Published:Updated:

மீண்டும் கெளதம் மேனனுடன் த்ரிஷா... மே 4-க்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்! சோஷியல் மீடியா ரவுண்ட் அப்

dhanush #சோஷியல் மீடியா ரவுண்டப்!

லாக்டெளனில் பரபரப்பாக இருக்கும் ஒரே இடம், சோஷியல் மீடியாதான். பிரபலங்கள் அங்கே ஷேர் செய்யும் சுவாரஸ்யங்கள், இங்கே உங்கள் பார்வைக்கு. #சோஷியல் மீடியா ரவுண்டப்!

மீண்டும் கெளதம் மேனனுடன் த்ரிஷா... மே 4-க்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்! சோஷியல் மீடியா ரவுண்ட் அப்

லாக்டெளனில் பரபரப்பாக இருக்கும் ஒரே இடம், சோஷியல் மீடியாதான். பிரபலங்கள் அங்கே ஷேர் செய்யும் சுவாரஸ்யங்கள், இங்கே உங்கள் பார்வைக்கு. #சோஷியல் மீடியா ரவுண்டப்!

Published:Updated:
dhanush #சோஷியல் மீடியா ரவுண்டப்!

லாக்டெளன் சூழலில், மக்களின் பிரதான பொழுதுபோக்கு அம்சமான திரையரங்குகள் மூடப்பட்டு ஒரு மாதத்துக்கும் மேலாகிறது. குவாரன்டீன் நாள்களில் மக்கள் பொழுதைக் கழிக்க, அதிக அளவு OTT பக்கம் திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், லாக்டெளன் காலத்தில் மக்களால் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படம் என்ற ரெக்கார்டை உருவாக்கியிருக்கிறது, '3 இடியட்ஸ்'. அமீர்கான், மாதவன் உள்ளிட்டோர் நடித்த இந்தப் படம், தமிழில் விஜய் நடிப்பில் 'நண்பன்' ஆக வந்து இங்கேயும் ஹிட் அடித்தது. இந்த மகிழ்ச்சியான செய்தியைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார், நடிகர் மாதவன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

லாக்டெளனால் பல பெரிய படங்கள் ரிலீஸ் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் மாதத்தில் 'மாஸ்டர்', 'சூரரைப்போற்று' படங்கள் வெளியாகியிருக்க வேண்டிய சூழலில், மே1 தனுஷின் 'ஜகமே தந்திரம்' ரிலீஸ் ஆகியிருக்க வேண்டும்.

கொரோனாவால் படம் தள்ளிப்போனதால் ரசிகர்களுக்காக ஒரு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டிருக்கிறது, 'ஜகமே' டீம். 'ஜகம் சுகமடைந்ததும், ஜகமே தந்திரம்' என கொரோனாவுக்கான பாதுகாப்பு செய்தியோடு, 'ஜகமே தந்திரம்' போஸ்டர் வெளியிட்டிருக்கிறார்கள். இதை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து, நேற்று ‘ஜகமே தந்திர’த்தை டிரெண்டிங்கில் வைத்திருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சில நடிகைகள், வீட்டில் இருந்தபடியே குறும்படங்கள், ஆன்லைன் கான்செர்ட்டுகள் எனத் தங்களை பிஸியாக வைத்துக்கொள்வதோடு மட்டுமில்லாமல், தங்கள் ரசிகர்களையும் என்கேஜ் செய்துவருகின்றனர்.

டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டுவந்த நடிகை த்ரிஷா, இயக்குநர் கெளதம் மேனனுடன் இணைந்து புது புராஜெக்ட்டை கையில் எடுத்திருக்கிறார். அதற்கான மேக்கிங் வீடியோவைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார், த்ரிஷா. குறும்படமா, ஸ்பெஷல் டீஸரா அல்லது மே 4-ம் தேதி த்ரிஷா பிறந்தநாளுக்கான சர்ப்ரைஸ் வீடியோவா என குழம்பிக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

நடிகர் சிவாஜி கணேசன் – கமலா இணையரின் 68-வது திருமணநாள் நேற்று. இதை நினைவுகூறும் வகையில், தனது ட்விட்டர் பக்கத்தில் சிவாஜி கணேசன்- கமலா இணையரின் புகைப்படத்தைப் பகிர்ந்தார் விக்ரம் பிரபு.

இந்தப் படத்தை தான் மிகவும் விரும்புவதாக துல்கர் சல்மான் கமென்ட்போட, ரசிகர்களும் கமென்ட் மழையில் விக்ரம் பிரபுவை நனைத்துவருகின்றனர்.

சமூக வலைதளங்களில் எது எப்போது வைரல் ஆகும் என கணிக்கவே முடியாது. அதுவும் இந்த லாக்டெளன் சூழலில், மக்களின் பிரதான பொழுதுபோக்கு அம்சமாக மாறியிருக்கிறது சோஷியல் மீடியா தளங்கள். இதைப் புரிந்துகொண்டு, மக்களின் தேவைக்கேற்ப புதுப்புது கேம்ஸ், சேலஞ்ச் என மக்களை என்கேஜ் செய்துவருகின்றன வலைதளங்கள். இளைஞர்களுக்கு, இணையர்களுக்கு எனப் பல பிரிவுகளில் இயங்கிவரும் இந்த சுவாரஸ்ய விளையாட்டுகள்தான் இப்போது டிரெண்டிங். அதிலும் குறிப்பாக, கப்புள்களுக்கு இடையே கேள்விகள் கேட்டு, ஒருவரை ஒருவர் எவ்வளவு தெரிந்துவைத்திருக்கிறார்கள் என டெஸ்ட் செய்யும் விளையாட்டு, டிக்டாக்கில் இப்போது வைரலாகி வருகிறது.

இந்த டிக்டாக் சேலஞ்சில், சமீபத்தில் ஷ்ருதியும் அவரது தங்கை அக்‌ஷராவும் இணைந்தனர். ட்ராமா குயின் யார், யார் அதிகம் பிஸி? எனப் பல கேள்விகளுக்கு இருவரும் பதிலளித்துள்ளனர். க்யூட்டிகளின் இந்த கேள்வி-பதில் வீடியோவுக்கு லைக்ஸ் தெறிக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism