Published:Updated:

`என்.டி.ஆர்' முதல் `தலைவி' வரை... அரசியல் தலைவர்களின் பயோபிக்-கள் கிளப்பிய சர்ச்சைகள்!

அவர்களது தொண்டர்களுக்குப் பிடித்துப்போனால் முக்கியத்துவம் வகிக்கும். அதுவே பிடிக்காமல்போய் முரண் ஏற்பட்டால் சர்ச்சைக்குள் சிக்கும். இதில் எதிர்க்கட்சிகளின் தலையீடும் அதிகளவில் இருக்கும். இதுதான் காலங்காலமாக நடந்துகொண்டிருக்கிறது.

1
Bio-pics

`கடவுளில் ஆரம்பித்து கட்டபொம்மன் வரை அனைத்தையும் கண்ணில் காட்டியது சினிமாதான்' என்று சினிமாவுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. சினிமா, அது தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை எளிய மக்களுக்கான வலிமை மிகுந்த கலை ஊடகமாகத் திகழ்ந்து வருகிறது. அதற்கு மிக முக்கியக் காரணம், கலையைக் காட்சியாக நாம் திரையில் பார்க்கும்போது, அதன் தாக்கமும் அதற்குள் இருக்கும் ஜீவனும் நெடுநாள் வரை நம்முடைய ஞாபகத்திலிருக்கும். அந்த வகையில் ஒருவரது வாழ்க்கையை எழுத்து வடிவத்தில் படிப்பதைவிட, படமாகப் பார்க்கும்போதுதான் மக்களைச் சென்றடைவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருக்கின்றன. அதுவும் அரசியல் தலைவர்களின் பயோபிக் என்றால் சொல்லவே தேவையில்லை. அவர்களது தொண்டர்களுக்குப் பிடித்துப்போனால் முக்கியத்துவம் வகிக்கும், அதுவே பிடிக்காமல்போய் முரண் ஏற்பட்டால் சர்ச்சைக்குள் சிக்கும். இதில் எதிர்க்கட்சிகளின் தலையீடும் அதிகளவில் இருக்கும். இதுதான் காலங்காலமாக நடந்துகொண்டிருக்கிறது. 

அந்த வகையில் தற்போது `தலைவி' ஃபீவரில் தகித்துக்கொண்டிருக்கிறது கோலிவுட். மறைந்த முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவின் பயோபிக்கில், பல்வேறு தேடுதலுக்குப் பிறகு, கங்கனா ரனாவத் நடிக்க ஒப்பந்தமானார். பணிகளும் ஆரம்பிக்கப்பட்டன. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதைத் தொடர்ந்து தற்போது யூடியூபில் டீஸரும் வெளியாகியிருக்கிறது. அதைப் பற்றி சில பாசிட்டிவ் கமென்ட்கள் வந்தாலும், பலரும் அதை விமர்சிக்கவே செய்கிறார்கள். இதைத் தொடர்ந்து, இந்த வருடம் வெளியாகியிருக்கும் சில அரசியல் தலைவர்களின் பயோபிக்கள் சர்ச்சைகளில் சிக்கியது. அதைப் பற்றிய ஓர் அலசல் கட்டுரைதான் இது!

2
The Accidental Prime Minister

தி ஆக்சிடென்ட்டல் பிரைம் மினிஸ்டர்:

பொருளாதார மேதையும் முன்னாள் இந்தியப் பிரதமருமான மன்மோகன் சிங்கின் அரசியல் வாழ்க்கை குறித்த படமே, `தி ஆக்சிடென்ட்டல் பிரைம் மினிஸ்டர்'. காங்கிரஸ் தலைமையிலான மன்மோகன் சிங்கின் ஆட்சிக்காலம், பிரதமராக அவரது செயல்படுகள், அமைச்சரவை போன்ற விஷயங்களை இப்படம் பேசியது.

சர்ச்சை:

மன்மோகன் சிங்கின் மீடியா அட்வைசரான சஞ்சய் பாரு என்பவரால் எழுதப்பட்ட புத்தகமே `தி ஆக்சிடென்ட்டல் பிரைம் மினிஸ்டர்'. இதைத் தழுவிதான் படத்தையும் எடுத்திருந்தனர். மன்மோகன் சிங் ஆட்சியில் சோனியாவின் தலையீடு நேரடியகவே இருந்ததாக அந்தப் புத்தகத்தில் வெளிப்படையாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. புத்தகத்தில் இருந்தது அப்படியே படமாக்கப்பட்டதால் காங்கிரஸ் தரப்பிலிருந்து உடனடியாக எதிர்ப்பு கிளம்பியது. அந்தச் சமயத்தில் படக்குழுவினர் தங்களுடைய பாதுகாப்புக்காக முறையிட்டிருதனர். பல்வேறு தடைகளைக் கடந்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரீலிஸானது. 

3
பிஎம் நரேந்திர மோடி

பிஎம் நரேந்திர மோடி:

பாலிவுட்டின் முக்கிய நடிகரான விவேக் ஓபராய், இப்படத்தில் நரேந்திர மோடியாக நடித்திருந்தார். சிறுவயதில் மோடி டீக்கடையில் வேலைபார்த்ததிலிருந்து, ஆர்எஸ்எஸ்-ஸில் சேர்ந்தது, இறுதியில் பிரதமரானது என அவரது வாழ்க்கையின் முக்கிய கட்டங்கள் அனைத்தும் இப்படத்தில் பேசப்பட்டன.

Vikatan

சர்ச்சை:

படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்து வெளியானது வரை பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிச் சுழன்றது இப்படம். மக்களவை முதல்கட்ட தேர்தல் சமயத்தில் வெளியாகவிருந்ததால் காங்கிரஸ் உள்ளிட்ட பா.ஜ.க-வின் சில எதிர்க்கட்சிகள் படத்தின் மீது எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். `மோடியின் பாசிட்டிவ் பக்கங்கள் மட்டுமே படமாக்கப்பட்டுள்ளன' என்பது எதிர்ப்பை முன்வைத்தவர்களின் மேஜர் குற்றச்சாட்டு. ஒரு வழியாகப் பல எதிர்பார்ப்புகளைக் கடந்து, ஏப்ரல் மாதம் வெளியானது.

4
தாக்கரே

தாக்கரே:

சிவ சேனா கட்சியின் நிறுவனரான பால் தாக்கரேயின் பயோபிக்தான் `தாக்கரே'. பாலிவுட்டின் முன்னணி நடிகரான நவாஸூதின் சித்திக் தாக்கரேவாக நடித்திருந்தார். பத்திரிகை ஒன்றில் கார்ட்டூனிஸ்ட்டாக இருந்து, ஒரு கட்சியின் நிறுவனராக வளர்ந்தது வரை அவரது வாழ்க்கையைச் சொன்னது. பத்திரிகையில் பணிபுரிந்த சமயம் அரசுக்கு எதிராக கார்ட்டூன் வரைவது, இதையடுத்து அவரது வேலை சுதந்திரம் முடக்கப்பட்டது, பின் அதிலிருந்து விலகி வேறொரு பத்திரிகை தொடங்கியது, இறுதியாகக் கட்சி நிறுவனராக செல்வாக்குப் பெற்றது எனத் தாக்கரேயின் வாழ்க்கையையும் வளர்ச்சியையும் சொன்ன படம் `தாக்கரே'.

Vikatan

சர்ச்சை:

பாசிட்டிவ் பக்கங்கள் மட்டுமே பெரும்பாலும் படமாக்கப்பட்டதும், தேர்தலை மனதில்கொண்டே உருவாக்கப்பட்ட படம் என்றும் எதிர்க்கட்சிகள் இந்தப் படத்தின் மீது குற்றச்சாட்டு தெரிவித்திருந்தனர். எதிர்ப்புகளைக் கடந்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் இப்படம் வெளியானது.

5
என்.டி.ஆர்

என்.டி.ஆர்:

சாதாரண ஒருவராக திரைத்துறைக்குள் நுழைந்து மக்கள் ஏற்றுக்கொண்ட அரசியல்வாதியாகத் திகழ்ந்த என்.டி.ஆரின் கதையே இப்படம். என்.டி.ஆரின் சினிமா பயணத்தில் ஆரம்பித்து அரசியல் பயணம்வரை இரண்டு பாகமாக எடுத்திருந்தனர். என்.டி.ஆராக அவரின் மகன் பாலகிருஷ்ணா நடித்திருந்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் `கதாநாயகடு', `மகாநாயகடு' என அடுத்தடுத்த வாரம் வெளியாகின!

சர்ச்சை:

`தாக்கரே' படத்தைப் போலவே, என்.டி.ஆர் பயோபிக்கிலும் அவரது பாசிட்டிவ் பக்கங்கள் மட்டுமே படமாக்கப்பட்டுள்ளதாக சர்ச்சைகள் எழுந்தன. இதைத் தொடர்ந்து பயோபிக்குக்கான லைனிலிருந்து படமும் சறுக்கியது.

அரசியல் தலைவர்களின் பர்சனல் பக்கங்கள், பொது வாழ்வின் நெகட்டிவ் பக்கங்கள், படங்களையே தேர்தல் அஸ்திரமாகப் பயன்படுத்துவது, எதிர்க்கட்சிகளின் தலையீடு, பயோபிக்குக்கான வரையறையை சமன் செய்யாமல்போனது எனப் பல காரணங்களால் ஒவ்வொரு முறையும் அரசியல் தலைவர்களின் பயோபிக்குக்கு இப்படி வெவ்வேறு காரணங்கள் கொண்டு சர்ச்சைகள் கிளம்பின.

அடுத்த கட்டுரைக்கு