சினிமா
பேட்டிகள்
Published:Updated:

“தேசிய விருது வாங்கியது நிறையபேருக்குத் தெரியாது!”

சாபு ஜோசப்
பிரீமியம் ஸ்டோரி
News
சாபு ஜோசப்

ஒரு பேய்க் கதை வெச்சிருக்கேன்'னு சொல்லி `ஈரம்' படத்துடைய கதையைச் சொன்னார். சூப்பரா இருந்தது.

சாபு ஜோசப்... தன் இரண்டாவது படமான `வல்லினம்' படத்திற்கு தேசிய விருது வென்று நம்மை கவனிக்க வைத்தவர். கோலிவுட்டில் எடிட்டிங் துறையில் சைலன்டாகத் தன் இருப்பைப் பதிவு செய்துவரும் இவர், தன்னுடைய கரியர் பற்றி நம்மிடம் மகிழ்ச்சியாகப் பகிர்ந்துகொள்கிறார்.

 “தேசிய விருது வாங்கியது நிறையபேருக்குத் தெரியாது!”
 “தேசிய விருது வாங்கியது நிறையபேருக்குத் தெரியாது!”

``என் குடும்பத்துக்கும் சினிமாவுக்கும் சம்பந்தமே இல்லை. சென்னையில பிறந்து வளர்ந்திருந்தாலும் கோடம்பாக்கம், வடபழனி பக்கம் வந்ததேயில்லை. விஷுவல் கம்யூனிகேஷன் படிச்சு முடிச்சவுடன், அடுத்து எடிட்டிங் கத்துக்கலாம்னு நினைச்சேன். ஆனா, அது தொடர்பா யாரையும் தெரியாது. எங்க வீட்டுக்கு எதிர்ல மளிகைக்கடை வெச்சிருந்த கஜேந்திரன் அண்ணன் எனக்கு நல்ல பழக்கம். அவர்கிட்ட 'அடுத்து எடிட்டிங் பண்ணலாம்னு இருக்கேன். ஆனா, எப்படிப் போறதுன்னு தெரியலை'ன்னு அடிக்கடி சொல்லியிருக்கேன். அவருக்குத் தெரிஞ்சவர் மூலமா ஒருத்தர் அறிமுகமாகி, ஒளிப்பதிவாளர் நித்யாவைப் பார்க்க ஏவிஎம் ஸ்டூடியோவுக்குப் போனேன். பாண்டியராஜன் சாருடைய படங்களுக்கு இவர்தான் ஒளிப்பதிவாளர். 'என்ன ஆகணும்னு நினைக்கிற'ன்னு கேட்டார். `எடிட்டிங் கத்துக்கணும்’னு சொன்னேன். எடிட்டர் வி.எம்.உதயசங்கர் சார்கிட்ட என்னை அறிமுகப்படுத்திவெச்சார். முதல்முறையா ஜெமினி லேபுக்குள்ள போய் அங்க நடக்கிற விஷயங்களெல்லாம் பார்க்கும்போது வியப்பா இருந்தது. எடிட்டிங்னா என் மனசுக்குள்ள வேற மாதிரி கற்பனை இருந்தது. அங்கபோனா, மேனுவல் எடிட்டிங்தான். நாமதான் எல்லாமே பண்ணணும். தப்பான இடத்துக்கு வந்துட்டோமான்னு மனசுக்குள்ள பயமிருந்தாலும் அந்த ப்ராசஸை என்ஜாய் பண்ணினேன். அப்போ கூட இருந்தவங்க, `இனிமே எல்லாம் டிஜிட்டல்தான், அதைக் கத்துக்கோ'ன்னு சொன்னாங்க. உதயசங்கர் சாருடைய அசிஸ்டென்ட் ரவி என்கிட்ட, `திருடா திருடி' எடிட்டர் ஹர்ஷா ஒரு டிஜிட்டல் எடிட்டிங் ஸ்டூடியோ ஆரம்பிக்கிறார். அங்க சேர்ந்துக்கிறியா'ன்னு கேட்டார். அப்படி அங்க போனேன். ஹர்ஷா சாரும் ஆண்டனி சாரும் சேர்ந்து `கட்டிங் அண்ட் ஒட்டிங்'னு ஒரு ஸ்டூடியோ ஆரம்பிச்சிருந்தாங்க. அங்க சேர்ந்து ரெண்டு வருஷம் வேலை செஞ்சேன். ரியாஸ், விவேக் ஹர்ஷன், என் மனைவி ராஜலக்ஷ்மி (அப்போ எங்களுக்கு கல்யாண ஆகலை!) நாங்க எல்லோரும் ஒரு டீமா இருந்தோம். பிலிம் எடிட்டிங்ல இருந்து டிஜிட்டல் எடிட்டிங் மாறிக்கிட்டிருந்த சமயம். எல்லோரும் ஆபீஸை விட்டுப் போன பிறகு, நைட் 2 மணியிலிருந்து 6 மணி வரை விவேக் ஹர்ஷன்தான் எனக்கு டிஜிட்டல் எடிட்டிங் சொல்லித்தருவார். அப்படித்தான் கத்துக்கிட்டேன். விவேக்குக்குத்தான் நன்றி சொல்லணும்.''

