Published:Updated:

`இது பிரிக்க முடியாத பந்தம்' - குழந்தையை வரவேற்கும் கணேஷ் வெங்கட்ராம்!

வே.கிருஷ்ணவேணி

குழந்தை பிறந்தது குறித்த தனது மகிழ்ச்சியை ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார் கணேஷ் வெங்கடராம்.

கணேஷ் வெங்கட்ராம்
கணேஷ் வெங்கட்ராம்

நடிகை, தொகுப்பாளினி நிஷா மற்றும் `பிக் பாஸ்' கணேஷ் வெங்கட்ராம் இணையருக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது.

கணேஷ் வெங்கட்ராம் ட்விட்டர் பதிவு
கணேஷ் வெங்கட்ராம் ட்விட்டர் பதிவு

இன்று காலை 7.29 மணிக்கு தங்களுக்குப் பெண்குழந்தை பிறந்துள்ளதாகவும், தாயும், சேயும் நலமுடன் உள்ளதாகவும் கணேஷ் வெங்கட்ராம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

இப்போது `பிக் பாஸ்' 3 ஆரம்பிக்கப்பட்டு, விறு விறுப்பாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. கணேஷ் வெங்கட்ராம் `பிக்பாஸ் சீசன் 1'ல் போட்டியாளராக இருந்தார்.

நிஷா - கணேஷ் வெங்கட்ராம்
நிஷா - கணேஷ் வெங்கட்ராம்

அப்போது ஒரு பேட்டியில் அவரைப் பற்றி நிஷாவிடம், ``உங்கள் கணவரை பலரும் ஜெனியூன்... (நேர்மையானவர், மதிப்பளிப்பவர்) எனப் பாராட்டுகிறார்களே...'' என்றதற்கு, ``ஒரு மனைவியாக எனக்கு சந்தோஷமே. கணவர் பாராட்டு வாங்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.'' எனப் பெருமையுடன் சொல்லியிருந்தார். இருவருமே காதலித்து, பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

கணேஷ் வெங்கட்ராம் `பிக் பாஸ்' முடிந்து வெளியில் வந்த பிறகு வெளிநாட்டிற்குச் சென்று வந்தார்கள் இருவரும். `தலையணைப்பூக்கள்' சீரியலுக்குப் பிறகு நிஷா ஜெயா டி.வியில் `ஸ்டார் சிங்கர்ஸ்' என்கிற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்தார். தாய்மை அடைந்த பிறகு சில காலம் தொடர்ந்தவர் அதன் பிறகு அதிலிருந்து விலகினார்.

நிஷா - கணேஷ் வெங்கட்ராம்
நிஷா - கணேஷ் வெங்கட்ராம்

பிறகு, வளைகாப்பும் நடந்து முடிந்தது. இந்நிலையில்தான் இன்று காலை அவருக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. `பிரிக்க முடியாத பந்தம் இது' என நெகிழ்ந்து பதிவிட்டுள்ள கணேஷ் அதில் நார்மல் டெலிவரி நடந்திருக்கிறது எனவும், நிஷாவின் பிறந்த நாளுக்கு அடுத்த நாளே மகள் பிறந்திருக்கிறாள் எனவும் பதிவிட்டுள்ளார்.

வாழ்த்துகள் நிஷா - கணேஷ்!