Published:Updated:

ஷிமோகாவில் ஷூட்டிங்; பெரும் தொகைக்கு சாட்டிலைட் ரைட்ஸ்! - `விஜய் 64' அப்டேட்ஸ்

விஜய் 64
விஜய் 64

இப்படத்தில் கல்லூரியின் புரொஃபஸராக விஜய் நடிக்க, அவருடைய மாணவராக சாந்தனு பாக்யராஜ் நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்பு டெல்லி உட்பட சில இடங்களில் நடைபெற்றது.

விஜய் திரைத்துறைக்கு அறிமுகமான சமயத்தில் தந்தை ஏஸ்.ஏ.சந்திரசேகர் இயக்க, அந்தப் படங்களுக்கெல்லாம் ஃபைனான்ஸ் செய்து உதவியவர் சேவியர் பிரிட்டோ. அதன் பிறகு `இளைய தளபதி'யெனும் பட்டம்பெற்று, தற்போது `தளபதி'யெனும் பட்டத்தோடு வளர்ந்து நிற்கும் விஜய்யின் 64-வது படத்தைத் தயாரிப்பது பிரிட்டோ.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்
அதர்வா தம்பிதான் விஜய் வீட்டு மாப்பிள்ளை... உண்மையாகும் `காதலுக்கு மரியாதை’ க்ளைமேக்ஸ்!

சில வருடங்களுக்கு முன் வெளிவந்த `சட்டம் ஒரு இருட்டறை 2' படத்தை இயக்கிய பிரிட்டோவின் மகளுக்கும், நடிகர் முரளியின் மகன் ஆகாஷுக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் விஜய்யின் 64-வது படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கிக்கொண்டிருக்கிறார். இப்படத்துக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறிக்கொண்டே போகிறது.

இப்படத்தில் கல்லூரியின் புரொஃபஸராக விஜய் நடிக்க, அவருடைய மாணவராக சாந்தனு பாக்யராஜ் நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்பு டெல்லி உட்பட சில இடங்களில் நடைபெற்றது. சமீபத்தில் விஜய்யின் சில போட்டோக்கள்கூட வைரலானது. அதன்பிறகு, சென்னை அம்பத்தூரில் நடைபெற படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்தார் விஜய். இப்படத்தின் சில முக்கியமான போர்ஷன்கள் ஜெயிலில் நடைபெறவிருப்பதால் அதற்காக பிரமாண்டமான செட் போடுவதற்குத் திட்டமிட ஆர்ட் டைரக்டரை அழைத்துப் பேசியுள்ளனர்.

ரஜினியுடன் தனுஷ் நடிக்கிறாரா... உண்மை என்ன? #VikatanExclusive

அந்த ஜெயிலின் செட்டைப் போடுவதற்கு மட்டுமே 20 கோடிகள் வரை பட்ஜெட் செல்லுமெனச் சொல்லப்படுகிறது. இந்தியாவிலிருக்கும் பிற மாநிலங்களில் சினிமா படப்பிடிப்புக்கு வாடகைக்கு விடப்படும் ஒரிஜினல் ஜெயில்களைப் பார்வையிடவும் புறப்பட்டிருந்தது படக்குழு. ஒரு வழியாக கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிமோகா ஜெயிலை செலக்ட் செய்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அதற்காக கர்நாடக அரசிடம் முறையாக அனுமதியும் பெற்றுவிட்டார்.

விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். புத்தாண்டு பிறக்கும் முதல் நாள் வரை முழுவீச்சில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறதாம் படக்குழு. கிறிஸ்துமஸ் பண்டிகையைத் தன் குடும்பத்தினரோடு கொண்டாடுவதுதான் விஜய்யின் வழக்கம். இதனால் விஜய்யை மட்டும் கிறிஸ்துமஸுக்கு அனுப்பி வைத்துவிட்டு மற்ற நடிகர்களின் போர்ஷன்களைப் படமாக்க யோசித்து வருகிறார் லோகேஷ்.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

இப்படத்தில் கூடுதல் ஸ்பெஷல் என்னவென்றால் விஜய்யோடு சேர்ந்து நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமானார். இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. இவர்கள் மோதும் காம்பினேஷன் காட்சிகளைத் திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இப்போது செய்தி என்னவென்றால் ஜெயில் போர்ஷனில் இருவருக்குமான காட்சிகள் படமாக்கப்படவிருக்கிறது. இதற்காக டிசம்பர் 23-ம் தேதி சென்னையிலிருந்து புறப்படும் விஜய் சேதுபதி, ஷிமோகாவில் நடக்கவிருக்கும் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார்.

பொதுவாக படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின் டப்பிங் பணிகள் நடைபெறும். அதன் பிறகு பின்னணி இசையின் வேலைகள் நடக்கும். அத்தனையும் பக்காவான பின் படத்திற்கான ஆடியோ லான்ச், சாட்டிலைட் ரைட்ஸ், ஓவர்சீஸ் வியாபாரம் என இந்த ஆர்டரில்தான் ஒரு படத்தின் வியாபாரம் நடைபெறும். ஆனால், `விஜய் 64' படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் இந்த நேரத்திலேயே படத்திற்கான சாட்டிலைட் உரிமையைப் பெரும் விலை கொடுத்து வாங்கியிருக்கிறது சன் டிவி.

மாளவிகா மோகனன்
மாளவிகா மோகனன்
வக்கீல் அஜித், `ராயப்பன்’ விஜய், பூ புடவை விஜய் சேதுபதி... 2019-ன் டிரெண்டிங் லுக் யாருக்கு?
#VikatanRewind2019 #VikatanPoll

விஜய் நடித்த `வில்லு', `அஜித் நடித்த `ஏகன்' என இரண்டு பெரிய பட்ஜெட் படங்களை தனது ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பாக ஒரே நேரத்தில் தயாரித்தவர் லண்டன் கருணா. தற்போது தமிழ் சினிமா உலகில் கருணா குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், `விஜய் 64' படத்தின் ஓவர்சீஸ் உரிமையை 28 கோடி ரூபாய்க்கு லண்டன் கருணாவுக்குக் கொடுத்திருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு