Published:Updated:

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93-வது பிறந்த நாள்... டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்!

முக்கியமான தலைவர்கள், கலைஞர்கள், அறிஞர்களின் பிறந்த நாள்களுக்குச் சிறப்புச் செய்யும் வகையில் கூகுள் டூடுல் வெளியிடுவது வழக்கம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'எங்களோடு வயலுக்கு வந்தாயா? நாற்று நட்டாயா? களை பறித்தாயா? ஏற்றம் இறைத்து நெடுவயல் பாயக்கண்டாயா?' என்ற வசனத்தையும், 'உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா, கர்ணா...' என்ற பாடலையும் கேட்கும்போது கட்டபொம்மனும், கர்ணனும் நம் மனதில் தோன்றுவதை விட அந்தப் பாத்திரத்தில் நடித்த... இல்லை வாழ்ந்த சிவாஜி கணேசன்தான் நம் மனதில் தோன்றுவார். தமிழ் திரையுலகின் ஈடுசெய்ய முடியாதா ஒப்பற்ற கலைஞர். அவருடைய 93-வது பிறந்தநாள் இன்று.

சிவாஜி கணேசன்
சிவாஜி கணேசன்

முக்கியமான தலைவர்கள், கலைஞர்கள், அறிஞர்களின் பிறந்த நாள்களுக்குச் சிறப்புச் செய்யும் வகையில் கூகுள் டூடுல் வெளியிடுவது வழக்கம். கூகுள் தேடலின் முகப்புப்பக்கத்தில் கூகுள் டூடும் இடம்பெறும். இந்தியத் திரையுலகின் மாபெரும் கலைஞரான சிவாஜி கணேசனின் பிறந்தநாளையும் முன்னிட்டு அவரை நினைவுகூரும் வகையில் கூகுள் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த கூகுள் டூடுலை பெங்களூரைச் சேர்ந்த நூபூர் ராஜேஷ் சோக்ஸி வரைந்துள்ளதாக அதன் வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளது கூகுள். அதோடு சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கத்தையும் டூடுலைப் பற்றிய அதன் வலைப்பதிவில் பதிவில் குறிப்பிட்டுள்ளது கூகுள்.

நடிகர் விக்ரம் பிரபுவும் நடிகர் திலகம் சிவாஜியின் கூகுள் டூடுல் படங்களைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இந்த டூடுலை வடிவமைத்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு