

ஆக்‌ஷன் ஆபரேஷன்... காமெடி ட்ரீட்மென்ட்

இதுதான் 'டாக்டர்' ஃபார்முலா

Published:Updated:
 சிவகார்த்திகேயன்
பிரீமியம் ஸ்டோரி
சிவகார்த்திகேயன்
‘ ‘டாக்டர்’ படத்தோட ஃபர்ஸ்ட் லுக்கைப் பார்த்துட்டு, ‘இது மெடிக்கல் க்ரைம் படமா’ன்னு கேட்குறாங்க. சிவகார்த்திகேயன் டாக்டர்.

ஆனால், அந்த டாக்டருக்கு வேற ஒரு வேலை கொடுத்திருக்கோம். ஆக்‌ஷன் - காமெடிப் படம்தான். ஆனால், லாஜிக் மீறுன காமெடிப் படமா இருக்காது...’’ - டிஸ்க்ளெய்மருடனேயே பேச ஆரம்பிக்கிறார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார்.

‘`நீங்களும் சிவகார்த்திகேயனும் டிவி சேனலில் வேலை பார்த்ததில் இருந்தே நல்ல பழக்கம்... சேர்ந்து படம் பண்ணலாம்னு எப்போ முடிவு பண்ணுனீங்க?’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘’சிவாவுக்கு என்கூட படம் பண்ணணும்னு ஐடியா வந்தப்போ, எனக்கு வராம இருந்திருக்கும். எனக்கு வந்தப்போ, அவருக்கு வராம இருந்திருக்கும். பல நாள்கள் இப்படியே போச்சு. ‘கோலமாவு கோகிலா’வுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சதுக்கு அப்புறம், ‘சரி... இதுதான் நமக்கான நேரம்’ன்னு முடிவு பண்ணிட்டோம். அப்பகூட ‘என்ன கதை’ன்னுலாம் சிவா கேட்கவே இல்லை. ‘சேர்ந்து படம் பண்ணுறோம்’னு மட்டும்தான் சொன்னார். ரெண்டு, மூணு லைன் வொர்க் அவுட் பண்ணி சொன்னேன். ‘எனக்கு எல்லாமே பிடிச்சிருக்கு. நீங்களே ஏதாவது ஒரு லைனை ஓகே பண்ணுங்க’ன்னு என்கிட்டயே முடிவை விட்டுட்டார். சிவா ஒரு என்டர்டெய்னிங் ஆக்டர். அவருக்கு ஏத்த மாதிரி கமர்ஷியலா, நல்ல தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்குற மாதிரி ’டாக்டர்’ ஒன்லைனை ஸ்கிரிப்ட்டா எழுத ஆரம்பிச்சேன்.’’

 சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

‘` `ஹீரோ’, `வேலைக்காரன்’ மாதிரி சமூக அக்கறைக் கருத்துகள் பேசிய சிவகார்த்திகேயன் படங்களைவிட ஜாலியான சி.கா படங்கள் அதிகம் ரசிகர்களைக் கவருது. ‘டாக்டர்’ படத்தில் சமூக அக்கறைக் கருத்துகள் எந்தளவுக்கு இருக்கும்?’’

“சமூக அக்கறையுள்ள படங்கள் எடுக்கணும்னா, சமூகத்துக்கு எது தேவை, தேவையில்லைன்னு முதலில் எனக்குத் தெரியணும். அதனால, எனக்கு அந்த மாதிரியான படங்கள் எடுக்கிற ஐடியா இல்லை. என்னைப் பொறுத்தவரைக்கும் தமிழ் சினிமாக்கள் பெரும்பாலும் வணிகமாத்தான் பார்க்கப்படுது. அதுக்கு ஏற்றமாதிரியான கமர்ஷியல் படங்கள்தான் வேண்டும். காமெடியை நம்பித்தான் ஆடியன்ஸ் படம் பார்க்க வர்றாங்க. அவங்ககிட்ட கருத்து சொல்லணும்கிற எண்ணம் எனக்கு வந்ததேயில்லை. அதுக்காக தரமே இல்லாமல் கமர்ஷியல் படம் பண்ணுறதுலயும் எனக்கு விருப்பம் இல்லை. `டாக்டர்’ ஒரு பொழுதுபோக்கான படமாகத்தான் இருக்கும். அதுக்குள்ள இது சரி, தப்புன்னு எதுவுமே சொல்லலை. படத்துல ஒரு சம்பவம் நடக்குது; அதுல அஞ்சாறு கேரக்டர்ஸ் மாட்டிக்கிறாங்க. அதுல இருந்து எப்படி வெளியில வர்றாங்கங்கிறதுதான் படம்.’’

 சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘`நெல்சன் படம்னா காமெடி அதிகம் எதிர்பார்ப்பாங்க. `டாக்டர்’ல எந்தெந்த காமெடியன்ஸ் கலக்கியிருக்காங்க?’’

``மொத்தம் ரெண்டு டீம் இருக்காங்க. முதல் பாதியில் நமக்கு நல்லாத் தெரிஞ்ச யோகி பாபு, ஆங்கர் அர்ச்சனா, இளவரசு சார், `கோலமாவு கோகிலா’ படத்துல நடிச்ச ரெடின், வைபவ்வோட அண்ணன் சுனில்னு நிறைய கேரக்டர்கள் இருப்பாங்க. ரெண்டாவது பாதியில கோவாவில் நடக்குற போர்ஷன் ஒண்ணு இருக்கு. அதுல சில புதுமுகங்கள் இருப்பாங்க. எப்படி `கோலமாவு கோகிலா’ ரெடின் கேரக்டர் புதுசா இருந்துச்சோ, அதே மாதிரி இந்தப் படத்துலேயும் சில கேரக்டர்கள் மனசுல நிக்கிற மாதிரி இருக்கும். காமெடியன்ஸ் மட்டும்தான் காமெடி பண்ணுவாங்கன்னு இல்லாமல், படத்துல இருக்கிற பல கேரக்டர்கள் காமெடி பண்ணுற மாதிரிதான் ஸ்கிரிப்ட் எழுதியிருக்கேன்.”

 சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

‘`அறிமுக ஹீரோயின்களோடு நடிக்க ஆரம்பித்து நயன்தாரா, சமந்தா எனப் பெரிய ஹீரோயின்களோடு நடிச்சவர் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தில் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமில்லாத ஹீரோயின் ஏன்?’’

‘`சிவாவைத் தவிர மத்த கேரக்டர்கள் ஆடியன்ஸுக்கு ஃப்ரெஷ்ஷா இருக்கணும் கிறதுதான் ஐடியா. அதனால, ஹீரோயின் கேரக்டர் புதுமுகமா இருந்தாலும் பரவாயில்லைன்னு தேடினோம். அப்படித்தான் பிரியங்கா மோகனின் போட்டோக்கள் பார்த்துட்டுப் பேசினோம். அப்போ அவங்க தெலுங்குல நானி படத்துல சரண்யா பொன்வண்ணன் மேடம்கூட நடிச்சிட்டு இருந்தாங்க. அவங்களுக்கு நாங்க பிரியங்காகிட்ட பேசுன விஷயம் தெரிஞ்சதும் எனக்கு கால் பண்ணி பிரியங்காவைப் பற்றி பாசிட்டிவ்வா நிறைய விஷயங்கள் சொன்னாங்க. பிரியங்கா தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். அதனால, இந்தப் படத்துக்கு சரியா இருப்பாங்கன்னு கமிட் பண்ணிட்டோம்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘`வினய்க்கு என்ன ரோல்; அவரைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்..?’’

``வில்லன் ரோலுக்கு நல்ல உயரமான நடிகரா இருந்தால் நல்லா இருக்கும்னு தோணுச்சு. வினய் சாரும் `துப்பறிவாளன்’ படத்துல வில்லன் ரோலில் நல்லா நடிச்சிருப்பார். அதனால அவர்கிட்ட பேசலாம்னு முடிவு பண்ணினோம். அவர்கிட்ட பேசும்போது செம ஜாலியா பேசினார். பொதுவாவே எனக்கு இப்படிப்பட்ட ஆள்களோடு வொர்க் பண்றது பிடிக்கும். அப்போதான் நாம என்ன சொல்ல நினைக்கிறோமோ, அவர் என்ன சொல்ல நினைக்கிறாரோ எல்லாத்தையும் வெளிப்படையா பேசிக்க முடியும். வேலை பார்க்குறதுக்கும் ஈஸியா இருக்கும்.’’

 சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

‘`இசை அனிருத்... உங்கள் நண்பன். பாடல்களில் என்ன ஸ்பெஷல்?’’

``அனிருத்தும் நானும் அறிமுகமானப்போ இயக்குநர் - இசையமைப்பாளர்னு மீட் பண்ணிக்கலை. வேலை விஷயமா இல்லாமல் நட்பு ரீதியாத்தான் நாங்க மீட் பண்ணிக்கிட்டோம். நான் ‘கோலமாவு கோகிலா’ படம் பண்ணும் போதுதான், இயக்குநர் - இசையமைப்பாளர்னு வேலை பார்க்க ஆரம்பிச்சோம். அப்பவும் அவரோட ஸ்டுடியோவுக்கு பத்து முறை போனால், அதில் ஒரு முறைதான் வேலை பற்றிப் பேசுவோம். மத்த நேரமெல்லாம் அவர் என்னைக் கலாய்ப்பார்; நான் அவரைக் கலாய்ப்பேன். `டாக்டர்’ படத்துக்கும் ஃபைனல் அவுட்னு இன்னும் எந்தப் பாட்டும் ரெடியாகலை. நாலு பாட்டு பண்ணணும்னு ப்ளான் பண்ணி வெச்சிருக்கோம். அதுக்கான வேலைகளை அனிருத் பார்த்துப்பார்.’’

ஆக்‌ஷன் ஆபரேஷன்... காமெடி ட்ரீட்மென்ட்

‘` ‘கோலமாவு கோகிலா’ போதைப்பொருள் விற்பனையை நியாயப்படுத்துவது அறமில்லை, சென்சிடிவ் விஷயமான பாலியல் பலாத்காரத்தை காமெடியா மாற்றியது நியாயமில்லை’ இப்படியெல்லாம் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு உங்கள் பதில் என்ன?’’

ஆக்‌ஷன் ஆபரேஷன்... காமெடி ட்ரீட்மென்ட்

‘`என்னைப் பொறுத்தவரைக்கும் ‘கோலமாவு கோகிலா’ ஒரு வுமன் எம்பவர்மென்ட் மூவிதான். சொகுசு வாழ்க்கைக்காக போதைப் பொருள் கடத்துனதா நான் படத்தில் காட்டியிருந்தால், அறமில்லைன்னு சொல்லலாம். ஆனால், தன் அம்மாவை கேன்சர் நோயிலிருந்து காப்பாற்றத்தான் அப்படிப் பண்ணுவாள். அதுவும் பல பேர்கிட்ட வேலை கேட்டு, கடன் கேட்டு யாரும் கொடுக்காதப்போதான், இந்த முடிவை எடுப்பாள். கேன்சருக்கான மருத்துவம் இலவசமா கிடைச்சிருந்தால், அவ அப்படிப் பண்ணியிருப்பாளா? அப்போ இங்க மருத்துவம் ஏழைகளுக்கு ஒரு மாதிரியாவும், இருக்கப்பட்டவங்களுக்கு இன்னொரு மாதிரியும் தான கிடைக்குது. அதே மாதிரி க்ளைமாக்ஸில் அந்தக் குடும்பம் முழுக்கவே கோலமாவு விக்கிற மாதிரி படத்தை முடிச்சிருப்பேன். இதையெல்லாம் தாண்டி, சினிமா ஒரு என்டர்டெயின்மென்ட் மீடியம். அதுல காமெடிக்காகச் சில விஷயங்கள் சேர்க்கிறதை சீரியஸா பார்க்கக்கூடாதுன்னு நினைக்கிறேன்.’’

‘`சிவாவைத் தொடர்ந்து வந்த தொலைக்காட்சி காமெடியன்ஸ் பெரிய அளவு ஹிட் ஆகல. ஒரு முன்னாள் டிவி நிகழ்ச்சி இயக்குநரா இதுக்கு உங்க பார்வையில் என்ன காரணம்?’’

``சிவா ஆங்கரா இருந்தப்போ டிவிக்கு சிவா ஓவர் க்வாலிஃபைடா இருந்தார். அவர் பண்ணுற காமெடியெல்லாம் சினிமா தரத்துக்கு இருந்துச்சு. அவரோட பாடி லாங்குவேஜ், மாடுலேஷன், ஸ்கிரிப்ட் நாலேஜ்னு பல விஷயங்கள் சிவாவுக்குக் கைகொடுத்துச்சு. அது இப்போ இருக்கிறவங்க கிட்ட மிஸ்ஸாகுதோன்னு தோணுது. சிவா ஆங்கர் பண்றதுக்கும், வேற ஒரு ஆங்கர் அதைப் பண்றதுக்கும் நிறைய வித்தியாசங்களைப் பார்ப்பேன். சிவா ஸ்டேஜ்ல நிக்கும்போது, யாருமே அவரைக் கேள்விக்கேட்டு கார்னர் பண்ண முடியாது. சாமர்த்தியமா பேசக்கூடிய ஆள். என் டிவி இயக்குநர் அனுபவத்தில் சிவா மாதிரி இன்னொருத்தரை நான் பார்த்ததேயில்லை. சந்தானம் ஃபேமஸ் ஆனதுக்கு அப்புறம் 10 வருஷம் கழிச்சுத்தான் சிவா ஃபேமஸ் ஆனார். அதே மாதிரி சிவாவுக்கு அப்புறம் இன்னொருத்தர் வர்றதுக்கும் அத்தனை வருஷங்கள் ஆகலாம். சிவாவை ரோல்மாடலா எடுத்துக்கிட்டு டிவியில் ஆங்கர் பண்ணி, சீரியல் பண்ணி ஃபேமஸ் ஆனவங்களும், டிவியை விட்டுட்டு சினிமாவுக்கு வந்துட்டாங்க. அப்படி வந்தவங்க யாரும் சிவா அளவுக்கு ஃபேமஸ் ஆகாமல், மறுபடியும் டிவிக்குப் போனதையும் நான் பார்த்தி ருக்கேன்; நீங்களும் பார்த்திருப் பீங்க. சினிமாவுக்கு ஒரு யுனிக்னஸ் தேவை. அது சிவாகிட்ட இருந்துச்சு. சிவா `அது இது எது’ நிகழ்ச்சி பண்ணிட்டு இருந்தப்பவே, மூணு படங்கள் நடிச்சிட்டார். ‘நீதான் சினிமா வுக்குப் போயிட்டீல; அப்புறம் ஏன் இங்க இருக்க’ன்னு யாராச்சும் கேட்டால், ‘சினிமா எப்போ க்ளிக் ஆகும்னு தெரியாது. அதுவரைக்கும் டிவிதான்’னு சொன்னார். இந்தப் பொறுமையும் நிறைய பேர்கிட்ட இல்லை.’’

ஆக்‌ஷன் ஆபரேஷன்... காமெடி ட்ரீட்மென்ட்

‘`வேட்டை மன்னன்’ படத்தை மீண்டும் ஆரம்பிக்கிற ஐடியா இருக்கா? ‘வேட்டை மன்னன்’ படத்துக்கு அப்புறம் உங்களுக்கும் சிம்புவுக்குமான நட்பு எப்படி இருக்கு?’’

‘`அந்தப் படத்தின் தயாரிப்பாளரோ, நடிகரோ அதை எடுக்கணும்னு நினைச்சாதான் மறுபடியும் டேக் ஆஃப் ஆகும். இயக்குநர் கையில் எதுவுமே இல்லை. இனி நானா போய் அதை டேக் ஆஃப் பண்ணுற வேலையைப் பார்க்க மாட்டேன். சிம்பு ‘ஜோடி நம்பர் 1’ நிகழ்ச்சியில நடுவரா இருக்கும்போது, நான்தான் ஷோ டைரக்டர். அப்போ நாங்க எப்படிப் பேசிக்கிட்டோமோ அப்படித்தான் இப்பவும் பேசிக்கிறோம். அவர் என்னைக் கிண்டல் பண்ண, நான் அவரைக் கிண்டல் பண்ணன்னு எங்க நட்பு ஜாலியா போயிட்டிருக்கு. இந்த லாக்டெளன்லகூட ரெண்டு முறை பேசிக்கிட்டோம். ‘வேட்டை மன்னன்’ படத்தோட டிராப் எங்க நட்பை எந்த வகையிலும் பாதிக்கலை.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism