‘இயற்கை’ படத்துக்குப் பிறகு தமிழுக்கு டாடா சொல்லி விட்டு கர்நாடகா விலேயே செட்டில் ஆகிவிட்டவர் குட்டி ராதிகா. கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியைத் திருமணம் செய்துகொண்டு திரைத்துறையிலிருந்தே விலகினார். இப்போது மீண்டும் சினிமாவிற்குத் திரும்பியிருக்கிறார்.

“ ‘இயற்கை’ படத்துக்கு நல்ல வரவேற்பும் விருதுகளும் கிடைத்தன. இருந்தும் ஏன் தமிழ்ப்படங்களிலிருந்து விலகினீர்கள்?”

“கன்னட சினிமாவில் நுழையும்போது எனக்கு வயசு 14. சப்போர்ட் பண்ண யாருமே இல்லை. சினிமாவில் என்னமாதிரியான கதைகளைத் தேர்ந்தெடுக்கணும்னு என் குடும்பத்துக்கும் தெரியாது, எனக்கும் சின்ன வயசு. கதைகூட கேட்காம எல்லாப் படத்துலயும் நடிப்பேன். தமிழ் சினிமாவுல ‘இயற்கை’ திரைப்படத்துல நடிக்கும்போது 15 வயசுதான். முதல் படமே தேசியவிருது வாங்கினது ரொம்ப சந்தோஷமா இருந்தது. ‘இயற்கை’ படத்தோட படப்பிடிப்புலதான் தமிழையே கத்துக்கிட்டேன். ஆனா அந்தச் சமயத்துல எனக்குப் படங்கள்ல நடிக்கிறது சம்பந்தமா கால்ஷீட் கொடுக்கறதுக்கும், கோலிவுட்டில் வழிகாட்டவும் யாருமே இல்லை. உண்மையைச் சொல்லணும்னா எனக்குத் தமிழ்ல நல்ல காட்ஃபாதர் கிடைச்சிருந்தா கோலிவுட்டிலேயே செட்டில் ஆகிருப்பேன்.

“நடுவுலகூட சில ஆண்டுகள் கன்னட சினிமாவிலிருந்தும் காணாமல்போய்ட்டீங்களே?”

“கன்னட சினிமாவுல காலையில ஒரு படத்தோட ஷூட்டிங், சாயங்காலம் இன்னொரு பட ஷூட்டிங்குனு பயங்கர பிஸியாக இருந்தேன். பொதுவாக சினிமாவில் நடிக்க எல்லாப் பொண்ணுங்களும் 18 வயசுலதான் வருவாங்க, நான் 14 வயசுல நடிக்க ஆரம்பிச்சு 18 வயசுலேயே நிறுத்திட்டேன். அதன்பிறகு 26 வயசு இருக்கும் போது ஒரு படத்தைத் தயாரிச்சேன். அதிலே ரம்யா நடிச்சுக்கிட்டிருந்தாங்க. ஒருமுறை நானும், ரம்யாவும் பெங்களூரு எம்.ஜி ரோட்டுல ஷாப்பிங் செய்யப் போனோம். அப்போ என்னைப் பார்த்த மக்கள் ‘ராதிகா, நீங்க நல்ல நல்ல படங்கள்ல நடிச்சிருக்கீங்க. இப்போகூட அழகாத்தானே இருக்கீங்க, ஏன் மறுபடியும் நடிக்கக்கூடாது’ன்னு படபடன்னு கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு ஒரு மாதிரியா போயிடுச்சு அதுக்கப்புறம் யோசிச்சுப் பார்த்தேன். அதன்பிறகே கன்னடப் படங்கள்ல 26 வயசுல மீண்டும் ரீ-என்ட்ரியாகி நடிக்க ஆரம்பித்தேன். அதுக்குப் பிறகு குடும்பம் குழந்தைன்னு பொறுப்புகள் அதிகம் ஆயிடுச்சு அதனால மறுபடியும் ஒரு பிரேக் விழுந்திடுச்சு.”

“இப்போது என்னென்ன படங்களில் நடிக்கிறீர்கள்?”

“என்னோட தயாரிப்பில் ‘பைரவா தேவி’ன்னு ஒரு படம். இதுவரை எனக்குத் தெரிந்து நடிகைகள் அகோரி வேஷத்தில் நடிச்சதில்லைன்னு நினைக்கிறேன். முதன்முறையா பெண் அகோரியாக ‘பைரவா தேவி’ படத்துல நடிச்சிருக்கேன். இந்தப் படத்துக்காக உண்மையான சுடுகாட்டில் நடிச்சதை நினைச்சாலே திகிலா இருக்கு! படத்தோட கிராபிக்ஸ் வேலைகள் சென்னையில்தான் நடந்துகிட்டிருக்கு. அர்ஜுனுடன் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழியில் தயாராகும் ஒரு படத்துல நடிச்சிக்கிட்டிருக்கேன். அப்புறம் நேரடி கன்னடப் படங்கள் இரண்டுன்னு இப்போதைக்கு நாலுபடத்தில் நடிச்சுக்கிட்டிருக்கேன்.”

“தமிழ்ப் படங்களைப் பார்ப்பதுண்டா... தமிழில் பிடித்த நடிகை?”

“ரஜினி சார் நடித்த ‘பேட்ட’ படத்தையும், அஜித் சார் நடிச்ச ‘விஸ்வாசம்’ படத்தையும் ரொம்ப ரசிச்சுப் பார்த்தேன். தமிழ் நடிகைகளில் நயன்தாரா நடித்த படங்களைத் தொடர்ந்து பார்த்திடுவேன். ரொம்பப் பிடிக்கும். கன்னடத்தில் நயன்தாரா நடிச்ச படங்களை அடுத்தடுத்து ரீ-மேக் செய்யப் போறாங்க. ராஜா ராணி, டோரா, கோலமாவு கோகிலா, ஐரான்னு அடுத்தடுத்து நாலுபடத்துல நயன் நடிச்ச கேரக்டர்கள்ல நடிக்கப்போறேன்.”

“உங்கள் மகள் ஷமிகாவுக்கு சினிமாவில் ஆர்வம் இருக்கிறதா?”

“ ‘பைரவா தேவி’ பட இயக்குநர் ஸ்ரீஜெய் ஒருநாள் என் வீட்டுக்கு வந்து ‘மேடம், இந்தப் படத்துக்குக் குழந்தை நட்சத்திரம் தேவைப்படுது. பேசாம ஷமிகாவை நடிக்க வைக்கலாம்னு நினைக்கிறேன்’னு கேட்டார். ஷமிகாவும் ஓகே சொன்னா... ஆனால் கல்விங்கறது காலா காலத்துல படிச்சே ஆகணும்னு முடிவுபண்ணி ‘பைரவா தேவி’ படத்துல நடிக்க வைக்காமல் இப்போதைக்குத் தவிர்த்துட்டேன். கொஞ்சகாலம் கழித்து எங்க பேனர்லயே ஷமிகாவுக்குன்னு பிரத்யேகமான கதை உருவாக்கி நடிக்க வைக்கலாம்னு திட்டமிட்டுக்கிட்டு இருக்கேன்.”

``உங்கள் கணவர் குமாராசாமி, வீட்டில் எப்படி?’’

“அரசியல் பத்தியெலாம் அவர்ட்ட எதுவும் கேட்டுக்க மாட்டேன். நான் நடிச்ச படங்களை ரொம்பவும் ரசிச்சுப் பார்ப்பார். அவருக்கு என்னுடைய நடிப்புத்திறமை மேல பெரிய நம்பிக்கை உண்டு. நான் சினிமாவில் நடிக்க வேண்டாம்னு இருந்தப்ப ‘நல்ல படங்கள்ல எத்தனை வயசுவரைக்கும் வேணாலும் நடிச்சுக் கிட்டே இரு’ன்னு எனக்குப் பச்சைக்கொடி காட்டியதே அவர்தான். என்மீதும் என் மகள் ஷமிகா மீதும் ரொம்பவே அன்பாக இருப்பார். எங்களுக்கு ஒண்ணுன்னா துடிச்சுப் போயிடுவார்.”