Published:Updated:

ஜோதிகாவின் `பொன்மகள்' மட்டுமல்ல... இந்த ஹீரோக்களின் படங்களும் OTT ரிலீஸுக்கு வெயிட்டிங்!

அமேஸான், நெட்ஃபிளிக்ஸ் என OTT-யில் நேரடியாக ரிலீஸ் செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படும் படங்களின் பட்டியல் இங்கே!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

காலமாற்றத்திற்கேற்ப ஒவ்வொரு துறையும் தன்னை புதுப்பித்துக் கொண்டேவருகிறது. இப்போது, காலத்தின் சூழலால் தன்னை மாற்றிக்கொள்ளவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது திரைத்துறை. கொரோனாவால், மக்களின் பிரதான பொழுதுபோக்கு அம்சமான திரையரங்குகள், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மூடப்பட்டிருக்கின்றன. இனிவரும் காலங்களிலும் நிலைமை சீராக நேரம் பிடிக்கும் என்றிருக்கும் நிலையில், கடந்த இரண்டு மாதங்களில் திரைக்கு வரவிருந்த படங்கள் எல்லாம் ரிலீஸ் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும், பல படங்கள் OTTயில் நேரடியாக ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவுக்கும் வந்துள்ளன. இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வலுத்துவரும் நிலையில், இன்னும் சுமுகத்தீர்வு எட்டப்படவில்லை.

 OTT
OTT
பொன்மகள் வந்தாள்... புதிய திருப்பம் தருவாளா?
இந்நிலையில் OTT-யில் நேரடியாக ரிலீஸ் செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படும் படங்களின் பட்டியல் இங்கே!

பொன்மகள் வந்தாள்:

பொன்மகள் வந்தாள்
பொன்மகள் வந்தாள்

கடந்த சில ஆண்டுகளாக, பெண்களை மையப்படுத்தி எடுக்கும் படங்களுக்கு தமிழ் சினிமாவில் மார்க்கெட் வேல்யூ அதிகரித்து வருகிறது. ஜோதிகா, நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்கா எனப் பல முன்னணி நடிகைகளும் இதில் கவனம்செலுத்திவருவது, இந்தப் படங்களுக்கான எதிர்பார்ப்பை இன்னும் கூட்டியிருக்கிறது. குறிப்பாக, ஜோதிகா திருமணத்துக்குப் பிறகான இரண்டாவது இன்னிங்ஸில் முழுக்க முழுக்க ‘வுமன் சென்ட்ரிக்’ படங்களில் மட்டுமே கவனம் செலுத்திவருகிறார். ’காற்றின் மொழி’, ‘ராட்சசி’ என இவர் நடித்த பல படங்கள் விமர்சனரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

அந்த வகையில், ஜோதிகா நடிப்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில் ஃப்ரெட்ரிக் இயக்கத்தில் மார்ச் மாதம் இந்தப் படம் வெளியாக இருந்தது. ஆனால், லாக்டெளன் சூழல் காரணமாக ரிலீஸ் எப்போது எனத் தெரியாமல் இருக்க, தற்போது நேரடியாக டிஜிட்டல் ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளது படக்குழு. மே இரண்டாவது வாரம் 'பொன்மகள் வந்தாள்' அமேஸான் ப்ரைமில் நேரடியாக ரிலீஸ் ஆகும் என எதிர்ப்பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரெண்டாவது படம்:

ரெண்டாவது படம்
ரெண்டாவது படம்

‘தமிழ்ப்படம்’ மூலம் தமிழ்ப் படங்களின் க்ளிஷேக்களை கலாய்த்துத் தள்ளிய இயக்குநர் சி.எஸ். அமுதனின் இரண்டாவது படம்தான் இந்த ‘ரெண்டாவது படம்’. பொருளாதார சிக்கல் காரணமாக பல வருடங்களாக ரிலீஸ் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இந்த நிலையில், தற்போது OTT-யில் நேரடி ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. ‘தமிழ்ப்படம்’, ‘தமிழ்ப்படம்-2’ போலவே அமுதனின் ஃபேன்ஸ் 'ரெண்டாவது பட'த்துக்கு ரொம்பவே வெயிட்டிங்.

நரகாசுரன்:

நரகாசுரன்
நரகாசுரன்

’துருவங்கள் பதினாறு’, ‘மாஃபியா’ பட இயக்குநர் கார்த்திக் நரேனின் இயக்கத்தில் அரவிந்த்சாமி, ஷ்ரேயா, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்த படம் 'நரகாசூரன்'. கடந்த மார்ச் மாதம் வெளியிடும் திட்டம் இருந்தது. ஆனால் கொரோனா சூழல் காரணமாக, தியேட்டரில் வெளியிட முடியாமல் இருக்கிறது. கொரோனா சூழல் முடிந்ததும் தியேட்டர்களுக்கு வரும் மக்களின் நிலை, இந்த இடைப்பட்ட காலத்தில் வெளியாகாமல் இருக்கும் பெரிய படங்கள் எனப் பல காரணங்களை மனத்தில் கொண்டு, நேரடி டிஜிட்டல் ரிலீஸுக்குப் பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது.

சர்வர் சுந்தரம்:

சர்வர் சுந்தரம்
சர்வர் சுந்தரம்
`` `என்ன சொல்லப்போகிறாய்' பாட்டு ஷூட்... அஜித் அழுது அன்னைக்குத்தான் பார்த்தேன்!'' - ராஜீவ் மேனன்

செஃப்பாக ஆசைப்படும் கதாநாயகனின் கலக்கல் காமெடி டிராக்தான் `சர்வர் சுந்தரம்'. கடந்த பிப்ரவரி 14-ம் தேதி வெளிவயாகவிருந்த நிலையில், அதே தேதியில் அவர் நடித்த ‘டகால்டி’ படமும் ரிலீஸுக்கு தேதி குறிக்கப்பட்டது. இதனால், ‘சர்வர் சுந்தரம்’ ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டு, ‘டகால்டி’ மட்டும் வெளியானது. இப்போது இந்தப்படம் நேரடி ஓ.டி.டி ரிலீஸுக்கு பேசப்பட்டுவருகிறது.

டக்கர்:

டக்கர்
டக்கர்

நடிகர் சித்தார்த் ‘அருவம்’ படத்துக்குப் பிறகு ‘சைத்தான் கா பச்சா’, ‘டக்கர்’, ‘இந்தியன்-2’ என அடுத்தடுத்து நிறைய படங்களில் கமிட் ஆகியிருந்தார். இந்நிலையில், ஏற்கெனவே, ’டக்கர்’ படத்தின் இயக்குநர் கார்த்திக் இயக்கத்தில் ‘சைத்தான் கா பச்சா’ படம் முதலில் ரிலீஸாக இருந்து, பிறகு தள்ளிப்போனது. இதையடுத்து, கார்த்திக்கின் இயக்கத்தில் ‘டக்கர்’ படத்திலும் கமிட் ஆனார் சித்தார்த். ரொமான்டிக் ஆக்‌ஷன் ஜானரில் இந்தப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தையும் இப்போது ஓ.டி.டி-யில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது.

இந்தப் படங்களைத் தவிர, ‘காக்டெய்ல்’, ‘ஒரு பக்க கதை’ எனப் பல சிறிய பட்ஜெட் படங்கள் இந்த லாக்டெளன் சூழலை கருத்தில் கொண்டு OTT-யில் வெளியாகும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஆனால், இந்தப்படங்களின் தயாரிப்பாளர்கள் அமேஸான், நெட்ஃபிளிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து பெரிய தொகையை எதிர்பார்ப்பதால், பேச்சுவார்த்தை நீடித்துக்கொண்டே போகிறது என்கிறார்கள் சினிமாத்துறையினர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு