Published:Updated:

``ப்ளாக்‌ஷீப் பார்த்துட்டு சினிமாவுக்கு வந்தோம்கிறது அபத்தம்; ஏன்னா?!" - `ஃபைனலி' நிரஞ்சன்

பைனலி நிரஞ்சன்
பைனலி நிரஞ்சன்

ஃபைனலி யூடியூப் சேனல், தற்போது சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்க இருக்காங்க. இதுகுறித்து இயக்குநர் ஃபைனலி நிரஞ்சனிடம் பேசினோம்.

"சின்ன வயசுல இருந்தே சினிமாவுக்கு வரணும்னு ஆசை இருந்தது. சென்னைக்கு வந்த பல லட்சம் பசங்கள்ல நானும் ஒருத்தன். எல்லாரையும் மாதிரி நானும் இன்ஜினீயரிங் படிச்சி முடிச்ச பையன். வீட்டுல, கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் எடுக்கச் சொன்னாங்க. காரணம், எடிட்டிங், கிராஃபிக்ஸ் இதெல்லாம் எனக்கு வரும். `சினிமாவுக்கு போறப்ப பயன்படும்'னு சொல்லியிருந்தாங்க. அதனால எடுத்தேன். ஆனா, உள்ள போனா ஜாவா, சிசி-ப்ளஸ்னு கோடிங் மாதிரியே இருந்தது. எதுவும் மண்டைக்கு ஏறல. அதனால அரியரோட இன்ஜினீயர் ஆகிட்டு வெளியே வந்தேன். அப்போ, தனியா வெளியே எடிட்டிங் படிச்சேன். நாங்க மிடில் கிளாஸ்தான். அதனால, ஹோம் டியூஷன் எடுத்துட்டு இருந்தேன். ஆனா, சினிமாவுல டைரக்‌ஷன் பண்ணணும்னு ஆழ்மனசுல இருந்து ஆசை போகவே இல்லை. அப்போ, பாரத் சென்னையில இருந்து யூடியூப் சேனல் ஆரம்பிச்சார். ஆனா, எதுவும் சரியா போகல. எனக்கு பாரத்தை முன்னாடியே தெரியும். ரெண்டு பேருமே ஒரே காலேஜ். ஆனா, பாரத் எனக்கு சீனியர். அதனால சீக்கிரம் சென்னை வந்திருந்தார்."

ஃபைனலி டீம்
ஃபைனலி டீம்

"அந்த நேரம் பாரத்துக்கு போன் பண்ணி பேசிட்டிருப்பேன். `எப்ப வேணாலும் நீ சென்னைக்குக் கிளம்பி வாடா'னு பாரத் சொல்வார். அவர் கொடுத்த நம்பிக்கையால நானும் சென்னைக்கு வந்தேன். அதுக்கப்புறம் ரெண்டு பேரும் சேர்ந்து எத்தனையோ முயற்சிகள் எடுத்து எதுவும் சரியா வொர்க்அவுட் ஆகாம, கடைசியா அமைஞ்ச ஒண்ணுதான் 'ஃபைனலி'. எங்களோட இந்த முன்கதை பெரும்பாலும் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். கிட்டதட்ட எழுபது வீடியோவுக்கு மேல 'ஃபைனலி' ப்ளாட்பார்ம்ல மட்டும் முடிச்சிருக்கோம்'' என்று சொன்ன நிரஞ்சனிடம் சில கேள்விகள் கேட்டோம்.

சினிமா டைரக்‌ஷன் பண்ணப்போறதா கேள்விப்பட்டோமே...

"ஆமா, அதுக்கான ஸ்க்ரிப்ட் வேலைகள் போயிட்டிருக்கு. படத்துக்கான கதையை நான்தான் எழுதிட்டிருக்கேன். இதுக்காக எனக்கு ஆறுமாசம் தேவைப்படுது. அதனால, 'ஃபைனலி' டீம் ஆள்கள் எனக்காக ஆறு மாசத்தை ஒதுக்கிக்கொடுத்தாங்க. இந்த இடைப்பட்ட காலத்துல, என்னோட டைரக்‌ஷன்ல ஃபைனலி சேனல்ல வீடியோஸ் வராது. பாலு டைரக்‌ட் பண்ணுவான். இவனுக்கு இதுல நல்லாவே அனுபவம் இருக்கு. தவிர, நாங்க 'ஃபைனலி' மூலமா நிறைய வெப்சீரிஸ் பண்ணலாம்னு இருக்கோம். ஏற்கெனவே `மாமனுக்கு மரியாதை'னு ஒரு வெப்சீரிஸ் ரிலீஸ் பண்ணிட்டோம். இப்ப எங்ககிட்ட இருக்கிற உதவி இயக்குநர்கள் தொடர்ந்து வெப்சீரிஸ் டைரக்‌ஷன் பண்ண இருக்காங்க."

