Published:Updated:

சூர்யா தயாரிப்பாளர் ஆன ரகசியம்!

சூர்யா
பிரீமியம் ஸ்டோரி
சூர்யா

இந்தப் படத்துல வரும் ஒவ்வொரு சீனும் உண்மையாக நடந்ததுதான்

சூர்யா தயாரிப்பாளர் ஆன ரகசியம்!

இந்தப் படத்துல வரும் ஒவ்வொரு சீனும் உண்மையாக நடந்ததுதான்

Published:Updated:
சூர்யா
பிரீமியம் ஸ்டோரி
சூர்யா

“ ‘நான் ஆர்மில இருந்து வேலையை விட்டுட்டு வரும் போது என் கையில் 6000 ரூபாய்தான் இருந்துச்சு. அதை வெச்சுக்கிட்டு நான் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்போறேன்னு சொன்னப்போ எல்லாரும் சிரிச்சாங்க. ஆனால், அதை நான் செஞ்சு முடிச்சேன். யாரோட உதவியும் இல்லாமல், நம்ம கனவை நம்பி உழைச்சா அது நனவாகும்னு இன்றைய தலைமுறைக்குச் சொல்லுங்க’ன்னு ஜி.ஆர்.கோபிநாத் என்கிட்ட சொன்னார். அவர் சொன்னதை மனசுல வெச்சும், அவரோட வாழ்க்கையில இருந்து இன்ஸ்பயரான விஷயங்களை வெச்சும் `சூரரைப் போற்று’ படத்தை இயக்கியிருக்கேன்’’ - நம்பிக்கையோடு பேச ஆரம்பித்தார், இயக்குநர் சுதா கொங்கரா.

சூர்யா
சூர்யா

“என் முதல் படமான `துரோகி’ ரிலீஸாகுறதுக்கு முன்னாடியே `சூரரைப் போற்று’ படத்துக்கான தொடக்கம் எனக்குள்ள ஆரம்பமாகிடுச்சு. 2010-ல ஏர் டெக்கான் நிறுவனத்தின் தலைவரான ஜி.ஆர்.கோபிநாத்தின் பேட்டியைப் பார்த்தேன். அதைப் பார்த்ததில் இருந்தே இவரோட கதையைப் படமாகப் பண்ணணும்னு தோணுச்சு. `துரோகி’ ரிலீஸானதும் இதைப் பண்ணலாம்னு நினைச்சப்போ, ஒரு படம்தான் பண்ணியிருக்கோம். நம்மை நம்பி எப்படி ஒருத்தரோட வாழ்க்கையைப் படமாக்குறதுக்கு ரைட்ஸ் கொடுப்பார், இன்னொரு படம் பண்ணலாம்னு `இறுதிச்சுற்று’ படத்துக்கான வேலையை ஆரம்பிச்சுட்டேன். தமிழ் `இறுதிச்சுற்று’ ரிலீஸானதும் தெலுங்கு `இறுதிச்சுற்று’க்கான வேலையும் வந்துடுச்சு. அந்த சமயத்தில்தான் ஒரு நாள் சூர்யாவை மீட் பண்ணினேன். நானும் சூர்யாவும் ரொம்ப வருஷமாகவே நல்ல நண்பர்கள். ஒவ்வொரு வருட ரக்‌ஷாபந்தனுக்கும் அவருக்கு ராக்கி கட்ட, அவர் வீட்டுக்குப் போவேன். அப்படிப் போன வருஷம் போனப்போ, `என்ன படம் பண்ணிட்டு இருக்கே, எனக்கு ஏதாவது கதை இருந்தா சொல்லு’ன்னு சொன்னார். நான் ஏற்கெனவே அந்தப் பேட்டியைப் பார்த்ததுக்கு அப்புறம், அந்தக் கதை தொடர்பா பலபேரைச் சந்திச்சு, 44 பக்கத்துக்குச் சுருக்கமா எழுதியிருந்தேன். அதை அவர்கிட்ட கொடுத்து, ‘இன்னும் நான் முழுசா எழுதி முடிக்கலை. இதைப் படிச்சுட்டுச் சொல்லுங்க’ன்னு சொல்லிட்டு, தெலுங்குப் பட ஷூட்டிங் போயிட்டேன். சரியா ஒரு மாசம் கழிச்சு, சூர்யாகிட்ட இருந்து பாசிட்டிவா பதில் வந்துச்சு. நானும் வேற படத்தோட ஷூட்டிங்கில இருந்தேன். சூர்யாவும் வேற வேற படங்களில் நடிச்சிட்டிருந்தார். ரெண்டு பேரும் அவங்க, அவங்க படங்களை முடிச்சுட்டு வந்ததும், `சூரரைப் போற்று’ படத்தை ஸ்டார்ட் பண்ணிட்டோம்.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
சுதா கொங்கரா
சுதா கொங்கரா

