Published:Updated:

`மகனோட ஃபேவரைட் இப்ப என் பாட்டுதான்!' - `பாடலாசிரியர்' கீதா கார்த்திக் நேத்தா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கார்த்திக் நேத்தா மற்றும் கீதா கார்த்திக் நேத்தா
கார்த்திக் நேத்தா மற்றும் கீதா கார்த்திக் நேத்தா

தமிழ் ஆசிரியையாக இருந்து பாடலாசிரியராகப் பரிணாமம் அடைந்திருக்கும் கீதாவிடம் பேசினோம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

96' திரைப்படத்தில், `கரை வந்த பிறகு பிடிக்குது கடலை', `காதலே... காதலே... தனிப்பெருந்துணையே', `நெற்றிக்கண்' திரைப்படத்தில் `இதுவும் கடந்து போகும்' மற்றும் பல ஹிட் பாடல்களால் கவனம் ஈர்த்தவர் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா. அவருக்கு மட்டுமன்றி அவரின் காதல் மனைவி கீதாவுக்கும் கவிதைகள் மேல் அலாதி பிரியம். கீதாவின் முகநூல் பதிவுகளே அவரின் கவித்துவத்தையும் ரசனையையும் எடுத்துரைக்கின்றன. சமீபத்தில் வெளிவந்த `சின்னஞ்சிறு கிளியே' படத்தில் இடம்பெற்றிருக்கும் `அழகு தளிரே' பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரராகியிருக்கிறார் கீதா கார்த்திக் நேத்தா. தமிழ் ஆசிரியையாக இருந்து பாடலாசிரியராகப் பரிணாமம் அடைந்திருக்கும் கீதாவிடம் பேசினோம்.

கார்த்திக் நேத்தா மற்றும் கீதா கார்த்திக் நேத்தா
கார்த்திக் நேத்தா மற்றும் கீதா கார்த்திக் நேத்தா

``எம்.ஏ பண்ணும்போதுதான் எனக்குள்ள கவிதை எழுதுற திறமை இருக்குறதையே கண்டுபிடிச்சேன். என்னோட துறையில கலை நிகழ்ச்சிகள் அடிக்கடி நடக்கும். மற்ற துறை மாணவர்கள் ஆர்வமா கலந்துப்பாங்க. ஆனா, கலை நிகழ்ச்சிகளை நடத்துற எங்களோட துறையில யாருமே கலந்துக்க மாட்டாங்க. கௌரவ பிரச்னை ஆகிடக்கூடாதே நான் போய் என் பெயரைக் கொடுத்ததோட இல்லாம, அந்தப் பெயரைக் காப்பாத்தணுமேன்னு குட்டி குட்டியா கவிதை எழுத ஆரம்பிச்சேன். அப்படி வளர்ந்ததுதான் இந்தத் திறமை. அந்த சமயத்துலதான் ஒரு டப்பிங் படத்துக்குப் பாட்டு எழுதுற வாய்ப்பும் கிடைச்சது. சின்ன தயக்கத்தோடதான் அந்தப் பாட்டை எழுதி முடிச்சேன். கரெக்ஷனுக்காக அந்தப் பாடல் ரெக்கார்டிங்குக்கு போனபோது என்னோட வரிகளா இவ்ளோ அருமையா வந்திருக்குன்னு ஆச்சர்யமா இருந்தது.

`பாலைவன ரோஜா' டப்பிங் படத்துல என்னோட வரிகள் பாடலா வெளியானப்போ கிடைச்ச சந்தோஷத்துக்கு அளவே இல்ல. நான் எழுதுற கவிதைகளை இன்னொருத்தர் படிக்கும்போது கிடைக்குற இன்பத்தைவிட பாட்டா கேட்டப்போ கிடைச்ச இன்பம் இருக்கே... ஒரு குழந்தையைப் பெத்தெடுத்து கையில முதல்முறையா ஏந்துற மாதிரியான ஓர் உணர்வை அது கொடுத்துச்சு. அதுக்கப்புறம் ஒண்ணு ரெண்டு பாடல்கள் எழுதியிருந்தாலும் அது வெளிய வரல. ஒரு முழுமையான தமிழ் படத்துல நான் எழுதின பாடல் வெளியாகியிருக்குன்னா அது `அழகு தளிரே'தான்.

குழந்தையுடன் 
கார்த்திக் நேத்தா மற்றும் கீதா கார்த்திக் நேத்தா தம்பதியினர்
குழந்தையுடன் கார்த்திக் நேத்தா மற்றும் கீதா கார்த்திக் நேத்தா தம்பதியினர்
சர்வைவர்: `பப்ளிக்கா இப்படி தர்மசங்கடப்படுத்துவார்னு எதிர்பார்க்கல!' - விக்ராந்த் மனைவி மானசா

`திருமணத்துக்கு முன்னாடி நான் எழுதின இந்தப் பாட்டு எங்க மகன் பிறந்ததுக்கப்புறமா வெளியாகியிருக்கு. அவன் பிறந்ததுல இருந்து இப்பவரைக்கும் அவனோட ஃபேவரைட் பாடல் என்னோடதா இருக்குறதுல கொள்ளை சந்தோஷம். நைட் தூங்குறதுக்கோ சாப்புடுறதுக்கோ ரொம்ப அடம்பிடிச்சா இந்தப் பாட்டை போட்டுவிட்டுடுவோம். அமைதியா பாட்டை கவனிப்பான். `அம்மா பாட்டு.. அம்மா பாட்டு'ன்னு சொல்லி என்னோட மாமியார் அழகா பழக்கிட்டாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த ரெண்டு வருஷங்களும் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். கல்யாணம்... உடனே குழந்தை... அதுக்கப்புறம் பாடல் வெளியீடுன்னு எல்லாமே சந்தோஷ தருணங்கள்தான். சும்மா முயற்சி பண்ணிப் பாருங்க, நல்லா வரலைன்னா வேற யாரையாச்சும் வச்சு எழுதிக்கலாம்ன்னு என் நண்பர் மூலமா கிடைச்ச வாய்ப்புதான் இது. பெருசா எந்த முன் அனுபவமும் இல்ல, கூடவே வாசிப்பும் குறைஞ்சு போச்சுங்குற தயக்கத்தோடதான் எழுதியிருந்தேன். ஆனா, எந்தப் பிளானும் இல்லாம எழுதிக் கொடுத்த பாட்டு இத்தனை பேர் ரசிக்கும்படியா அமைஞ்சது எனக்கே இன்ப அதிர்ச்சிதான்.

கார்த்திக் நேத்தா மற்றும் கீதா கார்த்திக் நேத்தா
கார்த்திக் நேத்தா மற்றும் கீதா கார்த்திக் நேத்தா
``அந்த எதிர்பார்க்காத நேரத்துலதான் அப்பா `சர்வைவர்' ஷோவுக்கு கிளம்பினார்!" - பெசன்ட் ரவி மகள்

நான் ரொம்ப ஈஸியா வரிகளை எழுதிக் கொடுத்துட்டேன். ஆனா, கார்த்திக் பாட்டு எழுதும்போது ரூமே அமைதியா இருக்கும். மெட்டுக்கு ஏத்த மாதிரியான வரிகளும் இப்படிப்பட்ட வார்த்தைகளும் அவருக்கு மட்டும் எப்படிதான் கொட்டுதோன்னு வியப்பா யோசிச்சிருக்கேன். அவரோட பாடல்களை முதல்ல கேக்குற வாய்ப்பு எப்பவுமே எனக்குத்தான். `அழகு தளிரே' பாடல் வெளியானதுல என்னைவிட என் கணவருக்குத்தான் ரொம்ப சந்தோஷம். நண்பர்கள், உறவினர்கள், தெரிஞ்சவங்கன்னு ஒருத்தர் விடாம அவரோட சந்தோஷத்தைப் பகிர்ந்துகிட்டாரு'' என்பவரின் முகத்தில் அதே சந்தோஷச் சிரிப்பு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு