Published:Updated:

நினைவுகளைக் கோப்பையில் நிரப்பித்தரும் படம்!

பிரபுதேவா
பிரீமியம் ஸ்டோரி
பிரபுதேவா

கதையைச் சொன்னதும் பிரபுதேவாவிற்கு ரொம்பவும் பிடித்தது. கத்திமேல் நடக்கும் கதையில் அவர் நடிக்க முன்வந்தது ரொம்ப நல்ல விஷயம்

நினைவுகளைக் கோப்பையில் நிரப்பித்தரும் படம்!

கதையைச் சொன்னதும் பிரபுதேவாவிற்கு ரொம்பவும் பிடித்தது. கத்திமேல் நடக்கும் கதையில் அவர் நடிக்க முன்வந்தது ரொம்ப நல்ல விஷயம்

Published:Updated:
பிரபுதேவா
பிரீமியம் ஸ்டோரி
பிரபுதேவா

“படத்தோட பெயரே ‘பிளாஷ்பேக்.' நம் எல்லோருக்கும் ஒரு பிளாஷ்பேக் கண்டிப்பாக இருக்கும். யாருக்குத்தான் மலரும் நினைவுகள் இல்லை? அப்படிப் பார்த்தால் ‘பிளாஷ்பேக்’கில் நீங்கள் பார்க்கப்போவது என்னோட, உங்களோட, நம் அனைவருடைய வாழ்க்கை. கோபம் வந்தால் உடம்பு அதிரும். பசி வந்தால் வயிறு சுண்டும். ஆனால் காதல் வந்தால் மட்டும் பிரச்னை உடம்பிலேயா, மனசுலேயான்னு கண்டுபிடிக்கவே முடியாது. நாம் காதலைக் கடந்து போகும்போது காமத்தையும் கடந்து போயிருப்போம். இந்த வாழ்க்கையை யாரும் அதிகமா சொன்னதில்லை. அப்படியான வாழ்க்கையை பிளாஷ்பேக் காட்டியிருக்கிறது” தெளிவாகப் பேசுகிறார் இயக்குநர் டான் சான்டி. ‘கொரில்லா'வில் தெரிய வந்தவர்.

பிரபு தேவா - டான் சான்டி
பிரபு தேவா - டான் சான்டி

“கொஞ்சம் கவனமாகக் கையாள வேண்டிய ஏரியாவாக இருக்கே?”

“அப்படித்தான் கையாண்டிருக்கேன். டீன் ஏஜில் காதல் எது, காமம் எதுன்னு நமக்கு சரியாகத் தெரியாது. ஆனால் ஆங்கிலப் படங்களில் இது மாதிரியான படங்களுக்கு coming-of-age story-ன்னு சொல்வாங்க. இந்த 35 வருஷத்தில் ‘அழியாத கோலங்கள்'னு பாலுமகேந்திரா சார் படம் எடுத்திருக்கார். அதுக்குப் பின்னாடி யாரும் பண்ணலை. சில படங்கள் கொஞ்சமாகச் சொல்லிட்டுப் போயிருக்கு. அந்த வகையில் இந்தப் படத்தை கவனமாக உருவாக்கியிருக்கோம். காதல் எவ்வளவு அழகோ அதே மாதிரி காமமும் அழகுன்னு சொல்லியிருக்கோம். இந்தக் காதலும் காமமும் கலந்த மாயத்தை இதில் முயற்சி செய்து பார்த்திருக்கேன். அன்பு, நம்பிக்கை, காதல், காமம், உண்மை, பொய் எல்லாமும் இந்த பிளாஷ்பேக்கில் இருக்கும்.”

நினைவுகளைக் கோப்பையில் நிரப்பித்தரும் படம்!
நினைவுகளைக் கோப்பையில் நிரப்பித்தரும் படம்!
நினைவுகளைக் கோப்பையில் நிரப்பித்தரும் படம்!

“இதில் பிரபுதேவா, ரெஜினாவின் பங்கு என்ன?”

“கதையைச் சொன்னதும் பிரபுதேவாவிற்கு ரொம்பவும் பிடித்தது. கத்திமேல் நடக்கும் கதையில் அவர் நடிக்க முன்வந்தது ரொம்ப நல்ல விஷயம். ஒரு சமயத்தில் காதலுக்கும் காமத்திற்கும் நூலிழை வித்தியாசம்தான் இருக்கும். அதை அப்படியே சித்திரிப்பதை பிரபுதேவா பிரமாதமாகச் செய்திருக்கிறார். பள்ளிப்பருவம், டீன் ஏஜ், அதற்கு அடுத்த காலகட்டம் என்று மூன்றுவகையான காலங்களில் பிரபுதேவா நடிச்சிருக்கார். அவருடைய வழக்கமான ஸ்டைலை இதில் உதறியிருக்கார். அவரது நடனம் இந்தியா அறியும். இந்த வகை நடிப்பு நிச்சயம் புதிது. ரெஜினா ஆங்கிலோ இந்தியன் பெண்ணாக வருகிறார். இந்தப் படம் பேசப்பட்டால் அதில் அவங்களுக்கும் பங்கு இருக்கு. தெலுங்கில் புகழ்பெற்ற அனுசுயா பரத்வாஜ் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகள் இல்லை. அமைதியா இருந்து சாதிக்கும் வேடம் பிரபுதேவாவுக்கு.”

நினைவுகளைக் கோப்பையில் நிரப்பித்தரும் படம்!
நினைவுகளைக் கோப்பையில் நிரப்பித்தரும் படம்!
நினைவுகளைக் கோப்பையில் நிரப்பித்தரும் படம்!

“படத்தில் மற்றவர்களின் பங்களிப்புகள்..?”

“இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இழைச்சுப் பண்ணின பாடல்கள் இருக்கு. இதன் தீம் மியூசிக் உங்களை விட்டு நீங்காது. எனது உணர்வுகளை முழுமையாகக் கொண்டு வரவும் சுதந்திரமாகச் செயல்படவும் தயாரிப்பாளர் ரமேஷ் பிள்ளை உதவியாக இருந்தார். ரொம்ப பசுமையான நினைவுகளுக்கு இந்தப் படம் கண்டிப்பாகக் கூட்டிக்கொண்டு போகும். யுவா ஒளிப்பதிவில் இந்தப்படம் அத்தகைய உணர்வுகளை உங்களுக்குத் தரும். நமது நினைவுகளை ஒரு கோப்பைக்குள் நிரப்பிப் பார்க்கிற படம்தான் பிளாஷ்பேக்.”