 “தேசிய விருது வாங்கியது நிறையபேருக்குத் தெரியாது!”
 “தேசிய விருது வாங்கியது நிறையபேருக்குத் தெரியாது!”

``முதல் படம் `ஆண்மை தவறேல்' வாய்ப்பு எப்படி வந்தது?’’

``2006க்குப் பிறகு, `சத்தம் போடாதே', `பள்ளிக்கூடம்' படங்களுடைய எடிட்டர் சதீஷ்கிட்ட வொர்க் பண்ணினேன். அப்போ `சொல்லியடிப்பேன்'னு விவேக் சார் லீடு ரோல்ல நடிச்ச படம். அந்தப் படத்துடைய உதவி இயக்குநரா வேலை செஞ்சவர் குழந்தை வேலப்பன். ஆண்டனி சார்கிட்ட இருந்ததனால, பாடல்கள் எல்லாம் புதுசுபுதுசா பண்ணிட்டிருந்தேன். அது பிடிச்சுப்போய், `நான் எப்போ படம் பண்ணினாலும் நீதான் எடிட்டர்'னு கையில அட்வான்ஸா 20 ரூபாய் கொடுத்தார். அதே மாதிரி, அவருடைய முதல் படம் `ஆண்மை தவறேல்' பண்ணும்போது என்னைக் கூப்பிட்டார். அப்படித்தான் என் முதல் படமும் அமைஞ்சது.''

 “தேசிய விருது வாங்கியது நிறையபேருக்குத் தெரியாது!”

`` `ஈரம்' டிரெய்லர், `வல்லினம்', இப்போ `பார்டர்'னு தொடர்ந்து அறிவழகன்கூட பயணிக்கிறது எப்படி இருக்கு?’’

``23 ஸ்டூடியோஸ்னு ஒரு இடத்துல வேலை செஞ்சேன். அதனுடைய ஓனர் அருணும் அறிவழகன் சாரும் நண்பர்கள். `ஒரு பேய்க் கதை வெச்சிருக்கேன்'னு சொல்லி `ஈரம்' படத்துடைய கதையைச் சொன்னார். சூப்பரா இருந்தது. அதைச் சின்ன புரொமோ மாதிரி ஷூட் பண்ணிருக்கேன்னு அதையும் காட்டினார். பயங்கரமா இருந்தது. நான் எடிட் பண்ணிக்கொடுத்தேன். அதைப் போட்டுக்காட்டி ஷங்கர் சார்கிட்ட ஓகே வாங்கி படம் ஆரம்பிச்சார். சில காரணங்களால என்னால அந்தப் படத்துக்கு எடிட் பண்ணமுடியலை. ஷூட் முடிஞ்சு படத்தைப் போட்டுக்காட்டி நீங்க டிரெய்லர் கட் பண்ணுங்கன்னு சொன்னார். ரொம்ப சந்தோஷமாப் பண்ணினேன். ஆடியோ லான்ச்ல ரஜினி சார் டிரெய்லர் பத்திப் பாராட்டிப் பேசுனது மறக்கவே முடியாது. திடீர்னு ஒருநாள் அறிவழகன் சார், வீட்டுக்குக் கூப்பிட்டு `வல்லினம்' கதை சொன்னார். ஆஸ்கார் பிலிம்ஸ்தான் தயாரிப்புன்னு தெரிஞ்சதும் இன்னும் சந்தோஷமாகிடுச்சு. ஆனா, அந்தப் படம் ஆரம்பமான சமயத்துல தமிழ்நாட்டுல ஸ்ட்ரைக் நடந்தது. நடுவுல ஒன்பது மாதங்கள் ஷூட்டிங் நடக்கலை. எப்படியோ படத்தை முடிச்சு ரிலீஸ் பண்ணினோம். படம் பார்த்தவங்க எல்லோரும் நல்லாருக்குன்னு சொல்றாங்க. ஆனா, படம் எதிர்பார்த்தபடி போகலை. ரொம்ப அப்செட்டாகிட்டோம். தேசிய விருது கிடைச்சதும் எப்படி ரியாக்ட் பண்றதுன்னு தெரியலை. அவ்ளோ சந்தோஷம். இப்போ மீண்டும் அவருடைய `பார்டர்' எடிட் பண்ணினது ரொம்பத் திருப்தியா இருந்தது.''

``தேசிய விருது வாங்கிய பிறகு, படங்கள் தேர்ந்தெடுக்கிறதுல உங்க பார்வை மாறுச்சா?’’

‘`உண்மையைச் சொல்லணும்னா, ‘தேசிய விருது வாங்கிட்டோம். பெரிய தயாரிப்பு நிறுவனம், பெரிய இயக்குநர்கள்கிட்ட இருந்து போன் வரும், வாழ்க்கை மாறிடும்’னு நினைச்சேன். ஆனா, அப்படி எதுவும் நடக்கலை. பத்துப் படம் முடிச்ச பிறகு, தேசிய விருது கிடைச்சிருந்தால், கொஞ்ச பேருக்கு என்னைத் தெரிஞ்சிருக்கும். ஆனா, எனக்கு ரெண்டாவது படத்திலேயே கிடைச்சதனால அது பெருசா வெளியே தெரியலை. நான் தேசிய விருது வாங்கியிருக்கேன்னு சினிமாவுல நிறைய பேருக்குத் தெரியாது. நான் நினைச்ச மாதிரி நடக்கலையேங்கிற அப்செட்டும் கோபமும் இன்னும் வேகமா ஓடணும்னு நினைக்கவெச்சது.’’

 “தேசிய விருது வாங்கியது நிறையபேருக்குத் தெரியாது!”

``பெரிய ஹீரோக்களுடைய படங்கள் ஈஸியா மக்கள்கிட்ட போயிடும். ஆனா, சின்னப் படங்கள் பண்ணும்போது அதை டீசர், டிரெய்லர் மூலமா மக்கள்கிட்ட கொண்டுபோய்ச் சேர்க்கிற பெரிய பொறுப்பு எடிட்டரான உங்களுக்கு வந்திடுது. அதை எப்படிக் கையாளுறீங்க?’’

``ஆரம்பிக்கும்போது இம்ப்ரஸ் பண்ணலைன்னா, அந்த ஒன்றரை நிமிஷ டீசர், டிரெய்லரையே யாரும் பார்க்க மாட்டாங்க. உதாரணத்துக்கு `ஜுங்கா' பண்ணும்போது, என்னென்னவோ முயற்சி பண்ணிப்பார்த்தேன். எதுவும் நான் நினைக்கிற மாதிரி வரலை. பல் தேச்சுட்டு இருக்கும்போது, மைண்டுக்கு வந்த வசனம்தான், `எப்போவுமே மத்தவங்களைக் கீழே இறக்கிட்டு நாம மேல ஏறி வர்றது தப்பு. நாம மேல ஏறி வந்தபிறகு, இடமில்லை, கொஞ்சம் கீழே இறங்கிக் கோங்கன்னு சொன்னா அவங்களே இறங்கிடுவாங்க.’ இதை ஆரம்பத்துல போட்டுப் பார்த்தவுடன் வொர்க்க வுட்டாகிடுச்சு.''

 “தேசிய விருது வாங்கியது நிறையபேருக்குத் தெரியாது!”

``உங்க மனைவியும் நீங்களும் ஒண்ணாதான் எடிட்டிங் கரியரை ஆரம்பிச்சிருக்கீங்க. இப்போ அவங்க என்ன பண்றாங்க?’’

``கல்யாணத்துக்குப் பிறகு, `தீக்குளிக்கும் பச்சைமரம்', `திருப்பங்கள்'னு ரெண்டு படங்களுக்கு எடிட் பண்ணினாங்க. தவிர, இப்போ நெட்ஃபிளிக்ஸ், அமேசான் நிறுவனங்கள்ல வெளியாகுற நிறைய படங்களுக்கு சப் டைட்டில் பண்றாங்க. சமீபமா, `டாணாக்காரன்' படத்துக்கு சப் டைட்டில் பண்ணியிருக்காங்க. என் மனைவிதான் என் எடிட்டிங்குடைய முதல் விமர்சகர். அவங்க சொல்லி நிறைய விஷயங்கள் மாத்தியிருக்கேன்.''

``அடுத்து என்னென்ன படங்கள் போய்க்கிட்டிருக்கு?’’

`` `பார்டர்', `சூர்ப்பனகை', `எண்ணித்துணிக', `ராஜவம்சம்'னு அடுத்தடுத்து படங்கள் வெளியாகக் காத்திருக்கு. நெல்சன் வெங்கடேஷ், சாந்தகுமார் சார், அறிவழகன் சார் இவங்களுடைய படங்களுக்கான வேலைகளும் போய்க்கிட்டிருக்கு. அடுத்த பாய்ச்சலுக்கு ரெடி!’’