Published:Updated:

"அண்ணா ஆள வுட்டுருங்கணா!" - விஜய்!

Exclusive Interview's - Vijay
பிரீமியம் ஸ்டோரி
Exclusive Interview's - Vijay

'சச்சின் ' படத்துல வர்ற கேரக்டர் மாதிரிதான் நிஜத்திலேயும் நான். - விஜய்

"அண்ணா ஆள வுட்டுருங்கணா!" - விஜய்!

'சச்சின் ' படத்துல வர்ற கேரக்டர் மாதிரிதான் நிஜத்திலேயும் நான். - விஜய்

Published:Updated:
Exclusive Interview's - Vijay
பிரீமியம் ஸ்டோரி
Exclusive Interview's - Vijay

ஆக்ஷனுக்கு லீவு விட்டுவிட்டு, திரும்பவும் காதலுக்கு அட்மிஷன் தந்திருக்கிறார் விஜய்!

' குஷி ' பாணி காதல் கதையில் விஜய் தருகிற படம் ' சச்சின்! ' சந்திரமுகி ', ' மும்பை எக்ஸ்பிரஸ் ' படங்களுக்கு இடையில், சதமடிக்கும் ஆசையில் இருக்கிறார் ' சச்சின் '. குளிர் கொட்டும் அயர்லாந்தில், ஒரு பாடலுக்கு ஹரிணியுடன் ஆட்டம் போட்டுவிட்டு வந்தவருக்கு, சென்னையிலும் மழை கொட்டுவது இன்ப அதிர்ச்சி! '

மனசுக்கு ஒரு விஷயம் பிடிச்சுதுன்னா, அதை அந்த நிமிஷமே செய்ற ரசனையான ஆளு சச்சின். ஓர் அழகான பெண்ணைப் பார்த்ததும், ' நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க! னு தயங்காம சொல்லிட்டுத் திரும்பிப் பார்க்காம நடக்கிற கேரக்டர். அதிகம் சிரிச்சா பைத்தியம்னு நினைப்பாங்களோ, அழுதா கோழைனு நினைப்பாங்களோனு அடுத்தவங்களைப் பத்திக் கவலைப்படாம, தனக்கு என்ன தோணுதோ அதைச் செய்துட்டுப் போயிட்டே இருக்கிற பையன். அவன் வாழ்க்கையில் வருகிற காதல், சின்னச் சின்ன சந்தோஷங்கள், தூக்கியடிக்கும் துயரங்கள்னு ரகளையா இருக்கும் படம். "

“ஹரிணி, பிபாஷா பாசுனு இரண்டு பேரோடு காதல் களேபரம் நடத்தியிருக்கீங்க போல? "

“ பிபாஷா பாசு டான்ஸ்ல பொளந்து கட்டறாங்க. அர்த்தம் தெரியாம ஒப்புக்கு வசனம் பேசறதில்லை. ஒவ்வொண்ணுக்கும் இந்தியில் அர்த்தம் கேட்டுப் புரிஞ்சு நடிக்கிறாங்க! ஹரிணி ஜாலி டைப். ' பாய்ஸ்'ல கலக்கின பொண்ணு! தமிழ்நாட்டு வெயிலுக்கு ஐஸ்கிரீம். அயர்லாந்து குளிருக்கு சூடான சுக்குக் காப்பி. எங்க காம்பினேஷன் ' அப்படிப் போடு ' ரகமா இருக்கும். ” " பஞ்ச் டயலாக்குகள் பயங்கரமா பேச ஆரம்பிச்சுட்டீங்களே... ”

Exclusive Interview's - Vijay
Exclusive Interview's - Vijay

" ஆக்ஷன் படங்களில் அப்படி அமைஞ்சுபோகுது. ஆனா நானா, ' எனக்கு இப்படி ஒரு டயலாக் வைங்க'னு யார்கிட்டேயும் கேட்பதில்லை. கேரக்டருக்கு ஏத்த மாதிரி அப்படி வசனங்கள் வந்தா, பேச மாட்டேன்னும் சொல்றது கிடையாது. நான் இயக்குநர்களின் நடிகன். இப்ப ' சச்சின் ' பண்ணியிருக்கேன்ல... கொஞ்ச நாளுக்கு இந்தக் கேள்வி வராது பாருங்க!

ஏன்னா, இது காதல் நிரம்பி வழிகிற படம்.

'கில்லி ' வெற்றிக்குப் பிறகு, தொடர்ந்து அதே மாதிரியான படங்களா செய்தேன்! இப்ப சம்மர் ஹாலிடேவுக்கு ஜாலியா ஜில்லுனு காதல் ஐஸ்கிரீமோட வர்றேன்! ”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

Exclusive Interview's - Vijay
Exclusive Interview's - Vijay

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

" அடுத்த தலைமுறை நடிக்க வந்துட்டாங்க. நீங்க சீனியர் நடிகர் ஆகிட்டீங்களா? ”

" நடிப்பில் சீனியர், ஜூனியர் வித்தியாசமெல்லாம் கிடையாது. எப்படி நடிக்கிறாங்க என்பதுதான் விஷயம். ரஜினி சார், கமல் சார் பற்றியெல்லாம் நான் எப்பவும் கவலைப்படறதில்லே! அவங்க ரொம்பப் பெரிய இடத்தில் இருக்கிறவங்க. அவங்களோடு என்னை ஒப்பிட்டுப் பார்ப்பதே அபத்தம்.

இன்னிக்கும் ரஜினி சார் படத்தை முதல் நாள், முதல் ஷோ பார்க்க ஆசைப்படற ரசிகன் நான். அதே மாதிரி கமல் சார் எப்படி ஒவ்வொரு படத்துக்கும் இவ்வளவு வித்தியாசமா யோசிக்கிறார்னு நினைச்சு ஆச்சர்யப் படுவேன். ஆனா, சிம்பு கிட்டே நான் அப்படி இருக் முடியாது. எப்ப நான் சீனியர்னு

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முடிவுக்கு வந்துடறேனோ அப்பவே நான் க்ளோஸ்! வேலை நடிச்க்கிறது மட்டும்தான். அதை ரொம்ப கவனமா, சிறப்பா பண்ணணும்கிறது என் கனவு! ”

" நம்பர் ஒன் ஆகிட்டோம், இனி நமக்குப் போட்டி இல்லை லனு நினைக்கிறதுண்டா? "

" நாம மரியாதை வெச்சிருக்கிறவங்க ' நீங்கதான் நம்பர் ஒன்னு சொல்றப்போ, ' ஒழுங்கா வேலை பார்த்துட்டு இருக்கோம்'கிற திருப்திதான் வரும். அதுக்கு மேல அதை மண்டைக்குள்ளே ஏத்திக்கிட்டோம்னா கஷ்டம்தான்!

' சச்சின் ' படத்துல வர்ற கேரக்டர் மாதிரிதான் நிஜத்திலேயும் நான். மத்தவங்களைப் பத்திக் கவலைப்படாம எனக்குத் தெரிஞ்ச விஷயங்களைப் பண்ணிட்டு போயிட்டே இருப்பேன். எனக்கு நான் தான் போட்டி. ' திருப்பாச்சி ' விஜய்யை சச்சின் விஜய் பண்ண ' சச்சினை விட ' சிவகாசி ' பட்டாசு கிளப்பணும். "

' சந்திரமுகி ', ' மும்பை எக்ஸ்பிரஸ் ', ' சச்சின் ' இந்த மூன்று படங்களில் எந்தப் படம் சூப்பர் ஹிட் ஆகும்? " " இதானே வேணாங்கறது! எல்லாப் படங்களும் ஹிட் ஆகணுங்கிறதுதான் ஒரு ரசிகனா என்னோட எதிர்பார்ப்பு. அப்பதான் சினிமாத் துறை நல்லா இருக்கும். பர்சனலா சொல்லணும்னா, ' சச்சின் ' சூப்பர் ஹிட் ஆகணும்... ஆகும்! ”

அரசியல்வாதிகள் சினிமாவுக்குள் தலையிடறாங்க. சினிமாக்காரங்க அரசியலுக்குப் போறாங்க. இது பற்றி நீங்க என்ன நினைக் கிறீங்க? "

" அண்ணா... ஆள வுட்ருங்ணா!

சின்னப் பையன். இதையெல்லாம் பேசுறதுக்கு நிறைய பெரியவங்க இருக்காங்க. எனக்கு சினிமாவைத் தவிர பற எதுவும் தெரியாதுங்ணா! ”

(17.04.2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism