Published:Updated:

``ரஜினி நடந்து போன வழியில் இப்போ தனுஷ் போயிட்டிருக்கார்!" - தாணுவின் பார்வை

எந்தெந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள் சம்பளம் தரலையோ அவங்க படங்களையும் தனுஷ் முடிச்சுக்கொடுத்திருக்கார்.

dhanush
dhanush

தனுஷ் - வெற்றிமாறன் - ஜி.வி.பிரகாஷ்குமார் கூட்டணியில் புதிய படத்தை நிகழ்த்திக் காட்டிய பெருமிதத்தில் இருக்கிறார், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. 'அசுரன்' படத்தின் ரிலீஸ் வேலைகளில் அசுர வேகத்தில்இயங்கிக்கொண்டிருந்தவரை, கொஞ்சம் கூலாக அமரவைத்துப் பேசினோம். விரிவான பேட்டிக்கு க்ளிக் செய்க... http://bit.ly/2pAWjHL

"ஒரு தயாரிப்பாளரா தனுஷைப் பற்றிச் சொல்லுங்க?'

"பயங்கர டைட் வொர்க்லதான் படத்தை எடுத்தோம். அதற்கெல்லாம் ஒத்துழைச்சு, தன்னைத்தானே வருத்தி தன்னுடைய முழு உழைப்பைக் கொடுத்திருக்கார் தனுஷ். இதற்கெல்லாம் மேல 36 வயதுடைய ஹீரோ, 48 வயதுடைய ஒரு கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டதே பெரிய விஷயம். அதிலும் 20 வயதுடைய ஒரு பையனுக்கும், 16 வயதுடைய ஒரு பையனுக்கும் அப்பாவா நடிச்சிருக்கார். இந்தப் படம் பார்க்கும் போது எந்த இடத்திலும் தனுஷ், தனுஷா தெரிய மாட்டார்னு உறுதியாச் சொல்வேன்.''

எந்தெந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள் சம்பளம் தரலையோ அவங்க படங்களையும் தனுஷ் முடிச்சுக்கொடுத்திருக்கார்.

"ரஜினியை வைத்தும் படம் தயாரிச்சிருக்கீங்க; அவரின் மருமகன் தனுஷை வைத்தும் படம் தயாரிச்சி ருக்கீங்க. இரண்டு பேர்கிட்டேயும் ஒற்றுமை ஏதாவது இருக்கா..?''

"இரண்டு பேரும் ஒப்பிட முடியாத அளவில் இருக்காங்கன்னு எனக்குத் தோணுது. ரஜினி சார் நடந்து போன வழியில் இப்போ தனுஷ் போயிட்டிருக்கார். ஏன்னா, அவருடைய செயல்பாடுகளைப் பார்க்கும்போது எனக்கு அப்படித்தான் தோணுது.''

" 'அசுரன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், 'பல தயாரிப்பாளர்கள் எனக்கு சம்பளம் தரலை'ன்னு தனுஷ் சொன்னது சர்ச்சை ஆச்சு; அதைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க..?''

"எந்தெந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள் சம்பளம் தரலையோ அவங்க படங்களையும் தனுஷ் முடிச்சுக்கொடுத்திருக்கார். சம்பளத்தைக் காரணமா காட்டி அந்தப் படங்களைக் கிடப்புல போட்டு வைக்கலை. அதே மாதிரி அவர் நடிச்ச ஒரு படத்தின் ரிலீஸ் சமயத்தில், அந்தத் தயாரிப்பாளருக்கு இருந்த 9 கோடி கடனை தனுஷே ஏத்துக்கிட்டு, படத்தை ரிலீஸ் செய்ய வெச்சார். இப்போ சமீபமா அவரோட ஒரு படத்துக்கு பயங்கரமான சிக்கல்கள் வந்துச்சு. அதையெல்லாம் லண்டன் போறதுக்கு முன்னாடியே முடிச்சுக்கொடுத்துட்டுத்தான் கிளம்பினார். தனுஷோட இந்தக் குணத்தைப் பார்க்காமல், அவர் பேசியதை சர்ச்சையாக்குறாங்க.''

அசுரன்
அசுரன்

> "ஒரு படத்தில் நடிச்ச ஹீரோவுக்கு சம்பளம் வரலைன்னு அவர் மேடையில் சொல்லியதை, தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவராக எப்படிப் பார்க்கிறீங்க..?''

> " 'அசுர'னின் ஆரம்பப்புள்ளி எது?''

> " 'அசுரன்' எப்படி வந்திருக்கு?''

> "தாணு - தனுஷ் காம்போவின் மற்ற படங்கள் எந்த நிலையில் இருக்கு?''

- இந்தக் கேள்விகளுக்கு தாணு அளித்த பதில்கள் அடங்கிய முழுமையான பேட்டியை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > "தனுஷ், தனுஷா தெரியமாட்டார்!" https://cinema.vikatan.com/tamil-cinema/exclusive-interview-with-dhanush

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் சிறப்புக் கட்டுரைகள்! > ரூ.200 மதிப்பிலான் ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2mjxazv |