Published:Updated:

"`புஷ்பா' சமந்தா பாட்டுல ஒரு நிமிஷத்தை எடிட்ல தூக்கிட்டேன்; `அயலான்' சீக்ரெட்ஸ்..."- எடிட்டர் ரூபன்

எடிட்டர் ரூபன்

"பத்து படங்கள் எடிட்டரா வொர்க் பண்ணிட்டு, அப்புறம் டைரக்ஷன் பக்கம் போயிடலாம்னு நினைச்சேன். ஆனா, இப்போ 65 படங்கள் பண்ணிட்டேன். எப்போ நேரம் அமையும்னு தெரியலை. நிறைய கதைகள் எழுதி வெச்சிருக்கேன். எடிட்டர் ரூபனை நம்புனவங்க டைரக்டர் ரூபனை நம்பணும்."- எடிட்டர் ரூபன் பேட்டி

"`புஷ்பா' சமந்தா பாட்டுல ஒரு நிமிஷத்தை எடிட்ல தூக்கிட்டேன்; `அயலான்' சீக்ரெட்ஸ்..."- எடிட்டர் ரூபன்

"பத்து படங்கள் எடிட்டரா வொர்க் பண்ணிட்டு, அப்புறம் டைரக்ஷன் பக்கம் போயிடலாம்னு நினைச்சேன். ஆனா, இப்போ 65 படங்கள் பண்ணிட்டேன். எப்போ நேரம் அமையும்னு தெரியலை. நிறைய கதைகள் எழுதி வெச்சிருக்கேன். எடிட்டர் ரூபனை நம்புனவங்க டைரக்டர் ரூபனை நம்பணும்."- எடிட்டர் ரூபன் பேட்டி

Published:Updated:
எடிட்டர் ரூபன்

கடந்த பத்து வருடங்களில் சூப்பர்ஹிட்டான பெரும்பாலான படங்களுக்கு ரூபன்தான் எடிட்டர். ரஜினி முதல் சிவகார்த்திகேயன் வரை அனைத்து முன்னணி நாயகர்களின் படங்களிலும் எடிட்டராக பணியாற்றி இருக்கிறார். ஆண்டனியின் சிஷ்யனான இவரைப் பார்த்து இன்ஸ்பயராகி, பல இளைஞர்கள் இன்று எடிட்டிங் துறைக்குள் நுழைகின்றனர். ரூபன் பார்ப்பதற்கு சாந்தசொரூபனாக இருந்தாலும் 'வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்' மோடுக்கு போய்விடுவார். இவரின் கட்ஸுக்கு அத்தனை டிமாண்ட். அவரை சந்தித்து பத்து வருட சினிமா பயணம், அடுத்தடுத்த படங்கள் என பல விஷயங்களை கேட்டறிந்தேன்.

சினிமாவுக்குள்ள வந்து பத்து வருடங்கள் நிறைவடைஞ்சிருக்கு. எப்படியிருக்கு?

உங்க குரு ஆண்டனி சொன்னதை இப்போவும் கடைபிடிக்கிற விஷயம் என்ன?

இந்த சீன் வொர்க் அவுட்டாகும் ஆகாதுனு எடிட்டர் எடுக்கிற முடிவுக்கு பின்னாடி எவ்வளவு யோசனைகள் இருக்கும்?

அதிக நேரம் எடுத்துக்குவேன்னு சொல்றீங்க. அப்புறம் எப்படி ஒரே சமயத்துல இத்தனை படங்களுக்கு வேலை செய்றீங்க?

படத்துடைய நீளம் எவ்வளவுனு முன்னாடியே தெரிஞ்சிடுது. அதைப் பார்த்தே அயர்ச்சியாகிடுறாங்க. ஒரு படத்துடைய நீளத்தைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?

இயக்குநர் பாண்டிராஜ் கூட 'எதற்கும் துணிந்தவன்' படத்துல மூணாவது முறையா இணைஞ்சிருக்கீங்க. எப்படி வந்திருக்கு?

