Published:Updated:

த்ரிஷா சிம்புவுக்காக வெயிட்டிங்... கெளதம் ரஹ்மானுக்காக வெயிட்டிங்! ஏன்?

சிம்பு, த்ரிஷா
சிம்பு, த்ரிஷா

லாக்டெளனில் உலகமே இருக்க, இந்த நேரத்தில் 10 இயர்ஸ் ஆஃப் VTV-யைக் கொண்டாட கெளதம் மேனனுக்கு ஐடியா பிறக்க, உடனே ஸூம் வழியே களத்தில் இறங்கியிருக்கிறார். அதுதான் `கார்த்திக் டயல் செய்த எண்' என்கிற பெயரில் குறும்படமாக உருவாகியிருக்கிறது.

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு - த்ரிஷா நடித்த படம் `விண்ணைத்தாண்டி வருவாயா'. சிம்பு மற்றும் த்ரிஷாவின் கரியரில் மிக முக்கியமான படம் இது. தமிழிலும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில்தான் சமந்தாவும் - நாக சைதன்யாவும் இணைந்து நடித்து, அது ரியல் காதலாக மலர்ந்து பின்னர் திருமணமும் செய்துகொண்டனர்.

Gautham Vasudev Menon
Gautham Vasudev Menon

`விண்ணைத்தாண்டி வருவாயா' வெளியாகி இப்போது 10 ஆண்டுகள் ஆகின்றன. லாக்டெளனில் உலகமே இருக்க, இந்த நேரத்தில் 10 Years Of VTV-யைக் கொண்டாட கெளதம் மேனனுக்கு ஐடியா பிறக்க, உடனே ஸூம் வழியே களத்தில் இறங்கியிருக்கிறார். அதுதான் `கார்த்திக் டயல் செய்த எண்' என்கிற பெயரில் குறும்படமாக உருவாகியிருக்கிறது. முதலில் இந்தக் குறும்படம் குறித்து த்ரிஷா, கெளதம் மேனனுடன் கேமரா ஆங்கிள்ஸ் பற்றிப் பேசுவதுபோல ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் இருந்துதான் இந்த VTV சீக்வல் பற்றிய சர்ப்ரைஸ் பற்ற ஆரம்பித்தது. இதற்கிடையே, சில தினங்களுக்கு ஒரு டீஸர் வீடியோவையும் வெளியிட்டார் கெளதம் மேனன். தனது `ஒன்றாக' யூடியூப் தளத்துக்காகத்தான் இந்த ஸ்பெஷல் குறும்படத்தை இயக்கிவருகிறார் கெளதம் மேனன். இந்தக் குறும்படத்தின் ஸ்பெஷல் பற்றி கெளதம் மேனனுக்கு நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தோம்.

``கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த `விண்ணைத்தாண்டி வருவாயா' திரைப்படத்துக்கு இன்னும் க்ரேஸ் இருக்கிறது. சோஷியல் மீடியாவில் இப்போதும் கெளதம் மேனனிடம் அதிகம் VTV பற்றித்தான் கேட்பார்கள். `வேட்டையாடு விளையாடு-2' போல கெளதமுக்கு `VTV-2' எடுக்கும் எண்ணமும் இருந்தது. ஏ.ஆர்.ரஹ்மானுடன் கெளதம் மேனன் இணைந்த முதல் படமும் இதுதான். சிம்பு - த்ரிஷா - கெளதம் - ரஹ்மான் என இது ஒரு யுனிக் கூட்டணி. அதனால் இந்தக் கூட்டணியோடு மீண்டும் களம் இறங்கலாம் என நினைத்தபோதுதான் கொரோனா வந்துவிட்டது.

Simbu, Trisha, Gautham Menon
Simbu, Trisha, Gautham Menon

`கார்த்திக் டயல் செய்த எண்' குறும்பட ஷூட்டிங் எல்லாம் முடிந்துவிட்டது. த்ரிஷா வீட்டுக்கு ஒரு கேமரா, சிம்பு வீட்டுக்கு ஒரு கேமரா என அனுப்பி ஷூட்டிங்கை முடித்துவிட்டார் கெளதம். ஸ்கைப் மற்றும் ஸூம் வழியாகவே சிம்பு மற்றும் த்ரிஷா காட்சிகளைக் காத்திருந்து இயக்கினார் கெளதம் மேனன். இந்த குறும்படத்தின் நீளம் மொத்தம் 7 நிமிடங்கள். இப்போது ஷூட்டிங் முடிந்து பின்னணி இசைசேர்ப்பு பணிகளுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் வீட்டுக்கு குறும்படம் சென்றிருக்கிறது. அதற்காக இப்போது வெயிட்டிங்! குறும்படம் எடுக்கும் ஐடியா தோன்றியவுடனே ரஹ்மானிடம் கதையைச் சொல்லி அவர் இசையமைக்க ஓகே சொன்ன பிறகுதான் பணிகள் தொடங்கின. இப்போது பின்னணி இசையோடு இந்த குறும்படத்துக்கென ரஹ்மான் இசையில் ஒரு சிங்கிள் டிராக் வெளியானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

`மாஸ்டர்’ டு `அண்ணாத்த’... போஸ்ட் புரொடக்‌ஷன் அப்டேட்ஸ் என்ன?

இந்தக் குறும்படம் இந்த மாத இறுதிக்குள் கெளதம் மேனனின் `ஒன்றாக' யூடியூப் சேனலில் வெளியாகும். கடைசிக்கட்ட வேலைகளில் கெளதம் இப்போது செம பிஸி. கெளதம் மேனனின் ஸ்பெஷலாக அவரது வாய்ஸ்ஓவர் கதை சொல்லும் இந்த குறும்படத்தில் உண்டு. அதற்கான டப்பிங் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. நிச்சயம் இது 90'ஸ் கிட்ஸுக்கு மட்டுமல்லாமல் 2K கிட்ஸுக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்'' என்றார்கள்.

வி ஆர் வெயிட்டிங் கெளதம்!

அடுத்த கட்டுரைக்கு