தமிழ் சினிமாவைக் காப்பாற்றும் 30 ப்ளஸ் நாயகிகள்... யார் யார் எப்படி?!

ப்ளாக் ஷீப்பைத் தொடர்ந்துதான் உங்களுக்கும் சினிமாவுக்கு போகலாம்னு ஆசை வந்ததா?

Mamanukku Mariyaathai
Mamanukku Mariyaathai

"கண்டிப்பா இல்லை. 'ஃபைனலி'ல இருக்கிற ஒவ்வொருத்தரோட கனவும் சினிமாவுக்கு போகணும்கிறதுதான். இதுக்காக நாங்க எடுத்துக்கிட்ட ப்ளாட்ஃபார்ம்தான் 'ஃபைனலி யூடியூப் சேனல். என்ன... நாங்க வர்றதுக்குக் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. ஆனா, எல்லாமே நல்லதுக்குத்தான். கிட்டத்தட்ட யூடியூப் ப்ளாட்ஃபார்ம்ல இருக்கிற எல்லாரும் எங்க நண்பர்கள்தான். தவிர, எங்களோட முயற்சிக்கு எங்களோட போட்டியாளரா களத்துல நிக்கிற ஆர்.ஜே.விக்னேஷ் நிறைய முறை வாழ்த்துச் சொல்லியிருக்கார். வெங்கட்பிரபு, விஜய் ஆண்டனி, ரியோ, இவங்க எல்லாரும் வீடியோ பார்த்துட்டு போன் பண்ணி வாழ்த்துகள் சொல்லியிருக்காங்க. அதனால, இதுக்கு முன்னாடி யூடியூப் ப்ளாட்ஃபார்ம்ல இருந்து வந்த ப்ளாக் ஷீப் பார்த்துட்டு சினிமாவுக்கு வரணும்னு நினைச்சோம்கிறது அபத்தம்."

உங்களுக்கான தயாரிப்பாளர் சுலபமா கிடைச்சாங்களா?

Libra Productions facebook post
Libra Productions facebook post

"எங்களோட ஃபைனலி வீடியோஸ் பார்த்துட்டு நிறைய தயாரிப்பு நிறுவனங்கள் படம் பண்ணச் சொல்லி கேட்டிருக்காங்க. ஆனா, நாங்க கொஞ்சம் தெரிஞ்சிகிட்டு படம் பண்ணலாம்னு இருந்தோம். தவிர, நாங்க படம் டைரக்‌ட் பண்ணலாம்னு ரெடியானப்ப, ரவீந்தர் எங்களை அப்ரோச் பண்ணார். நாங்க சொன்ன கதையும் அவருக்குப் பிடிச்சிருந்தது. அதனால உடனே ஒப்பந்தம் போட்டாச்சு. எங்க மேல நிறைய நம்பிக்கை வெச்சிருக்கார். தவிர, அவரும் நிறைய அட்வைஸ், இன்புட்ஸ் கொடுத்திருக்கார்."

படத்தோட ஹீரோ, ஹீரோயின் பற்றிச் சொல்லுங்க?

"கதைதான் ஹீரோ. ஆனா, பாரத் லீட் ரோல் பண்றார். அதுக்காக, விஜய், அஜித் வெலவலுக்கு ஹீரோவை கற்பனை பண்ணத் தேவையில்ல. பாரத் பார்வையில இருந்துதான் கதை நகரும். எங்க பாரத்தை ஹீரோ மெட்டீரியலா வளர்க்கணும்னுதான் எங்களோட ஆசை. ஆனா, எடுத்த உடனே சூப்பர் ஹீரோவா வரமுடியாது. ராஜூ, பாலு, தர்ஷினி எல்லாரும் நடிக்கிறாங்க. ஹீரோயின் ரோலுக்கு ஆள் பார்த்துட்டிருக்கோம். பாலு வில்லன் ரோல் பண்றார். தவிர, எங்களோட அடையாளம் வெளியே தெரியணும்கிறதாலதான் நான் டைரக்டர், பாரத் ஹீரோ, பாலு வில்லன். திவாகர்தான் எடிட்டிங் பண்றார். மியூசிக் டைரக்டர் மற்றும் ஒளிபதிவாளர் இன்னும் முடிவு பண்ணல. காமெடி ஜானரைத்தான் கையில எடுத்திருக்கோம். இதோட, த்ரில்லர் அல்லது ரொமான்டிக் சேரும். இதுக்கான வேலைகள்தான் போயிக்கிட்டிருக்கு'' என்கிறார் நிரஞ்சன்.

``சொல்லவேண்டாம்னுதான் இருந்தேன்... முடியலை. எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு!’’ - `ஃபைனலி’ பாரத்
அடுத்த கட்டுரைக்கு