சூர்யாவை வெச்சு பயோபிக் எடுக்கலாம்கிற முடிவை எப்போ எடுத்தீங்க?

``இது முழுக்க முழுக்க ஜி.ஆர்.கோபிநாத்தோட வாழ்க்கைக் கதைதான்னு சொல்ல முடியாது. படத்துல சூர்யாவோட பெயர், தோற்றம் எதுவுமே அவரை ஞாபகப்படுத்தாது. ஆனா இந்தப் படத்துல வரும் ஒவ்வொரு சீனும் உண்மையாக நடந்ததுதான். ஒவ்வொரு சீன் பார்க்கும் போதும் மக்களுக்குப் புதுசா இருக்கும். ஏன்னா, ஜி.ஆர்.கோபிநாத் என்னென்ன சாதனைகள் பண்ணியிருக்கார்னு பல பேருக்குத் தெரிய வாய்ப்பில்லை. அந்தக் கதையை முழுமையா எழுதி முடிச்சதும், எனக்கே கோபிநாத்தை நினைக்கும்போது பிரமிப்பா இருந்துச்சு. இதுல நாம எதை எடுக்குறது, எதை விடுறதுங்கிறதுலதான் எனக்கு சவால் இருந்தது.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சூர்யா
சூர்யா

சூர்யா எந்த அளவுக்கு மெனக்கெட்டார்?

‘`சூர்யாவோட டெடிகேஷன் பத்தி எல்லாருக்கும் தெரியும். `காப்பான்’ முடிச்சுட்டு இந்தப் படத்துக்காக நாங்க போட்டோஷூட் பண்ணும்போது, அவர் பயங்கர பாடி பில்டிங்கோட இருந்தார். `இந்தப் படத்துக்கு இவ்வளவு தேவையில்லை’ன்னு சொன்னதும், ஷூட்டிங் போறதுக்குள்ள உடம்பைக் குறைச்சுட்டு வந்துட்டார். சூர்யாகிட்ட என்ன வேணும்னு சொல்லிட்டா போதும். அதுக்கப்புறம் நம்ம வேலையை நாம பார்க்கப்போயிடலாம். முதலில் இந்தப் படத்தை வேற ஒரு தயாரிப்பாளர்கிட்ட சொல்லலாம்னுதான் இருந்தேன். ஆனால், சூர்யாவே இந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்தார். `ஏன் இவ்வளவு செலவு பண்றீங்க, இந்த சீனை இப்படி மாத்துங்க, இந்த இடத்தில் கமர்ஷியல் சேருங்கன்னு உன்னை யாரும் எதுவும் சொல்லக்கூடாது. அதனாலதான் நானே இந்தப் படத்தைத் தயாரிக்கிறேன்’னு சொன்னார். ஏன்னா, ஒரு ஃப்ளைட்டோட ஒரு நாள் வாடகை மட்டுமே 47 லட்சம் வந்துச்சு. அப்படி பல நாள்கள் ஃப்ளைட்டை வெச்சு ஷூட் பண்ணியிருக்கோம். தயங்காமச் செலவு பண்ணினார். சூர்யா மாதிரியான ஒரு மாஸ் ஹீரோவை வெச்சுப் படம் பண்ணும்போது, அவரோட மாஸுக்காகச் சில விஷயங்களைச் சேர்க்க வேண்டியதா இருக்கும். சூர்யா நினைச்சிருந்தா எனக்கு நாலு சண்டை, அஞ்சு பாட்டு வேணும்னு கேட்டிருக்கலாம். ஆனா என்கிட்ட அப்படி எதுவுமே கேட்கலை. லக்கியா, இந்த ஸ்கிரிப்டிலேயே மாஸ் இருந்துச்சு. கிராமத்திலிருந்து ஒரு இளைஞன் படிச்சு, முன்னேறி ஆர்மியில் சேர்வது, அதுல இருந்து வெளியில வந்து ஏர் லைன்ஸ் ஆரம்பிக்கிறது, பிசினஸில் பல விஷயங்களை பிரேக் பண்ணி, புது வழியை உருவாக்குறதுன்னு பல மாஸ் மொமென்ட்ஸ் ஸ்கிரிப்ட்ல இருந்ததனால, எனக்கு சிரமமே இல்லை.’’

