Published:Updated:

தல-தளபதி சண்டை இன்னும் ஜாஸ்திதான் ஆகும் பிரதர். ஏன்னா... - `தமிழ்ப்படம்' சி.எஸ்.அமுதன் ஜாலி பேட்டி

CS Amudhan

குவாரன்டீன், உலகப் பொருளாதாரம், அமெரிக்க வல்லாதிக்க வீழ்ச்சி, ஆணாதிக்கச் சிந்தனைப் போக்கு, சினிமாவின் குறுக்குவெட்டுத் தோற்றம் என நீண்ட உரையாடல் நிகழ்த்த ஆசைப்பட்டு, பிறகு அதை இன்னொருநாள் பார்த்துக்கொள்ளலாம் என முடிவெடுத்து, வேறு சில விஷயங்களைப் பற்றி பேசினோம்...

தல-தளபதி சண்டை இன்னும் ஜாஸ்திதான் ஆகும் பிரதர். ஏன்னா... - `தமிழ்ப்படம்' சி.எஸ்.அமுதன் ஜாலி பேட்டி

குவாரன்டீன், உலகப் பொருளாதாரம், அமெரிக்க வல்லாதிக்க வீழ்ச்சி, ஆணாதிக்கச் சிந்தனைப் போக்கு, சினிமாவின் குறுக்குவெட்டுத் தோற்றம் என நீண்ட உரையாடல் நிகழ்த்த ஆசைப்பட்டு, பிறகு அதை இன்னொருநாள் பார்த்துக்கொள்ளலாம் என முடிவெடுத்து, வேறு சில விஷயங்களைப் பற்றி பேசினோம்...

Published:Updated:
CS Amudhan

"இளையராஜா மட்டும் இல்லைன்னா, குவாரன்டீன்லாம் நாறியிருக்கும் நாறி. நான் சொல்லிட்டேன்பா" என ட்விட்டரில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருந்தார், இயக்குநர் சி.எஸ்.அமுதன். `தமிழ்ப்படம் சீரிஸ்' மூலம் பல ஃபர்னிச்சர்களை உடைத்தவர், இந்த லாக்டௌன் நாள்களில் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்கிற ஆர்வத்தில் போனைப் போட்டேன்.

CS Amudhan
CS Amudhan

`நான் - கொரோனா - இளையராஜா'னுதான் குவாரன்டீன் நாள்களைக் கழிக்கிறீங்களா?

Tamizh Padam Series
Tamizh Padam Series

"அதுவும்தான். ஆனா, அது மட்டும்தான்னு சொல்ல முடியாது. தினமும் வீடு பெருக்குறது, பாத்திரம் கழுவுறது, துணி காயப்போட்டு க்ளிப் மாட்டி விடுறதுன்னு வீட்டு வேலைகள்ல வீட்டார்க்கு உதவி பண்ணிட்டு இருக்கேன். அப்புறம், `நெட்ஃப்ளிக்ஸ் அண்ட் சில்' மாதிரி `நெட்ஃப்ளிக்ஸ் அண்ட் கில்'னு போர்டமை கொண்ணுட்டு இருக்கேன். முக்கியமா, என் படத்தோட ஸ்க்ரிப்ட்டை எழுதிட்டு இருக்கேன்."

படம் பார்த்துட்டே ஸ்க்ரிப்ட் எழுதுறீங்கன்னா, `தமிழ்ப்படம் - 3' தானே எழுதுறீங்க?

Tamizh Padam Series
Tamizh Padam Series

"இந்த கொரோனா இதிகாசங்களை எல்லாம் பார்க்கும்போது, `தமிழ்ப்படம் -3'க்கான பல ஐடியாக்கள் வர்றது என்னவோ உண்மைதான். ஆனால், `இப்போ இது நம்ம வேலை இல்லை'னு வர்ற ஐடியாக்களை அப்படியே தடுத்து திருப்பி அனுப்பிவிட வேண்டியதா இருக்கு. நான் எழுதிட்டு இருக்குறது என்ன ஸ்க்ரிப்ட், என்ன மாதிரியான ஸ்க்ரிப்ட்னு இப்போதைக்கு சொல்லமுடியாது ப்ரதர். புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்"

உங்கள் ஹீரோ அகில உலக சூப்பர்ஸ்டார், இந்த கொரோனா நேரத்துலேயும் ரொம்ப பிஸியா இருக்கார் கவனிச்சீங்களா?

Tamizh Padam Series
Tamizh Padam Series

"அவர் எப்பவும் என் கவனத்துலதான் இருக்கார். அவரை இந்த உலகமே உற்றுநோக்கும்போது, இந்த உலகத்தின் சிறுபுள்ளி நான் எப்படி அவரை கண்டுக்காமல் இருப்பேன். அவரே குட்டி வீடியோ ஒண்ணு டைரக்ட் பண்ணிப்போடுறார், வெங்கட்பிரபு வீடியோவில் நடிக்கிறார். இந்த நேரத்திலேயும் அசராமல் மக்களுக்காக கலைச்சேவை செஞ்சுட்டு வர்றார். அதனால்தான், அவர் அகில உலக சூப்பர்ஸ்டார்!"

உங்க ஹீரோவுக்கு போட்டியா பிரதமரில் ஆரம்பிச்சு மதுவந்தி வரைக்கும் பலரும் வீடியோ விடுறாங்களே?

Narendra Modi Biopic
Narendra Modi Biopic

"நம்ம பிரதமர், `8 மணிக்கு ஒண்ணு சொல்றேன்', `8.30 மணிக்கு ஒண்ணு சொல்றேன்'னு வீடியோ விடும்போது, இதெல்லாம் அரசு பண்ணப்போறதா ஏதாவது சொல்வார்னு எதிர்பார்த்து ஏமாந்தவன்ல நானும் ஒருத்தன். அரசு என்ன பண்ணப்போகுதுன்னு சொல்லாம, நாம என்ன பண்ணணும்னு சொல்லிட்டுப் போயிடுறார். புலம்பெயர் தொழிலார்களுக்கு ஏதாவது பேக்கேஜ், ஈ.எம்.ஐ மாரடேரியம்னு ஏதாவது அறிவிப்பார்னு பார்த்துட்டே இருக்கேன். ஹூஹூம்! அப்புறம் என்ன கேட்டீங்க... ஆங், மதுவந்தியின் அரசியல் விழிப்புணர்வு வீடியோஸ். அதெல்லாம் ஜாலியா இருக்கு. எல்லோருமே லாஜிக்கா, நியாயமா, சமூகநீதின்னு பேசிட்டு இருந்தா போரடிச்சுடும். இந்தமாதிரி நேரத்துல நம்மள என்டர்டெயின்மென்ட் பண்ண வீடியோ போடுற அவங்கள, கண்டிப்பா பாராட்டணும்."

பால் தீய்ஞ்சு போய்ச்சு, பினாயில் தீர்ந்து போச்சுன்னு முதல்வர்கிட்டே முறையிடுற மாதிரி ஏதாவது முக்கியமான பிரச்னைகள் உங்ககிட்டே இருக்கா?

தல-தளபதி சண்டை இன்னும் ஜாஸ்திதான் ஆகும் பிரதர். ஏன்னா... - `தமிழ்ப்படம்' சி.எஸ்.அமுதன் ஜாலி பேட்டி

"இல்ல ப்ரதர். முதல்வருக்கு நிறைய வேலை இருக்கும். பால் தீய்ஞ்சு போச்சுன்னு முதல்வர்கிட்டே முறையிடுறதுக்கு எல்லாம் பவர் வேணும். நானொரு நார்மல் மனுஷன் ஃப்ரம் இந்தியா. என்னால முடிஞ்ச அளவுக்கு நானேதான் தீர்த்துக்கணும். கொசுத்தொல்லை ஜாஸ்தியா இருக்கு, தண்ணி பிரௌனா வருது, ஏரியாவுல விளக்கு எரியலைன்னு ட்வீட் போடலாம்தான். `விளக்கு எரியலைன்னா, மண்ணெண்ணய் வாங்கி ஊத்துடா மங்கி'ன்னு கிளம்பிடுவானுங்க.

ஒரு பிரேக்கிங் நியூஸ் கிடைச்சாலே, அதை வெச்சி 9 படம் எடுக்கும் தமிழ் சினிமா, கொரோனாவை வெச்சி என்ன பண்ண காத்திருக்கு?

CS Amudhan
CS Amudhan

"தாம்பூலத்தை தட்டுறது, விளக்கு ஏத்துறதுன்னு எனக்கு நிறைய கன்டன்ட் கிடைச்சிருக்கு. ஆனா, கொரோனா பத்தி முழுமையான ஒரு படம் பண்ணணும்னா, `கன்டாஜியன்' மாதிரி பெரிய கேன்வாஸ்ல, அதை நேர்த்தியா கையாளக்கூடிய இயக்குநர் பண்ணாதான் நல்லாருக்கும். கொரோனாவால் உண்டான வலியும் அதிகம். அதனால், மிகச் சரியா அந்தப் படத்தை கையாளணும். இல்லனா தப்பா போயிடும். ஆனா, கண்டிப்பா நிறைய படங்கள் வரும். கலைத்துறையில் இருந்து இதுபோன்ற பிரச்னைகளுக்கு ரெஸ்பான்ஸ் வரத்தான் செய்யும்."

`ரெண்டாவது படம்', OTT -யில் ரிலீஸாக வாய்ப்பு இருக்கா?

