Published:Updated:

EXCLUSIVE: மாரி செல்வராஜ் - உதயநிதி ஸ்டாலின் படத்தில் ஃபகத் ஃபாசில்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
உதயநிதி, மாரி செல்வராஜ், ஃபகத் ஃபாசில்
உதயநிதி, மாரி செல்வராஜ், ஃபகத் ஃபாசில்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் ஃபகத் ஃபாசில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'கர்ணன்' படத்தை அடுத்து, பா.இரஞ்சித் தயாரிப்பில் துருவ் விக்ரமை வைத்து கபடி கதையொன்றை இயக்க தயாராகிக் கொண்டிருந்தார் இயக்குநர் மாரி செல்வராஜ். ஆனால், இடையில் உதயநிதி ஸ்டாலின் தனக்கொரு படம் செய்து தரச் சொல்லி கேட்க, அந்தப் படத்துக்கான பணிகள் ஆரம்பமாகின.

உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் நவம்பர், டிசம்பரில் இந்தப் படம் தொடங்கவிருக்கிறது. 40 நாள்கள் ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்கத் திட்டமிட்டிருக்கின்றனர். இனி முழுக்க முழுக்க அரசியலில் மட்டுமே கவனம் செலுத்த இருப்பதால் சினிமாவில் உதயநிதி நடிக்கும் கடைசி படம் இதுதான் என்கிறார்கள். அதனால் இந்தப் படம் மிகச்சிறப்பானதாக வெளிவர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம் உதயநிதி. அதனால்தான் ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைக்கச் சொல்லியிருக்கிறார்கள்.

ஃபகத் பாசில்
ஃபகத் பாசில்
தசராவில் பட பூஜை, பிப்ரவரியில் ஷூட்டிங்... ஹீரோயின் இவர்தானா?! - `விஜய் 66' பட அப்டேட்
இதுதவிர படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள் எனத் தகவல்கள் வந்தன. அதில் ஒருவர் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில். ஆம்! இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார், ஃபகத்.

இந்தியாவின் முன்னணி நடிகராக முக்கிய அடையாளம் பெற்றிருக்கும் ஃபகத் தற்போது கமல் ஹாசனுடன் 'விக்ரம்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அடுத்து மாரி - உதயநிதி படத்தில் நடிக்கிறார் ஃபகத். மேலும் இந்தப் படத்தில் பல முக்கிய நடிகர்கள் இணைய இருப்பதாக தகவல்கள் பரபரக்கின்றன.

காத்திருப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு