சினிமா
தொடர்கள்
Published:Updated:

ராஜமௌலியின் பாராட்டு... சூர்யாவின் உழைப்பு... ஷங்கரின் பெருந்தன்மை...

சமுத்திரக்கனி
பிரீமியம் ஸ்டோரி
News
சமுத்திரக்கனி

“சாதியெல்லாம் இல்லாமல் நல்ல மனிதனா இருக்கணும்னு ஆசைப்படுற இளைஞர்கள் நிறைய பேர் இருக்காங்க.

சாதியற்றவர்கள் அப்படிங்கிற கூட்டம் பெரிதானால் எந்தப் பிரச்னையும் இருக்காதுன்னு நம்பிக்கை இருக்கு. அதைத்தான் ‘நாடோடிகள் 2’ படத்துல சொல்லியிருக்கோம்” - உத்வேகத்துடன் பேசத் தொடங்குகிறார் சமுத்திரக்கனி.

‘அடுத்த சாட்டை’ படத்துடைய ஆடியோ லாஞ்ச்ல ‘இன்னொரு சாட்டை’ படம் வரும்னு சொன்னீங்களே!

“மாணவர்கள் மத்தியில் எனக்கு இவ்வளவு அன்பு கிடைக்குதுன்னா அதுக்குக் காரணம் ‘சாட்டை’யும் இயக்குநர் அன்பழகனும்தான். ‘வகுப்பறையில மாணவனுக்கான உரிமை தரப்படுகிறதா இல்லை, ஆசிரியரே ஆக்கிரமிக்கிறாரா?’ - இதைத்தான் ‘அடுத்த சாட்டை’ பேசும். பள்ளியும் இல்லாமல் வீடும் இல்லாமல் ஏதாவது ஒரு மூன்றாவது இடத்தில் மாணவன் மாணவனாய் இருப்பான்னு பேராசிரியர் மாடசாமி ஐயா எழுதியிருந்தார். வீடு, பள்ளி இந்த ரெண்டு இடங்களிலும் பேச முடியாத விஷயங்களை அந்த மூன்றாவது இடத்தில் மனசுவிட்டுப் பேசித் தீர்க்கலாம். இதைச் செஞ்சாலே மாணவர்கள் தப்பா யோசிக்கமாட்டாங்க. அந்த மூன்றாவது இடம் பத்திதான் ‘இன்னொரு சாட்டை’ பேசும்.”

‘நாடோடிகள்’, ‘நாடோடிகள் 2’, ‘சாட்டை’, ‘அடுத்த சாட்டை’... இந்த மாதிரியான படங்கள் பண்றதனால ஒரு வட்டத்துக்குள்ளயே இருக்கோமோன்னு நினைச்சதுண்டா?

“இந்தப் படங்களை எல்லாம் காசு சம்பாதிக்கிறதுக்காக எடுக்கிறதில்லை. சம்பாதிச்ச காசைப்போட்டு எடுக்கிறோம். இதை ரொம்பப் பெருமையா நினைக்கிறேன். அடுத்து ‘அப்பா 2’ வரப்போகுது. இதெல்லாம் சினிமா மூலமா சமூகத்துக்கு நாம் செய்ய வேண்டிய கடமைன்னு நினைக்கிறேன்.”

 ராஜமௌலியின் பாராட்டு... 
சூர்யாவின் உழைப்பு...
ஷங்கரின் பெருந்தன்மை...

‘சாட்டை’ மாதிரியேயான கதைக்களன் கொண்ட ’ராட்சசி’ படத்துல பெண் சமுத்திரக்கனியா ஜோதிகா நடிச்சிருந்தாங்க’ன்னு வந்த விமர்சனத்தை எப்படிப் பார்க்கறீங்க?

“என்னைவிட சூப்பரா நடிச்சிருந்தாங்க, ஜோதிகா. ‘சாட்டை’ படமே முதல்ல கவனிக்கப்படலை. டிவியில வந்த பிறகுதான் அதுக்கான அங்கீகாரம் கிடைச்சது. ஜோதிகா மேடம் மாதிரியான ஒரு நபர் இந்தப் பிரச்னைகளைப் பத்திப் பேசணும். அப்படிப் பேசினால் அதுக்கான வீரியம் அதிகமா இருக்கும்.”

“இங்கே உண்மையைச் சொன்னாலே போதனையாகிடுது. ‘சிக்னல்ல சிவப்பு போட்டா நிக்கணும். இல்லைன்னா, ரோட்ல அப்பாவியா போறவனை அடிச்சிடுவ. அதனால பச்சை விழுந்தவுடன் போ’ன்னு சொன்னா அது போதனையா? இது அறிவுரை கிடையாது; அக்கறை.

‘காப்பான்’ படத்துல நடிச்ச அனுபவம்?

“ரொம்ப அருமையான பயணம். மோகன்லால் சார்கூட மறுபடியும் வொர்க் பண்ணுனது ரொம்ப சந்தோசம். அவர்கூட இருக்கும்போதெல்லாம் அவ்ளோ எனர்ஜி கிடைக்கும். சூர்யா மாதிரி சின்சியரான நடிகரைப் பார்க்க முடியாது. ரெண்டு பேருடைய சிந்தனையும் ஒரே மாதிரி இருக்கிறதனால மாணவர்கள், அடுத்த தலைமுறைகள்னு நிறைய விஷயங்கள் பேசியிருக்கோம். சிறப்புப் பாதுகாப்புப் படை வீரரா நடிச்சிருக்கேன். இதுவரை நான் இந்த மாதிரியான கேரக்டர்ல நடிச்சதில்லை. டப்பிங்ல ஆங்கிலத்துல வசனம் பேசுறது ரொம்ப சிரமமா இருந்தது. லண்டன் வந்தும் சைக்கிள்லதான் சுத்திட்டிருந்தார் ஆர்யா. ‘கனி சார், ரெண்டு நாள் எனக்கு ஷூட் இல்லையாம். இங்கிருந்து பக்கத்து நாட்டுக்கு 750 கிலோமீட்டர்தானாம். போயிட்டு வந்துடுறேன்’னு சைக்கிள்லேயே நாடுவிட்டு நாடு போற அதிசய மனிதர்.”

‘வேலையில்லா பட்டதாரி’ படத்துக்குப் பிறகு, ‘ஏலே’ படத்தில் வயதான தோற்றத்துல நடிச்ச அனுபவம் எப்படி இருந்தது?

“இந்தப் படத்துடைய இயக்குநர் ஹலீதா ‘நாடோடிகள்’ படத்துல வொர்க் பண்ணுனாங்க. அவங்களுடைய முதல் படைப்பான ‘பூவரசம் பீப்பீ’, அப்புறம், அவங்க எடுத்த ஆந்தாலஜி படமான ‘சில்லுக்கருப்பட்டி’ படத்துலேயும் ஏற்கெனவே நடிச்சிருக்கேன். ஆனா, இந்தப் படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். டூயல் ரோல்ல நடிச்சது ரொம்ப சவாலா இருந்தது. எளிமையான சுவாரஸ்யமான ஸ்க்ரிப்ட் இது. மணிகண்டன் என் மகனா நடிச்சிருக்கார். அற்புதமான நடிகர். உண்மையாவே, இந்தப் படம் நிச்சயம் பேசப்படும்.”

ராஜமெளலியின் ‘RRR’ படத்துல நடிச்சிட்டிருக்கீங்க. உங்களுக்கும் ராஜமெளலிக்கும் எப்படி அறிமுகம்?

“ `நாடோடிகள்’ பார்த்துட்டு அவர் எனக்கு ஒரு பெரிய மெசேஜ் அனுப்பினார். அப்போ இருந்து அடிக்கடி பேசிக்குவோம். ‘அப்பா’ பார்த்துட்டு, ராஜமெளலி சாருடைய அப்பா விஜேந்திர பிரசாத் பார்த்துட்டு கால் பண்ணி, ‘உங்களைப் பார்க்கணும். வரமுடியுமா?’னு கேட்டார். அடுத்த சில நிமிடங்களில் எனக்கு ஃப்ளைட் டிக்கெட் அனுப்பிட்டார். என்னைப் பார்த்தவுடன் கட்டிப்பிடிச்சு, ‘‘Children Of Heaven’ பார்க்க எனக்கு மூணு நாளாச்சு. அதுக்குப் பிறகு, உன்னுடைய ‘அப்பா’ படம் பார்க்க எனக்கு 24 மணி நேரமாச்சு’ன்னு சொன்னார். அங்கிருந்து போறப்ப ராஜமௌலி ‘இவ்வளவு தூரம் வந்துட்டு என்னைப் பார்க்கணும்னு தோணலயா?’ன்னு பாகுபலி ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்து போன் பண்ணிக் கேட்டார். ‘நீங்க என்ன டென்ஷன்ல இருப்பீங்கன்னு தெரியும்’னு சொல்லிட்டு வந்துட்டேன். ஆறு மாசம் கழிச்சு, ‘RRR’ படத்துல நடிக்கக் கேட்டார். அப்படிதான் படத்துக்குள்ள வந்தேன்.”

அந்த பிரமாண்டமான படத்துல நடிக்கிற அனுபவம் எப்படி இருக்கு?

“அது வேற அனுபவம். 2000 பேர் இருக்கற செட்ல ராஜமௌலி மைக்கைக் கைல எடுத்தா மொத்த செட்டும் அமைதி ஆகிடுது. கேரவன் போகச் சொன்னப்பகூட அசிஸ்டென்ட் மாதிரி சுத்திட்டிருந்தேன். நிறைய கத்துக்கிட்டேன்.”

 ராஜமௌலியின் பாராட்டு... 
சூர்யாவின் உழைப்பு...
ஷங்கரின் பெருந்தன்மை...

தெலுங்குல இன்னொரு பெரிய படம் பண்றீங்கன்னு கேள்விப்பட்டோம். அது என்ன?

“அல்லு அர்ஜுன் படத்துல அவருக்கு வில்லனா நடிக்கிறேன். திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இந்தப் படத்தை இயக்குறார்.”

தெலுங்கு, மலையாளம், கன்னடம்னு பல மொழிகளைக் கையாளுறது எப்படி இருக்கு?

“கலைக்கு மொழி கிடையாது. எல்லா மொழியும் நல்ல படைப்பைக் கொடுக்கத்தான் முயற்சி செய்யுது. ராஜமெளலி சாரை எப்படி பிரமிச்சுப் பார்த்தேனோ அப்படிதான் ஷங்கர் சாரைப் பார்க்கிறேன். இப்போ அவருடைய ‘இந்தியன் 2’ படத்துல நடிக்கிறேன். ‘நீங்க என் கனவு. நீங்க எனக்குக் கதை சொல்லணும்னு அவசியமே இல்லை’ன்னு சொன்னேன். இருந்தாலும் படத்துடைய கதையை எனக்குச் சொன்னார் ஷங்கர் சார். அந்த உழைப்பு, நேர்மையாலதான் இவர் மாதிரியான ஆட்கள் இந்த உயரத்துல இருக்காங்க.”

பெரிய ஹீரோவை வெச்சு ஒரு மாஸ் படத்தை உங்ககிட்ட இருந்து எப்போ எதிர்பார்க்கலாம்?

“விஷால், ஜெயம் ரவி, சசி மூணு பேர்கிட்டேயும் பேசிக்கிட்டிருக்கேன். சீக்கிரமே அதுக்கான அறிவிப்பு வரும்.”

சமுத்திரக்கனி பேசுறது போதிக்கிற மாதிரி இருக்குன்னு ஒரு விமர்சனம் இருக்கே. அதை எப்படிப் பார்க்கறீங்க?

“இங்கே உண்மையைச் சொன்னாலே போதனையாகிடுது. ‘சிக்னல்ல சிவப்பு போட்டா நிக்கணும். இல்லைன்னா, ரோட்ல அப்பாவியா போறவனை அடிச்சிடுவ. அதனால பச்சை விழுந்தவுடன் போ’ன்னு சொன்னா அது போதனையா? இது அறிவுரை கிடையாது; அக்கறை. ஜோதிகா மேடம் இந்த மாதிரி படங்கள் பண்ண ஆரம்பிச்சிருக்கிறது எனக்கு அவ்ளோ சந்தோசம். ‘பசங்க 2’ல சூர்யா சார் பேசினார். ‘நேர்கொண்ட பார்வை’ படத்துல அஜித் சார் பேசினார். ‘சர்கார்’ல எலெக்ஷன் பத்தி விஜய் சார் பேசினார். இதையெல்லாம் பார்க்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு.”