Rendavathu Padam
Rendavathu Padam

"ரிலீஸாகும்னு நம்பிக்கை இருக்கு. நம்புறேன். என் வேலை படத்துல முடிஞ்சது. இருக்குற பொருளாதார சிக்கல்கள் தீர்ந்ததுன்னா, படம் வந்துடும். தயாரிப்பாளரும் அதற்கான முயற்சிகள் பண்ணிட்டு இருக்குறதா சொன்னார். புரொமோஷன், டிரெய்லர் கட்னு க்ரியேட்டிவ் சைடுல இருந்து உதவிகள் செய்ய, நானும் தயாரா இருக்கேன்."

ஊர்ல பலபேருக்கு வேலை இல்ல, கையில காசு இல்ல, சாப்பிட சோறு இல்ல. ஆனாலும், ட்விட்டர்ல தல-தளபதி சண்டை நடக்குதே எப்படி?

Tamizh Padam Series
Tamizh Padam Series

"அது இன்னும் ஜாஸ்திதான் ஆகும். இப்போ நமக்கு போர் அடிக்குது, பதிலுக்கு நாம யாரை அடிக்கலாம்னுதான் தோணும். அவன் ஏன் அப்படி பண்ணிட்டான், இவன் ஏன் இப்படி செஞ்சுட்டான்னு டைம்பாஸ் பண்ண ஏதாவது கன்டன்ட் தேடிட்டே இருக்கோம். என் புரொடியூசர் `ஒய்நாட் ஸ்டூடியோஸ்' சசிகாந்த், அவர் ட்விட்டர் பக்கத்துல காய்கறி, மெடிக்கல் எமர்ஜென்சி சம்பந்தமா ட்வீட் போட்டாலும், `அப்டேட் சார்'னு 50-60 பேர் வந்து நிக்குறான். என்னதான் பண்றது, யாருக்கும் பொழுதுபோகலை."

இந்த லாக்டௌன் நேரத்தில் உங்களை அதிகம் மகிழ்ச்சியடைய செய்த விஷயம் ஒண்ணு, எரிச்சலடையச் செய்த விஷயம் ஒண்ணு சொல்லுங்களேன்...

Tamizh Padam Series
Tamizh Padam Series

"சந்தோஷமான விஷயம்னா, என் குடும்பத்தோடு நேரம் செலவிடுறதுதான். எரிச்சல் அடையக்கூடிய விஷயங்கள் நிறைய இருக்கு. புலம்பெயர் தொழிலாளர்கள், எளிய மக்கள் கூட்டமா நடந்துபோறதையும், கடைக்கு பொருள் வாங்க கூடுறதையும் வெச்சி, அவங்களை ஏதோ முட்டாள்கள்ன்ற மாதிரி கருத்து சொல்றது கடுப்பா வருது. ஒருவகையான திமிருதான் இது. எங்கிட்ட டபுள் டோர் ஃப்ரிட்ஜ் இருக்கு, டன்ஸோ, பிக் பாஸ்கெட் அக்செஸ் இருக்கு. ஆனா, என்னையே `உருளைக்கிழங்கு வாங்கிட்டு வா', `தக்காளி வாங்கிட்டு வா'ன்னு வீட்ல அனுப்பிவிடுறாங்க. இப்படி மூணுநாள் முழு ஊரடங்குன்னு திடீர்னு அறிவிச்சா, வீட்ல ஃப்ரிட்ஜ் இல்லாதவங்களை விடுங்க, வீடே இல்லாதவங்க எல்லாம் எங்கே போவாங்க. அவங்களை வெச்சி கருத்து சொல்றேன்னு கிளம்புற ஆட்களுக்கு, வெளியுலகம் தெரியலைன்னுதான் சொல்வேன். இந்த எலைட் மனநிலை ரொம்ப எரிச்சலைத் தருது."

லாக்டௌன் முடிஞ்சதும் என்ன பண்ணலாம்னு ப்ளான்?

தல-தளபதி சண்டை இன்னும் ஜாஸ்திதான் ஆகும் பிரதர். ஏன்னா... - `தமிழ்ப்படம்' சி.எஸ்.அமுதன் ஜாலி பேட்டி

"புரோட்டா சாப்பிடணும் ப்ரதர். அதெல்லாம் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆவுது ( குரல் தழும்புகிறது ). முதல் வேலை அதுதான். சரி, இப்போ எதுக்குங்க அதை ஞாபகப்படுத்துனீங்க" என்று அவர் சொன்ன பதில் எனக்கும் புரோட்டா பற்றிய சிந்தனையை உசுப்பிவிட, இருவருக்கும் இடையே பேரமைதி ஒன்று நிலவி, போன் கட் டாகும் ஒலியோடு கலைந்தது. ப்ச்ச்...