சூர்யா
சூர்யா

மற்ற நடிகர்களைப் பற்றிச் சொல்லுங்க...

‘`மோகன் பாபு சார் ரொம்ப வருஷம் கழிச்சு தமிழ்ப்படத்துல நடிச்சிருக்கார். வசனங்கள் எல்லாத்தையும் தெலுங்குல எழுதி, பக்காவா மனப்பாடம் பண்ணிப்பார். `எனக்குத் தமிழ் சரியா வராது. அதனால டப்பிங் மட்டும் நான் பண்ண மாட்டேன்’னு சொன்னார். நான் விடவேயில்லை. `நீங்கதான் பேசணும்’னு அடம் பிடிச்சு, அவரையே டப்பிங் பேச வெச்சுட்டேன். அப்போ அவர், ‘சிவாஜிக்கு அப்புறம் நீதான் என்னைத் தமிழ்ல டப்பிங் பேச வெச்சிருக்க’ன்னு சொன்னார். இந்தப் படத்துல நடிச்ச அபர்ணா பாலமுரளி, கருணாஸ்னு மற்ற நடிகர்களும் பயங்கரமா சப்போர்ட் பண்ணுனாங்க. அவங்க சப்போர்ட் பண்ணுனதாலதான் 23 முக்கியமான கேரக்டர்களை வெச்சு 56 லொகேஷன்களில் 60 நாளில் ஷூட்டிங்கை முடிச்சிருக்கேன்.’’

அபர்ணா பாலமுரளி, சூர்யா
அபர்ணா பாலமுரளி, சூர்யா

ஜி.வி.பிரகாஷ்குமார் எப்படி இந்தப் படத்துக்குள்ள வந்தார்?

“மணிரத்னம் சார்கிட்ட நான் வேலை பார்த்த சமயத்தில் இருந்தே ஜி.வி.பிரகாஷை எனக்கு நல்லாத் தெரியும். கிட்டத்தட்ட 16 வருஷ நட்பு. எங்க செட்ல இருந்து யார் படம் பண்ணினாலும், `ஜிவியை இசையமைப் பாளரா கமிட் பண்ணுங்க’ன்னு சொல்லியிருக்கேன். என் முதல் படம் பண்ணும்போது, ஜிவியை கமிட் பண்ண முடியாமப்போச்சு. `இறுதிச்சுற்று’ பண்ணும்போது, ஜிவி செம பீக்ல இருந்தார். `எனக்கு சம்பளம்கூட வேணாம். இந்தச் சமயத்தில் உனக்கு நான் தேவை. நானே இந்தப் படம் பண்றேன்’னு என்கிட்ட கேட்டார். அந்தச் சமயத்தில் நான் அன்வாண்டேஜ் எடுக்க நினைக்கலை. `நானே ஒரு நாள் உன்கிட்ட வருவேன்’னு சொல்லிட்டேன். `சூரரைப் போற்று’ ஆரம்பிக்கப்போற சமயத்தில் `ஜிவிகிட்ட கேட்கலாம்’னு சொன்னப்போ, `அவர் நடிகரா பிஸியா இருக்கார். எப்படி மியூசிக் பண்ண நேரம் இருக்கும்’னு நிறைய பேர் சொன்னாங்க. இதை ஜிவிகிட்ட சொன்னப்போ, `இந்தப் படத்துக்கு நான் மியூசிக் பண்றதைவிட, நம்ம நட்பு எனக்கு ரொம்ப முக்கியம். நீ வேற ஆளை வெச்சுக்கூட பண்ணிக்கோ, எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனா, நான் சத்தியம் பண்ணித்தரேன், நீ ஷூட்டிங் போறதுக்குள்ளேயே எல்லாப் பாட்டையும் நான் முடிச்சுக்கொடுத்திருவேன்’னு சொன்னார்.அதுக்கப்புறம் என்னைவிட என் படத்தோட வேலைகளை முடிக்கிறதுல, ஜிவி தீவிரமா இருந்தார்.’’