நடிகர்கள் சில குறிப்பிட்ட சீனை எதிர்பார்த்து இருப்பாங்க. ஆனா, அதை நீங்க எடிட்ல தூக்கியிருப்பீங்க. அப்படி யாராவது உங்கக்கிட்ட கோவப்பட்டிருக்காங்களா? உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில் இந்த வார ஆனந்த விகடன் இதழில் வெளியாகியிருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

'வேதாளம்'ல இருந்து இப்போ 'அண்ணாத்த' வரை இயக்குநர் சிவாவோடு பயணிக்கிறீங்க. உங்களுக்கும் அவருக்குமான அறிமுகம் எப்படி?

எடிட்டர் ரூபன்
எடிட்டர் ரூபன்

"'வீரம்' படம் முடிஞ்ச சமயத்துல, அந்தப் படத்துல அசிஸ்டென்ட் சவுன்ட் டைசனரா வேலை செஞ்ச என் நண்பர் சுரேன்கிட்ட டிரெய்லர் கட் பண்ண யாராவது இருந்தா சொல்லுங்கன்னு சிவா சார் சொல்லிருக்கார். சுரேன் என் பெயரை சொல்லியிருக்கார். அப்போதான் நான் சிவா சாரை முதன்முதல்ல சந்திச்சேன். நான் பண்ணின டிரெய்லர்கள் எல்லாத்தையும் காட்டினேன். 'நான் எந்த இன்புட்டும் உங்களுக்குக் கொடுக்கலை. நீங்களே உங்களுக்கு தோணுறதை எடிட் பண்ணி கொடுங்க'னு சொன்னார் சிவா சார். அப்படிதான் 'வீரம்' படத்துடைய டிரெய்லரை கட் பண்ணி கொடுத்தேன். அவருக்கு ரொம்பப் பிடிச்சுப்போய், 'அடுத்தப் படம் வொர்க் பண்ணலாம்'னு சொன்னார். இப்படி சொல்றது 90% நடக்காது. காரணம், அந்த சமயத்துல ஒரு சந்தோஷத்துல சொல்வாங்க. ஆனா, அடுத்தப் படம் பண்ணும்போது வெவ்வேற டென்ஷன்ல மறந்திடுவாங்க. ஆனா, சிவா சார் என்னை ஞாபகம் வெச்சு 'வேதாளம்' படத்துக்குக் கூப்பிட்டார். அன்னைக்கு சொன்ன வார்த்தையை மறக்காமல் இப்போ 'அண்ணாத்த' வரை கடைபிடிச்சுக்கிட்டிருக்கார். என்னால சில தவறுகளும் நடந்திருக்கு. இருந்தாலும், என் மேல நம்பிக்கை வெச்சு அடுத்தடுத்து அவர்கூட பயணிக்க வெச்சுக்கிட்டிருக்கார். என் கரியர்ல மட்டுமல்ல என் வாழ்க்கையிலயும் எனக்கு கிடைச்ச பொக்கிஷம் சிவா சார்."

உங்கக்கிட்ட வொர்க் பண்ணினா, அடுத்து வேற எந்த எடிட்டர்கிட்டேயும் போக முடியாதபடி கட்டிப்போட்டு வெச்சிடுறீங்களே!

"கட்டிப்போடுறதெல்லாம் இல்லை. இது நல்லாயிருக்கு, இது நல்லாயில்லைனு நான் நேரடியா அவங்கக்கிட்டயே சொல்லிடுவேன். அந்த குணம்தான் தொடர்ந்து அவங்களை என் கூட வேலை செய்ய வெக்குதுனு நினைக்கிறேன். ஒவ்வொரு படம் முடியும்போதும் என் மேல அந்த இயக்குநருக்கு அவ்வளவு கோவம் இருக்கும். நான் நிறைய நேரம் எடுத்துக்குவேன். அப்படி நான் எடுத்துக்குற நேரம்தான் மெருகேத்த உதவுது. நான் அதிக நேரம் எடுத்துக்குறேன்னு என்மேல கோவமா இருப்பாங்க. ஆனா, அவுட்புட் பார்த்தவுடன் அவங்களுக்கு அந்த கோவம் போயிடும். அது அவனுடைய படம்னு நினைச்சு வேலை செஞ்சு கொடுக்குறான்னு இயக்குநர்களுக்கு என் மேல நம்பிக்கை இருக்குனு நினைக்கிறேன்."

