Published:Updated:

`கேங்க்ஸ்டர் ஃபகத் ஃபாசில்!' - மீண்டும் இணையும் 'டேக் ஆஃப்' கூட்டணி

உ. சுதர்சன் காந்தி.

2014-ம் ஆண்டு வெளியான 'Bangalore Days' படத்துக்குப் பிறகு, இந்தப் படத்தில் தன் மனைவி நஸ்ரியாவுடன் இணைந்து நடித்திருக்கிறார் ஃபகத். இப்படத்தை டிசம்பர் மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

ஃபகத் பாசில்
ஃபகத் பாசில்

மலையாள சினிமா நடிகர்களில் ஃபகத் ஃபாசில் சற்று வித்தியாசமானவர். தன்னை ஒரு இமேஜுக்குள் வைத்துக்கொள்ளாமல் ஒவ்வொரு படத்திற்குள் தன்னை வித்தியாசமாகக் காட்ட நினைக்கும் கலைஞன். அதேபோல, இவரது சேஞ்ச் ஓவருக்கும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. சமீபமாக இவர் நடித்த 'அதிரன்' படத்துக்குப் பிறகு, 'டிரான்ஸ்' படம் வெளியாகவிருக்கிறது. 2014-ம் ஆண்டு வெளியான 'Bangalore Days' படத்துக்குப் பிறகு, இந்தப் படத்தில் தன் மனைவி நஸ்ரியாவுடன் இணைந்து நடித்திருக்கிறார் ஃபகத். இப்படத்தை டிசம்பர் மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

மாலிக்
மாலிக்

திருமணத்துக்குப் பின் கணவன் - மனைவி இணைந்து நடிக்கும் முதல் படம் என்பதால் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில், புதிய படமொன்றைத் தற்போது ஒப்பந்தம் செய்து அதற்கான படப்பிடிப்புக்கு சென்றுவிட்டார் ஃபகத் ஃபாசில். 'டேக் ஆஃப்' படத்தை இயக்கிய மகேஷ் நாராயணன் இப்படத்தை இயக்குகிறார். இவருக்கு இது இரண்டாவது படம். ஆனால், பல மலையாள படங்களுக்கும் 'விஸ்வரூபம்', 'விஸ்ரூபம் 2', '36 வயதினிலே' உள்ளிட்ட தமிழ்ப் படங்களுக்கும் எடிட்டிங் செய்திருக்கிறார். இந்தப் படத்துக்கு எடிட்டரும் இவரே. கடந்த ஆண்டு 'டேக் ஆஃப்' படம் மூன்று தேசிய விருதுகளைப் பெற்றது. கேங்க்ஸ்டர் கதையில் உருவாகும் இப்படத்துக்கு 'மாலிக்' எனப் பெயரிட்டுள்ளனர். 'டேக் ஆஃப்' படத்துடைய தயாரிப்பாளர்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார்.