Published:Updated:

`வலிமை', `எதற்கும் துணிந்தவன்' டு `பீஸ்ட்'... எதிர்பார்ப்பில் இருக்கும் படங்கள் எப்போது ரிலீஸ்?

வலிமை, எதற்கும் துணிந்தவன்

பல நூறு கோடிகள் புரோமோஷனுக்கு செலவழித்த பிறகு லாக்டௌனால் படங்களின் ரிலீஸ் தள்ளிப் போனது ரசிகர்களிடையே பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தாலும் தவிர்க்க முடியாத காரணங்களினால்தான் படங்களின் ரிலீஸ்கள் தள்ளிப்போயிருந்தன.

`வலிமை', `எதற்கும் துணிந்தவன்' டு `பீஸ்ட்'... எதிர்பார்ப்பில் இருக்கும் படங்கள் எப்போது ரிலீஸ்?

பல நூறு கோடிகள் புரோமோஷனுக்கு செலவழித்த பிறகு லாக்டௌனால் படங்களின் ரிலீஸ் தள்ளிப் போனது ரசிகர்களிடையே பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தாலும் தவிர்க்க முடியாத காரணங்களினால்தான் படங்களின் ரிலீஸ்கள் தள்ளிப்போயிருந்தன.

Published:Updated:
வலிமை, எதற்கும் துணிந்தவன்

இந்தாண்டு பொங்கலுக்கு பிரமாண்ட படமான ராஜமௌலியின் 'ஆர்.ஆர்.ஆர்.', பிரபாஸின் 'ராதே ஷ்யாம்', அஜித்தின் 'வலிமை' ஆகிய படங்கள் வெளியாக இருந்தன. ஆனால், எதிர்பாராத கொரோனா மூன்றாவது அலை பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊடரங்கு, பொது போக்குவரத்து குறைப்பு, தியேட்டர்களில் ஐம்பது சதவிகித இருக்கை ஆகியவற்றால் பொங்கலுக்கு விருந்து வைக்க ரெடியாக இருந்த படங்களின் வெளியீடுகள் தள்ளி வைக்கப்பட்டன.

இன்றைய காலகட்டத்தில் சினிமா இருக்கும் சூழலில் ஒரு படத்தை ரிலீஸ் செய்வது என்பது, மிகப்பெரிய விஷயமாக மாறிவிட்டது. மிகப்பெரிய தொகை புரொமோஷனுக்காக செலவிட வேண்டியிருக்கிறது. பல நூறு கோடிகள் புரோமோஷனுக்கு செலவழித்த பிறகு லாக்டௌனால் படங்களின் ரிலீஸ் தள்ளிப் போனது ரசிகர்களிடையே பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தாலும் தவிர்க்க முடியாத காரணங்களினால்தான் படங்களின் ரிலீஸ்கள் தள்ளிப்போயிருந்தன.

RRR (ஆர்.ஆர்.ஆர்) படம்
RRR (ஆர்.ஆர்.ஆர்) படம்
இனி வரும் நாள்களில் என்னென்ன படங்கள் எப்போது ரிலீஸ் ஆகின்றன என்பதை பார்ப்போம்.
  • பிப்ரவரியை பொறுத்தவரையில் விஷாலின் 'வீரமே வாகை சூடும்' 4-ம் தேதி வெளியாகிறது.

  • பிப்ரவரி 11ல் விஷ்ணுவிஷாலின் 'எஃப்.ஐ.ஆர்.', 'காக்கா முட்டை' மணிகண்டனின் 'கடைசி விவசாயி' ஆகிய படங்கள் வெளியாகிகின்றன.

  • அஜித்தின் 'வலிமை' பிப்ரவரி 24ம் தேதியாக இருக்கலாம் என்கிறார்கள்.

  • பிப்ரவரி 24 'வலிமை' வெளியானால், அதற்கு அடுத்த வாரத்தில் சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படம் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது மார்ச் 10-ல் சூர்யாவின் படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

எதற்கும் துணிந்தவன்
எதற்கும் துணிந்தவன்
  • பிரபாஸின் 'ராதே ஷ்யாம்', துல்கர் சல்மானின் 'ஹே சினாமிகா' பிப்ரவரி 25-ல் வெளியாகலாம். 'ராதே ஷ்யாம்' மார்ச் மாதத்துக்கும் தாவலாம் என்கிறார்கள்.

  • மார்ச் 25ல் சிவகார்த்திகேயனின் 'டான்' படம் வெளியாகும் என அவர்களே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர். அன்றுதான் ராஜமௌலியின் 'ஆர்.ஆர்.ஆர்.' படமும் ரிலீஸ் ஆகிறது.

  • வரும் ஏப்ரல் மாதத்தில் அதாவது சித்திரை ஸ்பெஷலாக விஜய்யின் 'பீஸ்ட்'டும், 'கே.ஜி.எஃப் 2'வும் வரலாம். 'கே.ஜி.எஃப் 2'வை பொறுத்து 'பீஸ்ட்' ரிலீஸ் மாறலாம் என்றும் சொல்கிறார்கள்.

ஆக, இந்த வாரத்தில் இருந்து திரைக் கொண்டாட்டம் ஆரம்பமாகிறது. நீங்கள் எந்தப் படத்திற்காக வெயிட்டிங்?