Published:Updated:

“சசிக்குமாரைக் கொண்டாடுறாங்க!”

sasi kumar, Nikki Galrani
பிரீமியம் ஸ்டோரி
sasi kumar, Nikki Galrani

“நான் பாலா, அமீர், சேரன், ராஜீவ் மேனன் இவங்க படங்கள்ல உதவி இயக்குநரா வேலை செஞ்சேன்.

“சசிக்குமாரைக் கொண்டாடுறாங்க!”

“நான் பாலா, அமீர், சேரன், ராஜீவ் மேனன் இவங்க படங்கள்ல உதவி இயக்குநரா வேலை செஞ்சேன்.

Published:Updated:
sasi kumar, Nikki Galrani
பிரீமியம் ஸ்டோரி
sasi kumar, Nikki Galrani

யக்குநராக முயற்சி பண்ணப்போ சரியா வாய்ப்பு கிடைக்கல. அந்த நேரத்துல சுந்தர்.சி சார் அவர் படத்துல வேலைசெய்யக் கூப்பிட்டார். ‘அரண்மனை’ படத்துல இருந்து ‘கலகலப்பு 2’ வரை அவர்கிட்ட வேலை செஞ்சு கமர்ஷியல் படங்கள் எப்படி எடுக்கிறதுன்னு கத்துக்கிட்டு இந்தப் படத்தை எடுத்து முடிச்சிருக்கேன்” என உற்சாகமாகப் பேசத் தொடங்குகிறார் ‘ராஜவம்சம்’ பட இயக்குநர் கதிர்வேலு.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
“சசிக்குமாரைக் கொண்டாடுறாங்க!”

``15 வருடங்களா உதவி இயக்குநரா இருந்துட்டு, இப்போதான் இயக்குநர் ஆகுறோம்னு நினைச்சு ஃபீல் பண்றீங்களா?’’

“ஃபீல் பண்ணலை. பெருமைப்படுறேன். இதுக்கு முன்னாடி நாலஞ்சு முறை படம் கமிட்டாகி ட்ராப் ஆகியிருக்கு. இப்போதான் நான் ரொம்பத் தெளிவான மனநிலையில இருக்கேன். பாலா சார் மாதிரியான இயக்குநர்கிட்டேயும் வேலை பார்த்திருக்கேன். சுந்தர்.சி சார்கிட்டேயும் வேலை பார்த்தி ருக்கேன். இத்தனை வருடங்கள் சினிமாவுல இருந்ததனால சினிமாவுடைய ரியாலிட்டி யைப் புரிஞ்சுக்க முடிஞ்சது. அப்போ படம் பண்ணியிருந்தால் தோத்துப்போயிருக்க அதிக வாய்ப்பிருக்கு. ஆனா, இப்போ நிச்சயமா ஜெயிச்சிடுவேங்கிற நம்பிக்கை இருக்கு.”

``கிராமத்துல நடக்கிற குடும்பப் படங்கிறதனால சசிகுமாரை ஹீரோவா நடிக்கவெச்சீங்களா?’’

“இந்தக் கதையை முதல்ல நான் விஜய் சேதுபதியை மனசுல வெச்சுதான் எழுதினேன். ஆனா, அவருக்கு நிறைய கமிட்மென்ட்ஸ்! அதனால வேற யார் நடிச்சா நல்லாருக்கும்னு யோசிச்சுட்டிருந்தோம். அந்தச் சமயத்துல ‘அசுரவதம்’ படத்தை விழுப்புரத்துல ஒரு தியேட்டர்ல பார்த்தேன். என் பின்னாடி உட்கார்ந்திருந்த ஒரு தாத்தாவும் பாட்டியும் அவசரமா வந்து உட்கார்ந்து ‘சசிகுமாரைக் காட்டிட்டாங்களா?’ன்னு கேட்டவுடன் எனக்கு அவ்ளோ ஆச்சர்யம். அவரை எந்தளவுக்கு கிராமத்துல இருக்கிறவங்க கொண்டாடுறாங்கன்னு தெரிஞ்சது. அப்போவே இந்தக் கதையில இவர்தான் நடிக்கணும்னு முடிவு பண்ணிட்டேன்.”

“சசிக்குமாரைக் கொண்டாடுறாங்க!”

`` ‘சுப்ரமணியபுரம்’, ‘கிடாரி’, ‘வெற்றிவேல்’னு பல கிராமத்துப் படங்களில் சசிகுமாரைப் பார்த்திருக்கோம். இந்தப் படத்தில் என்ன வித்தியாசம்?’’

“இப்போ எல்லோரும் சொந்தபந்தப் பாசம், மண்வாசனை இதையெல்லாத்தையும் மறந்து எதையோ நோக்கி ஓடிக்கிட்டிருக்கோம். இந்தச் சூழல்லேயும் பொள்ளாச்சியில 49 பேர் ஒரே வீட்ல குடும்பமா வாழ்ந்துக்கிட்டி ருக்கிறாங்க. இதை வெச்சு ஒரு படம் பண்ணலாம்னு எண்ணம் வந்து எழுதின கதைதான் இது. இதுல சாஃப்ட்வேர் இன்ஜினீயரிங் படிச்சுட்டு சென்னையில வேலை செய்றார் சசி சார். ஆனா, வாராவாரம் வெள்ளிக்கிழமை நைட் ஊருக்குக் கிளம்பி வந்திடுவார். அந்தக் குடும்பத்தைச் சுத்தி நடக்குற நிகழ்வுகள்தான் கதை.”

“சசிக்குமாரைக் கொண்டாடுறாங்க!”

``விஜயகுமார், சுமித்ரா, தம்பிராமையா, மனோபாலா, சிங்கம்புலின்னு ஏகப்பட்ட நடிகர்கள் இருக்காங்களே?’’

“நான் சுந்தர்.சி சார்கிட்ட வேலை பார்த்ததனால எல்லா நடிகர்களும் எனக்குப் பழக்கம். அதனால என் மனசுல இருந்த ஆட்கள் எல்லோரையும் இதுல நடிக்கவெச்சுட்டேன். அவ்ளோ பேர் ஒரே இடத்துல இருந்ததனால ஸ்பாட் ரொம்பக் கலகலப்பா திருவிழா மாதிரி இருந்தது. எல்லோருக்கும் ஒரே சீன்ல முக்கியத்துவம் கொடுக்க முடியாதுதான். உதாரணத்துக்கு இந்த சீன்ல சுமித்ரா அம்மாவுக்கு டயலாக் இருந்தால் வேறொரு இடத்துல விஜயகுமார் சாரை ஸ்கோர் பண்ண வைப்பேன். அதனால படமா பார்க்கும்போது எல்லோருக்கும் முக்கியத்துவம் இருக்கும். நிக்கி கல்ராணிதான் ஹீரோயின். சசிகுமார் - நிக்கி கல்ராணி காம்போவே புதுசா இருக்கும்.”

“சசிக்குமாரைக் கொண்டாடுறாங்க!”

``யோகிபாபு, சதீஷ்னு ரெண்டு காமெடியன்கள் இருக்காங்களே?’’

“சென்னையில சசி சார் வேலை செய்ற இடத்துல அவருக்கு நண்பரா சதீஷ் இருப்பார். வீட்ல அவருக்கு மச்சானா யோகிபாபு இருப்பார். அதனால படம் முழுக்க காமெடி நிறைஞ்சிருக்கும்.''

கதிர்வேலு
கதிர்வேலு

`` `நீங்க ஏன் படங்கள் இயக்குறதில்லை’ன்னு சசிகுமார்கிட்ட கேட்டிருக்கீங்களா?’’

“சில சூழல்கள் காரணமா நடிச்சுக்கிட்டிருக்கார். ஆனா, படம் பண்ணாம இருக்கோ மேன்னு பெரிய ஆதங்கமும் கோபமும் அவருக்குள்ள இருந்துக்கிட்டே இருக்கு. சீக்கிரமே அவர்கிட்ட இருந்து சிறப்பான தரமான படம் வரும்.”