நடிகர் மாதவன் இப்போ நம்பி நாராயணனின் பயோபிக்கை இயக்கியிருக்கார். அவருக்குள் ஒரு இயக்குநர் இருந்ததை எப்போதாவது நோட் பண்ணியிருக்கீங்களா?

``சத்தியமா இல்லை. அவன் அந்தப் படத்தை இயக்கப்போறான்னு தெரிஞ்சதும் எனக்கும், புஷ்கர் - காயத்ரிக்கும் செம ஷாக். ‘மச்சான், எப்படிடா பண்ணுவான்’னு பேசிட்டிருந்தோம். ஏன்னா, அவன் ஒரு குழந்தை மாதிரி.

சூர்யா
சூர்யா

ஒரு இடத்துல அஞ்சு நிமிஷத்துக்கு மேல அவனால உட்கார முடியாது. ஆனால், சீக்கிரமாகவே மூணு லாங்குவேஜோட ஷூட்டிங்கையும் முடிச்சிட்டான். படம் எப்படி வந்திருக்குன்னு பார்க்க செம ஆர்வமா இருக்கேன்.’’

ஆண் இயக்குநர்களை யாரும் ஆண் இயக்குநர்னு சொல்றதில்லை. ஆனால், சினிமாவில் இருக்கும் பெண் இயக்குநர்களை மட்டும் பிரித்துப் பார்ப்பதை எப்படிப் பார்க்குறீங்க. அது மாறணும்னா என்ன பண்ணணும்?

``ஒரு ஹீரோ ஆண் இயக்குநருக்கு எத்தனை நாள்கள் கால்ஷீட் கொடுப்பாரோ அதே அளவுக்குத்தான், எங்களுக்கும் கால்ஷீட் கொடுக்குறாங்க. ஒரு தயாரிப்பாளர் ஆண் இயக்குநருக்கு எத்தனை கோடி பட்ஜெட் கொடுப்பாரோ அதே அளவுக்குத்தான், எங்களுக்கும் கொடுக்குறாங்க. இங்கே எங்களுக்குன்னு எந்தச் சலுகையும் கொடுக்கிறதில்லை. அந்தச் சலுகைகள் எங்களுக்குத் தேவையும் இல்லை. அதனால, எல்லாரும் இயக்குநர்கள்தான். ஆண், பெண்ணுன்னு பிரிக்காதீங்க. அதிகமான பெண்கள் இயக்குநராகும்போதுதான், எங்களைப் பிரிச்சுப் பார்க்கிறது குறையும்னு நினைக்கிறேன். இந்த சிஸ்டத்தைப் பார்த்து பயந்துட்டு நிறைய பேர் உள்ள வர மாட்டேங்கிறாங்க. அவங்க எல்லாரும் சினிமாவுக்குள் வந்தால்தான், இந்த சிஸ்டத்தை உடைக்க முடியும்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism