Published:Updated:

``நிஜத்துல நான் ஜெஸ்ஸி... கார்த்திக் தான் கற்பனை!”- கெளதம் வாசுதேவ் மேனன்

Gautham vasudev menon
News
Gautham vasudev menon

`எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்துகாக நானும் வெயிட் பண்றேன். நவம்பர் 15 படம் கட்டாயம் வெளிவரும்!

சென்னை லயோலா கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேஷன் துறை சார்பில் ``Changing screens & Emerging Media Paradigms” என்ற தலைப்பில், மாறிவரும் ஊடகத்துறை தொடர்பான கருத்தரங்கம் நேற்று தொடங்கி இன்று நிறைவுபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இறுதியில் கலந்துகொண்ட இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

``நிஜத்துல நான் ஜெஸ்ஸி... கார்த்திக் தான் கற்பனை!”- கெளதம் வாசுதேவ் மேனன்

நிகழ்ச்சியில் பேசிய கெளதம், ``நான் எப்போதும் இளைஞர்களிடமிருந்து கற்றுக்கொள்வேன். எல்லா நாளும் நான் சந்திக்கும் இளைஞர்கள் மூலம் கற்றுக்கொள்கிறேன். இப்போதும் இங்கு கற்றுகொள்ளவே வந்திருக்கிறேன். இரண்டு நாள்களாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், இயக்குநர் பால்கி, ரவி. கே. சந்திரன், கமல் உள்ளிட்ட பல முக்கியக் கலைஞர்கள் கலந்துகொண்டுள்ளனர். கமல் தற்போது அரசியல் களத்தில் இருக்கிறார். எனக்கு அவரை நடிகராக மிகவும் பிடிக்கும். அவர் தொடர்ந்து நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கதை மற்றும் திரைக்கதை தொடர்பாகப் பேச வேண்டும் என்றால், உங்களுக்கு ஒன்றைச் சொல்வேன். உங்களின் கதையில் நம்பிக்கை வைத்து திரைக்கதை எழுதுங்கள். ஹீரோக்களுக்கு திரைக்கதை எழுதாதீர்கள். ஹீரோக்களை முதல்வராக மாற்றும் கதைகளை எழுதாதீர்கள். நல்ல கதைகளை எழுதினால், நீங்களும் முதல்வராகலாம்” என்றார்.

அதன்பின்னர், மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

Gautham vasudev menon
Gautham vasudev menon

உங்கள் படத்தில் பாடல்கள் எல்லாம் சூப்பரா இருக்கும். அதுக்கு ரொம்ப முக்கியத்துவம் இருக்கும், இதற்கு தனிப்பட்ட காரணம் இருக்கிறதா?

பாடல்கள்தான் என்னை வழிநடத்திச் செல்கின்றன. நான் திரைக்கதையுடன் பாடல்களுக்கான இடத்தையும் சேர்த்தே எழுதுகிறேன். இந்த இடத்தில் பாடல்கள் வேண்டும் எனக் கேட்டு வாங்கி நான் வைப்பதில்லை. `விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் `மன்னிப்பாயா...’ பாடல், ஸ்கிரிப்ட்ல இருந்தது. அதைத் தான் ரஹ்மான் சார்கிட்ட சொன்னேன். அப்படித்தான் அந்தப் பாடல் உருவானது. அந்தப் பாடலைப் பார்த்தீங்கன்னா உங்களுக்குப் புரியும், அந்தப் பாடலிலும் கதை இருக்கும். வசனங்களைவிட பாடல் மூலம் சொல்லும்போது கூடுதல் எமோஷன்ஸ் இருக்கும் என நினைக்கிறேன். `எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் முதல் பாதியிலும் 5 பாடல்கள் இருக்கும். கதையுடன் சேர்ந்தே அது இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உங்கள் படத்தில் பெண்கள் கதாபாத்திரம் ரொம்ப வலிமையாக இருக்கும். அதற்கான காரணம் என்ன?

வீடுதான் அதற்குக் காரணம். எனது படத்தில் இருக்கும் பெண் கதாபாத்திரங்களில், எனது வீட்டில் இருக்கும் பெண்களின் தாக்கம் இருக்கும். எனது அம்மா, சகோதரிகள், மனைவி என எல்லோரும் இருப்பார்கள். இவர்களைத் தாண்டி எனக்கு யாரையும் தெரியாது. ஏதாவது தப்பா எடுத்தாலும் அவங்க கேள்வி கேப்பாங்க. அதுனால கவனமா எடுப்பேன்.

Gautham vasudev menon
Gautham vasudev menon

உங்க படத்தில் வரும் காதல் காட்சிகளுக்கு ஒரு மேஜிக் இருக்கிறது. அந்த மேஜிக்கிற்கு என்ன காரணம்?

நீங்க அதை மேஜிக்னு சொன்னதுக்கு நன்றி. இப்படி பாக்குறவங்க சொல்லணும்னுதான் உழைக்கிறோம். எப்படி பெண் கதாபாத்திரங்களுக்கு எனது வீடு ஒரு காரணமோ, அதே மாதிரி காதலுக்கும் எனது வீடு, நான் சந்தித்த நபர்கள்தான் காரணம்.

படத்தில், பாடலுக்கான இடத்தை எப்படித் தேர்வுசெய்கிறீர்கள்? `தள்ளிப் போகாதே...’ போன்ற காதல் பாடலை அந்த விபத்துக் காட்சியின் நடுவில் வைக்க வேண்டும் என எப்படி முடிவு செய்தீர்கள்?

திரைக்கதையில் பாடல் இடம் பெற்றிருப்பதுதான் அதற்குக் காரணம் என நினைக்கிறேன். ரஹ்மான் சாரிடம் சொன்னேன். உடனே `சூப்பர்’ என ட்யூன் கொடுத்தார், பாடல் வெளியானது. ஹிட் அடித்தது. அப்போது என்னுடன் பணியாற்றியவர்கள், `பாடல் செம ஹிட் சார். ஆனால், படத்தில் விபத்தின்போது பாடல் வருகிறது. அதை மாற்றி, புதிதாக வேறு மாதிரி எடுக்கலாமா?’ எனக் கேட்டார்கள். நான் சொன்னேன், `நிச்சயம் மாற்ற முடியாது. இந்தக் காட்சியைச் சொல்லித்தான் ட்யூன் வாங்கினேன். அவரின் கற்பனைதான் பாடலின் வெற்றிக்குக் காரணம். அந்த கற்பனைக்கு என்னால் துரோகம் செய்ய முடியாது. நிச்சயம் அந்த இடத்தில்தான் பாடல் வரும் என்றேன். எனது திரைக்கதையில் பாடல்களும் இருக்கும். அதுதான் காரணம் என நினைக்கிறேன்.

Gautham vasudev menon
Gautham vasudev menon

`விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் காதல் வசனங்கள் ரொம்ப அழகா இருக்கும். உங்க படத்துல வசனங்களை எப்படி எழுதுறீங்க சார்?

பெருசா யோசிச்சு எழுதுறது எல்லாம் இல்ல. அப்படியே வர்றது தான். வி.டி.வி படத்தைப் பொறுத்தவரை நான்தான் ஜெஸ்ஸி. கார்த்திக் தான் கற்பனை. ஆமா, இல்லைனு படத்துல சொல்ற ஜெஸ்ஸி ரோல் நிஜத்துல நான்தான். வேறு யாரும் இல்லை. அதுனால, ஜெஸ்ஸி என்ன பண்ணும்னு எனக்குத் தெரியும். அதுனால், அதான் அந்த ஒரிஜினல் அதுல வந்திருக்கும்னு நினைக்கிறேன்.

`எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்துகாக வெயிட் பண்றோம்... படம் எப்ப சார் வரும்?

நானும் வெயிட் பண்றேன். நவம்பர் 15 படம் கட்டாயம் வெளிவரும்!

Gautham vasudev menon
Gautham vasudev menon

உங்க படத்துல ஹீரோயின் கால்களை அதிகம் காட்டுவீங்க. அதுக்கு ஏதாவது காரணம் இருக்கா?

எனக்கு பொண்ணுங்க கால்கள் புடிக்கும். அதுனால அதை வைக்கிறேன். மத்தபடி அதுல வேற எந்தக் காரணமும் இல்லை. அழகான பொண்ணுங்க என்று தனியாக யாரும் இல்லை. எல்லா பொண்ணுங்களும் அழகான பொண்ணுங்கதான். எல்லா பொண்ணுங்களும் நல்ல பொண்ணுங்கதான்.