ஒரு படத்துக்குள்ள வர்றீங்கன்னா, எங்க ஆரம்பிச்சு எப்படி முடிப்பீங்க?

எடிட்டர் ரூபன்
எடிட்டர் ரூபன்

"படத்துடைய ரஷ் வந்தவுடன், இயக்குநருக்கு காட்டுறதுக்காக பேஸிக் கட் பண்ணி அவங்க புரிதலுக்குக் காட்டுவோம். இப்போ அதை ஸ்பாட்லயே பண்னிடுறாங்க. என் அசிஸ்டென்ட்ஸ் யாரவாது ஸ்பாட்டுக்கு போய் அங்கேயே கட் பண்ணி இயக்குநருக்கு காட்டிருவாங்க. இங்க எடிட் டேபிளுக்கு வரும்போது, அதுல நான் வொர்க் பண்ணி அந்த போர்ஷனை முடிச்சிடுவேன். ஒரு சீனை எடிட் பண்ணும்போது 300 முறை கூட பார்ப்பேன். ஆனா, படமா ரெண்டு முறைதான் பார்ப்பேன். ஃபைனல் ட்ரிமுக்கு முன்னால், பின்னால். அப்போ ஏதாவது குறைகள் இருந்தால் அதை சரிபண்ணிடுவேன். நிறைய முறை படமா பார்க்கும்போது, இதை இப்படி பண்ணலாமா அப்படி பண்ணலாமானு நிறைய தோணிக்கிட்டே இருக்கும். அதனால ஒரு படத்தை முழுமையா முடிச்சுட்டா, உடனே கிளம்பி அடுத்த வேலைக்கு போயிடுவேன்."

நீங்க பெரும்பாலும் பெரிய ஹீரோக்களுடைய படங்கள்லதான் வேலை செஞ்சிருக்கீங்க. அதெல்லாம் உங்களுக்கு எங்கேயாவது ப்ரஷரைக் கொடுத்திருக்கா?

"நிச்சயமா அந்த ப்ரஷர் எனக்கு வந்ததில்லை. இப்போ நான் சொல்லப்போற உதாரணம் தவறா இருக்கலாம். சலூன் கடை வெச்சிருக்கிறவருக்கு தான் கடைக்கு பணக்காரன் வந்தாலும் ஏழை வந்தாலும் வெட்டுறவங்களுக்கு எல்லாமே முடிதான். எல்லா படமும் ஒண்ணுதான். எல்லாத்தையும் நமக்குக் கிடைச்சிருக்கிற முதல் வாய்ப்பு, இன்னைக்குதான் கடைசி நாள்ங்கிற மாதிரி வேலை செய்யணும். பெரிய ஹீரோக்களுடைய இன்ட்ரோ சீன், மாஸ் சீன் பண்ணும்போது ஒரு ரசிகன் மனநிலைக்கு போயிடுவேன். மத்தபடி எல்லா படத்துக்கும் ஒரே உழைப்புதான்."

பாடல்கள் எடிட் பண்ணும்போது என்ன மனநிலையில இருப்பீங்க?

எடிட்டர் ரூபன்
எடிட்டர் ரூபன்

"செம ஜாலியான மனநிலையில இருப்பேன். படத்தை எல்லாம் முடிச்சுக் கொடுத்துட்டு கடைசியா எல்லா பாடல்களையும் எடிட் பண்ண ஆரம்பிப்பேன். ஆனா, பாடல்கள்தான் முதல்ல ரிலீஸாகும். சில பாடல்களை ட்ரிம் பண்ணிடுவேன். அதுக்காக, மியூசிக் டைரக்டர்களுக்கு என்மேல வருத்தம் இருக்கும். பாடல்கள் ஆடியன்ஸ் ரிலாக்ஸ் பண்றதுக்காக வைக்கிறது. அது மூன்றரை நிமிஷம் இருந்தால் 30 நொடியை குறைச்சு மூணு நிமிஷமாக்கிடுவேன். 'புஷ்பா' படத்திலேயே 'ஊ சொல்றியா மாமா' பாடல்ல ஒரு நிமிஷத்தை தூக்கிட்டேன். தயாரிப்பாளர் என்னை பார்க்கும்போதெல்லாம் அதைப் பத்தி கேட்பார். சில படங்கள்ல பாடல்களையே தூக்குற மாதிரி இருக்கும். பாடல்களுக்கு தனியா செலவு பண்ணி பிரமாண்டமா எடுப்பாங்கதான். ஆனா, கதையோட்டத்துக்கு இடையூறா இருந்தால் மனசை கல்லாக்கிட்டு பாடல்களை கட் பண்ணிதான் ஆகணும். மத்தப்படி பாடல்கள் எடிட் பண்றது எனக்கு ரொம்பப் பிடிக்கும். நிறைய வித்தியாசமா முயற்சி பண்ணிப் பார்ப்பேன்."

சமீபமா 'புஷ்பா' படத்துல வேலை செஞ்சிருக்கீங்க. எப்படி இருந்தது அந்த அனுபவம்?

"புது ஊர், புது மனிதர்கள். இதுக்கு முன்னாடி நிறைய வாய்ப்புகள் தெலுங்குல இருந்து வந்தது. நம்ம அங்க போய் வொர்க் பண்ணணும்னு எதிர்பார்ப்பாங்க. அப்போ நேரமின்மைனால பண்ண முடியலை. நான் ஆரம்பத்துல நிறைய படங்களுக்கு டிரெய்லர் கட் பண்ணிக்கொடுத்துட்டு இருந்தேன். 500 ரூபாய், 1000 ரூபாய்க்கெல்லாம் டிரெய்லர் பண்ணிக் கொடுத்திருக்கேன். அந்தச் சமயத்துல ஒரு தெலுங்கு படத்துக்கு பண்ணி கொடுத்தேன். அதுல எனக்கு பழக்கமான தயாரிப்பாளர் 'புஷ்பா' படத்துடைய தயாரிப்பாளருக்கு நெருக்கம். 'புஷ்பா' படத்துக்கு டிரெய்லர் எடிட் பண்ணதான் அந்தப் படத்துக்குள்ள போனேன். ஆனா, அவங்க டிரெய்லர் பார்த்துட்டு, இன்னொரு எடிட்டர் இருக்காங்க. நீங்க இன்னொரு வெர்ஷன் கட் பண்ணிக்கொடுங்க'னு கேட்டாங்க. இயக்குநர் சுகுமார் சாருடைய அணுகுமுறை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதனால, நோ சொல்லத் தோணலை. உடனே ஓகே சொல்லிட்டேன். 'புஷ்பா' ரிலீஸுக்கு கடைசி ரெண்டு மாசத்துக்கு முன்னாடிதான் நான் போனேன். எனக்கு இங்கேயே அவ்வளவு வேலை இருந்தது. என் சூழலை புரிஞ்சுக்கிட்டு இங்கிருந்து நம்ம இயக்குநர்கள் எனக்காக அங்க வந்தாங்க. அவங்களுக்கு நன்றி சொல்லிக்கிறேன். மதியம் வரை தமிழ் படம் எடிட் பண்ணுவேன். மதியத்துல இருந்து நைட் வரை 'புஷ்பா' எடிட் பண்ணுவேன். அப்புறம், மறுபடியும் ரூமுக்கு வந்து தமிழ் படம் எடிட் பண்ணுவேன். இப்படிதான் போய்க்கிட்டிருந்தது. எவ்வளவு ப்ரஷர் எனக்குள்ள இருந்தாலும் 'புஷ்பா' இயக்குநர் சுகுமார் சார்கூட இருக்கும்போது சிரிச்சுக்கிட்டே இருந்தேன். என்னை நல்லா பாத்துக்கிட்டாங்க."

ஒரு டிரெய்லர் கட் பண்ண எவ்வளவு நேரம் எடுத்துக்குவீங்க?

எடிட்டர் ரூபன்
எடிட்டர் ரூபன்

"படத்துக்கு படம் மாறும். 'ராஜா ராணி' டிரெய்லர் நாலஞ்சு நாள் தேவைப்பட்டது. 'அண்ணாத்த' டிரெய்லர் ஒரு நாள்ல முடிச்சு கொடுத்துட்டேன். 'புஷ்பா' படத்துடைய கடைசியா வந்த டிரெய்லரை சாயந்திரம் நாலு மணிக்கு ஆரம்பிச்சு மறுநாள் காலையில 8 மணிக்கு முடிச்சேன். படத்தை எந்தளவுக்கு புரிஞ்சிருக்கோம் அப்படிங்கிறதை பொறுத்துதான் டிரெய்லர் கட் பண்ணும்போது ஒரு மேஜிக் நடக்கும்."

உங்க நண்பர் அட்லி அடுத்து ஷாரூக் கானை இயக்குகிறார். நீங்க அவரை சந்திச்சீங்களா?

"ஷாரூக் கான் சாரை சந்திச்சு பேச வாய்ப்பு கிடைச்சது. மறக்க முடியாத மொமன்ட் அது. அந்த இடத்துல நம்ம கொடி நாட்டுற படமா இருக்கும். மொத்த டீமும் நம்ம ஊர்க்காரங்கதான். ரொம்பப் பெரிய படம். எல்லோருடைய கரியர்லயும் இது ரொம்ப முக்கியமான படம். எங்களை நம்புன ஷாரூக் சாருக்கும் என் மேல நம்பிக்கை வெச்ச அட்லிக்கும் நன்றி. அவர் செம ஜாலி டைப். அவர்கூட இருக்கும்போது நம்மளை சிரிக்க வெச்சுக்கிட்டே இருப்பார். என்ன நடந்தாலும் செம பாசிட்டிவா இருக்கிற மனிதர். அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சீக்கிரமே வந்திடும்."

எல்லோரும் எதிர்பார்த்துட்டு இருக்கிற 'அயலான்' எந்தளவுல இருக்கு?

"`புஷ்பா' சமந்தா பாட்டுல ஒரு நிமிஷம் எடிட்ல தூக்கிட்டேன்; `அயலான்' சீக்ரெட்ஸ்..." - எடிட்டர் ரூபன்

சினிமாவுக்கு வந்து இவ்வளவு அனுபவம் கிடைச்சிருக்கு. இதுக்குப் பிறகு, என்னெல்லாம் பண்ணணும்னு நினைக்கிறீங்க?

"ஃபிலிம் மேக்கிங்ல ஆர்வம் வந்தவுடனே எனக்கு இயக்குநராகணும்னு தோணுச்சு. அது என்னுடைய கனவு மட்டுமல்ல என் வாழ்க்கையில முக்கியமான ஒரு நபருடைய கனவும் கூட. நான் எடிட்டரா உள்ள வந்துட்டேன். பத்து படங்கள் எடிட்டரா வொர்க் பண்ணிட்டு, அப்புறம் டைரக்ஷன் பக்கம் போயிடலாம்னு நினைச்சேன். ஆனா, ஒரு படம் முடிஞ்சவுடன் அடுத்து அடுத்துனு இப்போ 65 படங்கள் பண்ணிட்டேன். எப்போ நேரம் அமையும்னு தெரியலை. நான் எடிட்டிங்ல இருந்தாலும் நிறைய கதைகள் எழுதி வெச்சிருக்கேன். எடிட்டர் ரூபனை நம்புனவங்க டைரக்டர் ரூபனை நம்பணும். அந்த நம்பிக்கை யாருக்கு வருதோ அவங்களுக்கு நான் உண்மையா வேலை செய்வேன். நிச்சயம் நடக்கும்னு எதிர்பார்க்கிறேன்."