Published:Updated:

ஓப்பன் டாக்ஸ்: சரண்யா மோகன் பார்வையில் `ட்ரோல்', லட்சுமி மேனனின் `உறுத்தல்'!

லட்சுமி மேனன், சரண்யா மோகன்
News
லட்சுமி மேனன், சரண்யா மோகன்

சரண்யா மோகனும் லட்சுமி மேனனும் ஆனந்த விகடனுக்கு அளித்த ஓப்பன் டாக் பேட்டிகள்...

''சில வருடங்களுக்கு முன் உடல் பருமனாக இருந்த உங்கள் புகைப்படத்தை வைத்து ட்ரோல் செஞ்சாங்களே... எப்படி எடுத்துக்கிட்டீங்க?''

சரண்யா மோகன்: ''ப்ச்... அதை நான் கண்டுக்கவே இல்லை. ஆனா, என் குடும்பத்தை அது ரொம்ப பாதிச்சது. பையன் பிறந்தப்போ ஆப்ரேஷன் பண்ணிட்டு நான் ரொம்பக் கஷ்டப்பட்டேன். ஆனா, அது எதுவுமே தெரியாமல், ஒரு போட்டோவை மட்டும் வெச்சுக்கிட்டு ட்ரோல் பண்ணிட்டு இருக்காங்களேனு என் கணவர் ரொம்ப வருத்தப்பட்டார். என்னை ட்ரோல் பண்ணவங்களோட அம்மாவும் என் சூழ்நிலையைத் தாண்டிதான் வந்திருப்பாங்க. அவங்களோட அக்கா, தங்கச்சி, மனைவி, மகள்னு அவங்களுக்கும் கல்யாணம் ஆகி குழந்தை பிறக்கும்போது, இப்படி மாறத்தான் செய்வாங்க. அதையெல்லாம் யோசிக்காமல் கிண்டல் பண்றாங்களேனுதான் எனக்கு வருத்தம் இருந்துச்சு..."

சரண்யா மோகன்
சரண்யா மோகன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி தங்கை கேரக்டர்களில் நடித்து ஹீரோயினானவர், சரண்யா மோகன். திருமணத்திற்குப் பிறகு முழுமையான இல்லத்தரசியாகவும், பரதநாட்டிய ஆசிரியையாகவும் மேடம் இப்போ பிஸி. அவர் அளித்த முழுமையான பேட்டியை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > "அம்மாக்களே, காயப்படுத்தக்கூடாதுன்னு கத்துக்கொடுங்க!" https://bit.ly/3jN6fER

"ஸ்கூல் லைப் மிஸ்ஸாகிருச்சு!"

"ஸ்கூல் படிக்குறப்போதே சினிமாவுக்கு வந்தது நல்லதுன்னு நினைக்குறீங்களா, இல்ல சில விஷயங்களை மிஸ் பண்ணிட்டோம்னு பீல் பண்ணுறது உண்டா?"

லட்சுமி மேனன்
லட்சுமி மேனன்

லட்சுமி மேனன்: "எல்லாருக்கும் சினிமால நடிக்குற வாய்ப்பு அவ்ளோ சீக்கிரம் வராது. என்னோட பிரெண்ட்ஸ் பலரும் சினிமால வாய்ப்பு தேடிக்கிட்டு இருக்காங்க. இவங்களைப் பார்க்குறப்போ நமக்கு நல்லது நடந்திருக்குன்னு பாசிட்டிவா தோணும். ஆனா அதேநேரம் குழந்தைப் பருவத்துலயே அடல்ட் கதை கொண்ட படத்துல நடிச்சிட்டேன். ஸ்கூல் லைப் மிஸ்ஸாகிருச்சு. அது சமயங்களில் உறுத்தலாத்தான் இருக்கும்."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

- ரொம்ப நாளா காணோமேன்னு விசாரிச்சா... ஆளே மாறியிருக்காங்க லட்சுமி மேனன். அவர் அளித்த பேட்டியை ஆனந்த விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > மூணு டாட்டூல ஒண்ணை அழிக்கணும்! https://bit.ly/2EXscSv

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV