Published:Updated:

விஜய் முதல் விஷால் வரை... சினிமா ரிலீஸ் சிக்கல்களின் பின்னணி!

தயாரிப்பாளர்கள்தான் 'இந்த நடிகருக்கு இவ்வளவு சம்பளம் தருகிறேன்' எனப் போட்டி போட்டுக்கொண்டு தருகிறார்கள். தயாரிப்பாளர்களுக்கு நாங்கள் அறிவுறுத்துவது,

சினிமா
சினிமா

தமிழ் சினிமாவின் தீராப் பிரச்னைகளில் ஒன்றாகத் தொடர்கிறது, பட ரிலீஸ். பிரசவ வேதனைக்குச் சமமாக ஒரு சினிமாவை வெளியிடுவதில் வலி இருப்பதாகச் சொல்கிறார்கள் தயாரிப்பாளர்கள். கள நிலவரமும் அதைத்தான் பிரதிபலிக்கிறது. விஜய்யின் 'தலைவா' முதல் அமலா பாலின் 'ஆடை' வரை பெரிய நடிகர்கள் தொடங்கி, வளரும் நடிகர்கள் வரை ரிலீஸுக்கு முன்பும், பின்பும் நிதி நெருக்கடி, டைட்டில் பிரச்னை, கதைத்திருட்டுப் புகார், ஃபைனான்ஸ் பிரச்னை எனப் பல அக்னிப் பரீட்சைகளைத் தாண்டியே ஒரு படம் ரிலீஸாகிறது.

90-களில் பல திறமையாளர்களைத் திரைத்துறைக்கு அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி, "ஒருகாலத்தில் தயாரிப்பாளர்கள் முடிவு செய்த பட்ஜெட், இன்று கதாநாயகர்கள் கையில் இருக்கிறது. வருடத்திற்கு நான்கு படங்களைத் தயாரித்த நான், இப்போது படங்களைத் தயாரிப்பதில்லை. பயமாக இருக்கிறது" என்கிறார்.

விஜய் முதல் விஷால் வரை... சினிமா ரிலீஸ் சிக்கல்களின் பின்னணி!

"தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த என்னுடைய 'அயோக்யா' படத்திற்கே ஃபைனான்ஸ் பிரச்னை வந்தது. முந்தைய படத்தைக் கடன் வாங்கி ரிலீஸ் செய்துவிட்டு, அதனால் நஷ்டமடைந்த தயாரிப்பாளர்கள் அடுத்த படத்தைத் தயாரிக்கும் முன் முந்தைய படத்தின் பிரச்னைகளைக் களைய வேண்டும். அப்படிச் செய்யாமல் போவதால் அடுத்த படங்கள் பாதிக்கப்படுகின்றன" என்கிறார், விஷால்.

இது ஒருபுறம் இருக்க, சமீபத்தில் வெளியான அமலா பாலின் 'ஆடை' படம், அறிவிக்கப்பட்ட தேதியில் இரண்டு காட்சிகளுக்குப் பிறகே திரைக்கு வந்தது. அதற்குக் காரணம், படத்தின் தயாரிப்பாளர்தான். 'ஆடை' ரிலீஸுக்கு முந்தைய நாள் படத்தின் கடன் பிரச்னை பேருருவம் எடுத்தது. 'ஆடை' படத்திற்கு ஃபைனான்ஸ் செய்தவர், திரைத்துறையில் நன்கு அறியப்பட்டவர்தான். படத்தின் ரிலீஸ் அன்று, சம்பளமாகப் பெற்ற பணத்தில் ஒரு பகுதியைக் கொடுத்ததோடு, அந்த ஃபைனான்ஸியருக்குப் படத்தின் இயக்குநர் ரத்னகுமாரும், அமலா பாலும் தலா ஒரு படம் செய்துகொடுக்க வேண்டும் என்று உறுதி கொடுத்த பிறகே, படத்தை ரிலீஸ் செய்ய அனுமதித்திருக்கிறார்கள் எனத் தெரிகிறது.

இந்த நடிகருக்கு இவ்வளவு சம்பளம் தருகிறேன்' எனப் போட்டி போட்டுக்கொண்டு தருகிறார்கள். தயாரிப்பாளர்களுக்கு நாங்கள் அறிவுறுத்துவது, நடிகர்களுக்கு லாபத்தில் பங்குகொடுக்கிற 'ஃபிராஃபிட் ஷேரிங்' முறைதான்"

விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவரான அருள்பதியிடம் பேசினோம். "தமிழ் சினிமாவில் மூன்றுவிதமான வியாபார முறையில் விநியோகஸ்தர்கள் படத்தை வாங்குகிறார்கள். கமிஷன் முறையில் விநியோகம் செய்பவர்களுக்குத் தயாரிப்பாளர்களுக்குக் கொடுத்த தொகையைவிடக் குறைவான தொகையே பட வசூல் மூலம் கிடைக்கும்போது, விநியோகஸ்தர்களுக்குத் திரும்பக் கிடைக்க வேண்டிய 'ரீ-ஃபண்டு' பணத்தைக் கேட்பார்கள். அதைத்தான் பலரும் 'நஷ்ட ஈடு' எனப் பரப்புரை செய்கிறார்கள். தயாரிப்பாளர்கள்தான் 'இந்த நடிகருக்கு இவ்வளவு சம்பளம் தருகிறேன்' எனப் போட்டி போட்டுக்கொண்டு தருகிறார்கள். தயாரிப்பாளர்களுக்கு நாங்கள் அறிவுறுத்துவது, நடிகர்களுக்கு லாபத்தில் பங்குகொடுக்கிற 'ஃபிராஃபிட் ஷேரிங்' முறைதான்" என்கிறார்.

இயக்குநர், நடிகர் பாக்யராஜ் பேசும்போது, "கதைத்திருட்டு வழக்கு என்பது இப்போ இல்லை; காலம் காலமாக நடக்கிறது. மற்றபடி, ரிலீஸில் இருக்கும் சிக்கல்களைத் தீர்க்க சினிமாவை நன்கு அறிந்த தயாரிப்பாளர்கள் படங்களைத் தயாரிக்க வேண்டும்" என்கிறார்.

ஒரு படத்திற்காக வாங்கிய பணத்தை அடுத்த படத்திற்காகப் பயன்படுத்துவது, ஒரு படம் நஷ்டத்தைக் கொடுத்திருக்கும் நிலையில், அதைச் சமாளிக்க மற்றொரு படத்தைத் தயாரிக்க ஆயத்தமாவது எனத் தயாரிப்பாளர்கள் தரப்பிலும் தவறு இருக்கிறது. ஓரிரு படங்கள் வரிசையாக வெற்றியடைந்துவிட்டால் சம்பளத்தைத் தாறுமாறாக உயர்த்திக்கொள்ளும் ஹீரோ ஹீரோயின்கள் தரப்பிலும் தவறு இருக்கிறது. தயாரிப்பாளர்களுக்கு முறையான கணக்கு வழக்குகளைச் சமர்ப்பிக்காத விநியோகஸ்தர்கள் தரப்பிலும் தவறு இருக்கிறது. இந்த மூன்று தரப்புகளும் பிரச்னைகளைத் தீர்த்து ஒரு புள்ளியில் சுமுகமாக இணையும்போதுதான் படத்தின் ரிலீஸ் பிரச்னை தீரும். ஒரு படத்தின் ரிலீஸ் தேதி என்பது, ரசிகர்களிடம் விதைக்கும் எதிர்பார்ப்பு. குறிப்பிட்ட தேதியில் அந்தப் படம் ரிலீஸாகாமல் போகும் பட்சத்தில், நீங்கள் நிராகரிப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை என்பதை எல்லோரும் உணர வேண்டும்!

> முழுமையான கட்டுரைக்கு ஆனந்த விகடன் இதழை நாடுங்கள். ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/