“ ‘கடாரம் கொண்டான்’ படத்துல விக்ரமைவிட உங்களுக்குத்தான் அதிக காட்சிகள் இருந்தன. அதைப் பார்த்துட்டு விக்ரம் ஏதாவது சொன்னாரா?”
“அவருடைய கேரக்டர் அப்படித்தான்னு ஷூட்டிங் போறதுக்கு முன்னாடியே அவருக்குத் தெரியும். அவருடைய ரசிகர்கள்தான் அவருக்கான போர்ஷன் கம்மியா இருக்குன்னு ஃபீல் பண்றாங்க.”
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS
“சின்ன வயசுல ‘சுன்சுன் தாத்தா’ என்ற ஆவணப்படத்துல நடிச்சீங்க. அப்போ நடிச்சதுக்கும், இப்போ நடிக்கிறதுக்கும் எப்படி இருக்கு?”
“அந்த வயசுல ஒண்ணுமே தெரியல. அப்பா என்ன சொல்றாரோ அதை அப்படியே கேட்டு நடிச்சேன். இப்போ, முறைப்படி சினிமா படிச்சிருக்கேன். ‘மெர்சல்’ படத்துல உதவி இயக்குநரா வேலை பார்த்திருக்கேன். இந்த அனுபவத்தோட ‘கடாரம் கொண்டான்’ல நடிச்சது ரொம்ப உதவியா இருந்தது; இன்னும் நிறைய கத்துக்கணும்.”
“ ‘மெர்சல்’ படத்துல வொர்க் பண்ணும்போது என்ன கத்துக்கிட்டீங்க?”
“படிச்சு முடிச்சுட்டு வீட்டுல சும்மா இருந்தப்போ, சினிமா எப்படி உருவாகுதுன்னு கத்துக்கலாம்னு ஆர்வம். அதனால, அட்லி சார்கிட்ட சேர்ந்தேன். டி.ஐ பார்க்கிறது, ஷூட்டிங்ல கூட்டத்தைச் சமாளிக்கிறதுன்னு அவருடைய கடைசி உதவி இயக்குநரா அந்தப் படத்துல வேலை செஞ்சேன். தினமும் பேட்டா கிடைக்கும். படத்துல வேலை செஞ்சதுக்கு பேட்டா வரும்னு, அந்தப் படத்தோட ஷூட்டிங் முடியிற வரை வீட்டுல காசு வாங்கல. சமயங்கள்ல பேட்டா வர லேட் ஆகும்போது, உதவி இயக்குநர்களுடைய கஷ்டம் புரிஞ்சது.”
“அப்பா நடிச்ச படங்களில் உங்களைக் கவர்ந்த படம் எது?”
“நிறைய படம் பிடிக்கும். குறிப்பா சொல்லணும்னா, ‘டேவிட்’ படம் என் மனசுக்கு ரொம்ப நெருக்கம். அதுல ஜீவா சாருக்கு அப்பாவா நடிச்சிருப்பார். அந்தக் கேரக்டர் நிறைய அவமானங்களைச் சந்திக்கும். அதனாலயோ என்னவோ, அந்தக் கேரக்டர் என்னை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிடுச்சு. மத்தபடி, ‘தேவர் மகன்’ படத்துல அப்பா நடிப்பை இப்போ பார்த்தாக்கூட பயமா இருக்கும்.”
“உங்க அண்ணன் ‘சைவம்’ படத்துல நடிச்சிருப்பார். அவர் நடிப்பைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?”
“என்னைவிட அண்ணன் நல்ல நடிகர்னு நினைக்கிறேன். அவர் இன்னும் நிறைய படங்கள் பண்ணணும். அவருக்கு இயக்குநர் ஆகணும்னு ஆசை. இருந்தாலும், நல்ல கேரக்டர்கள் வந்தால் நடிக்கணும்னு நான் ஆசைப்படுறேன்.”
“அபிஹாசன் - அக்ஷரா ஹாசன் காம்போவை நீங்க எப்படிப் பார்க்கிறீங்க?”
“அக்ஷராவை எப்போவும் டாம்-பாய் கேரக்டராதான் பார்த்திருப்போம். இந்தப் படத்துல நிறைமாத கர்ப்பிணியா அவங்களைப் பார்க்க ரொம்ப அழகா இருந்தது. அவங்க சில படங்கள்ல நடிச்சிருக்காங்க. ஆனா, எனக்கு இதுதான் முதல் படம். இருந்தாலும், எனக்கு உதவியா இருந்தாங்க. ரசிகர்கள்கிட்ட இந்தக் காம்போவுக்கு வரவேற்பு கிடைச்சிருக்குன்னா, அதுக்கு அவங்களோட பொறுமை முக்கிய காரணம்.”
“படம் பார்த்துட்டு அம்மா, அப்பாவுடைய ரியாக்ஷன் என்ன?”
“ரெண்டுமுறை அவங்க படம் பார்த்தாங்க. ரெண்டுமுறையுமே அம்மா அழுதுட்டாங்க. அவங்களோட ஆனந்தக் கண்ணீரைப் பார்க்கும்போது, ரொம்ப சந்தோசமா இருந்தது. சினிமாவுலதான் அப்பா அழுது பார்த்திருக்கேன். படத்தைப் பார்த்துட்டு என்னைக் கட்டிப்பிடிச்சுத் தேம்பித் தேம்பி அழுதார் அப்பா. அவர் அழுது நான் நேர்ல பார்த்தது அப்போதான். வாழ்க்கையில மறக்க முடியாத மொமன்ட் அது.”