Published:Updated:

“யூடியூபில் சினிமா கத்துக்கிட்டேன்!”

அருண்விஜய், ப்ரியா பவானி ஷங்கர்
பிரீமியம் ஸ்டோரி
அருண்விஜய், ப்ரியா பவானி ஷங்கர்

என்னோட பெட் புரொஜக்ட் ‘நாடக மேடை.’ ரொம்ப பர்சனலானதும்கூட. வழக்கமான படமா இல்லாம வேறொரு ஜானரில் இருக்கும்.

“யூடியூபில் சினிமா கத்துக்கிட்டேன்!”

என்னோட பெட் புரொஜக்ட் ‘நாடக மேடை.’ ரொம்ப பர்சனலானதும்கூட. வழக்கமான படமா இல்லாம வேறொரு ஜானரில் இருக்கும்.

Published:Updated:
அருண்விஜய், ப்ரியா பவானி ஷங்கர்
பிரீமியம் ஸ்டோரி
அருண்விஜய், ப்ரியா பவானி ஷங்கர்

‘‘ஒரு பூனை எலியைத் துரத்துக்கிட்டு இருக்குற மாதிரி ‘மாஃபியா’ படத்தோட கதைக்களம் இருக்கணும்னு நினைச்சேன். போன டிசம்பர்ல படத்தோட கதையை எழுத ஆரம்பிச்சேன். எப்பவுமே வேலை வேலைன்னு இருக்குற ஒருத்தரை மையமா வெச்சுதான் இந்தக் கதையை உருவாக்கியிருக்கேன். ‘தடம்’ படம் ரிலீஸானவுடனே அருண்விஜய்கிட்ட கதையைச் சொன்னேன். அவருக்கும் பிடிச்சிருந்தது’’ என்கிறார் ‘மாஃபியா’ படத்தின் இயக்குநர் கார்த்திக் நரேன். ‘துருவங்கள் பதினாறு’ படம் மூலம் கவனம் ஈர்த்தவர். இரண்டாவதாக இயக்கிய ‘நரகாசூரன்’ இன்னும் திரைக்கு வராத நிலையில் ‘மாஃபியா’ எனப் புதிய உற்சாகத்துடன் வந்து நிற்கிறார்.

அருண்விஜய்
அருண்விஜய்

``கண்டிப்பா டைட்டில் பத்திக் கேட்பீங்க. டைட்டில் எப்பவும் படத்தோட ஒரு கேரக்டரைப் பிரதிபலிக்குறதா இருக்கணும். இல்லைன்னா படம் எதைப் பத்திச் சொல்லப்போகுதுன்னு மறைமுகமாகச் சொல்றதா இருக்கணும். படத்தோட ஸ்கிரிப்ட் எழுதி முடிச்சிட்டு என்ன பேர் வைக்கலாம்னு யோசிச்சிட்டிருந்தப்போ ‘மாஃபியா’தான் எல்லாருடைய மனதிலும் வந்தது. படம் பார்த்துட்டு வெளியே வர்றப்போ இந்தப் பேரை ஏன் வெச்சோம்னு புரியும்.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“அருண்விஜய் தவிர வேறு யார்?’’

“அருண்விஜயை வில்லன் கேரக்டரில் ஆடியன்ஸ் ஏற்கெனவே பார்த்திருக்காங்க. அவருக்கு வில்லனா இருக்குற ஒருத்தர் இன்னும் பவர்ஃபுல்லா இருக்கணும்னு நினைச்சு பிரசன்னா சாரைக் கமிட் பண்ணினோம். டி.கே கேரக்டர்ல சர்வசாதாரணமா நடிச்சுக் கொடுத்திருக்கார் பிரசன்னா. ரொம்ப ஹோம்லியான லுக்குல அமைதியான பொண்ணா இதுவரைக்கும் ப்ரியா பவானி ஷங்கரைப் பார்த்திருப்பீங்க. ஆனா, இந்தப் படத்துல அவங்க லுக் வேற மாதிரி இருக்கும். அவங்களுக்குத் தனியான ஆக்‌ஷன் சீக்வென்ஸ் இருக்கு. சத்யாங்கிற கேரக்டர்ல ரொம்ப பவர்ஃபுல் பொண்ணா இருப்பாங்க.’’

அருண்விஜய், கார்த்திக் நரேன், ப்ரியா பவானி ஷங்கர்,  பிரசன்னா
அருண்விஜய், கார்த்திக் நரேன், ப்ரியா பவானி ஷங்கர், பிரசன்னா

‘`உங்கள் படத்தில் பாடல்களே இருக்காதே?’’

‘`ஆமாம், முந்தைய ரெண்டு படத்துக்கும் பாட்டு வைக்க வேண்டிய சூழல் வரலை. ஒரு கதைக்குத் தேவையில்லாத விஷயத்தைப் பண்ணினா அது திணிக்கிற மாதிரி இருக்கும். ஆனால், இந்தப் படத்துல கதையோட போக்குல போற மாதிரியான பாடல்கள் தேவைப்பட்டது. அதனால மூணு பாட்டு வெச்சிருக்கோம். ‘துருவங்கள் பதினாறு’ படத்துக்கு இசையமைத்த ஜேக்ஸ் பிஜாய் இந்தப் படத்துக்கு இசையமைச்சிருக்கார்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அருண்விஜய்
அருண்விஜய்

‘`ஜீரோ பட்ஜெட் யூடியூப் சேனல் தொடங்கி, பாதியிலேயே விட்டுட்டீங்களே?’’

“இயக்குநர் ஆனதுக்குப் பிறகுதான் அதை ஆரம்பிச்சேன். அதுக்கப்புறம் மத்த படங்களை இயக்குற வேலைகள் இருந்ததனால பாதியிலேயே விட வேண்டியதாகிருச்சு. குறும்பட இயக்குநரா இருந்துதான் சினிமாவுக்குள்ளே வந்தேன். என்னோட ஆரம்பக் காலத்துல எனக்கு சரியான முறையில் வழிகாட்ட யாரும் கிடைக்கல. அந்தச் சமயத்தில் யூடியூப் பிலிம் மேக்கிங் பார்த்து நானே கத்துக்கிட்டேன். அதனால சினிமாவுக்கு வர்ற இளைஞர்களுக்குக் கொஞ்சம் பயனுள்ளதா இருக்கணும்னு என்னோட அனுபவத்தை இதில் சொல்லியிருந்தேன். இனிமே நேரம் கிடைக்குறப்போ திரும்பவும் இந்த வேலையைச் செய்யணும்னு இருக்கேன்.’’

‘` ‘மாஃபியா’க்கு முன்னாடியே ‘நாடக மேடை’ பட அறிவிப்பு வந்ததே?’’

‘`என்னோட பெட் புரொஜக்ட் ‘நாடக மேடை.’ ரொம்ப பர்சனலானதும்கூட. வழக்கமான படமா இல்லாம வேறொரு ஜானரில் இருக்கும். இந்தப் படத்துக்கான சரியான நடிகர், நடிகைகள் கிடைக்கணும். தயாரிப்பாளர் வரணும். இதெல்லாம் சரியா நடக்க வெயிட் பண்ணிட்டிருக்கேன். நிச்சயம் எல்லாம் நல்லதா நடக்கும்.’’

அருண்விஜய், ப்ரியா பவானி ஷங்கர்
அருண்விஜய், ப்ரியா பவானி ஷங்கர்

‘` ‘நரகாசூரன்’ படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் கெளதம் மேனன்கூட பேசிட்டிருக்கீங்களா?’’

‘`எங்களுக்குள்ள குட் டேர்ம்ஸ், பேட் டேர்ம்ஸ் ரெண்டுமே இல்லை. பேசிக்கிட்டுதான் இருக்கோம். அவருடைய படங்களும் ரிலீஸாகாமல் சிக்கலில் இருக்கு. அவரோட படங்களும் ரிலீஸ் ஆகணும். ‘நரகாசூரன்’ படமும் ரிலீஸ் ஆகணும். எல்லாத்துக்கும் ஒரு தீர்வு வரும்னு நம்புறோம்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism