Published:Updated:

`மண்டேலா பெயரை வைத்துக் காமெடி செய்வது ஆதங்கமாக உள்ளது!' - டைட்டில் சர்ச்சை குறித்து கோபி நயினார்

yogi babu

''சில நேரங்கள் சில படங்களுக்கான டிஸ்கஷன் மூன்று வருடம் கூடப் போகும். டைட்டிலை வைத்ததற்காக உடனே படம் எடுக்க வேண்டும் என்பதில்லை'' மண்டேலா டைட்டில் குறித்து தன்னுடைய ஆதங்கத்தைச் சொல்கிறார் கோபி நயினார்.

`மண்டேலா பெயரை வைத்துக் காமெடி செய்வது ஆதங்கமாக உள்ளது!' - டைட்டில் சர்ச்சை குறித்து கோபி நயினார்

''சில நேரங்கள் சில படங்களுக்கான டிஸ்கஷன் மூன்று வருடம் கூடப் போகும். டைட்டிலை வைத்ததற்காக உடனே படம் எடுக்க வேண்டும் என்பதில்லை'' மண்டேலா டைட்டில் குறித்து தன்னுடைய ஆதங்கத்தைச் சொல்கிறார் கோபி நயினார்.

Published:Updated:
yogi babu

'தர்ம பிரபு', 'கோமாளி' உள்ளிட்ட பல படங்களில் காமெடியனாக நடித்தவர் யோகிபாபு. 'தர்மபிரபு' படத்தைத் தொடர்ந்து இவர், கதாநாயகனாக நடிக்கவிருக்கும் படம், ' மண்டேலா'. சமீபத்தில் இதன் போஸ்டர் லுக் வெளியானது. இந்தப் படத்தை புதுமுக இயக்குநர் மடோன் அஷ்வின் என்பவர் இயக்குகிறார். போஸ்டர் வெளியானதிலிருந்து படத்துக்கான சர்ச்சை கிளம்ப, இப்போது பூதாகரமாக வெடித்திருக்கிறது. 'மண்டேலா' என்கிற தலைப்பை ஒரு வருடத்துக்கு முன்பே பதிந்துள்ளதாகத் தெரிவித்த கோபி நயினார், அந்தத் தலைப்பை யோகிபாபு நடிக்கும் படத்துக்கு வைத்திருக்கிறார்கள் எனக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

gopi nainar
gopi nainar

இதுபற்றிப் பேசிய கோபி நயினார், `` ஒரு வருடத்துக்கு முன்பே 'மண்டேலா' என்கிற தலைப்பை நான் பதிந்துவிட்டேன். அதுமட்டுமன்றி படத்தை ஜெயம் ரவியை வைத்து இயக்கலாம் என்றிருந்தேன். இப்போது, 'அந்த டைட்டில் எப்படி யோகிபாபு படத்துக்கு வைக்கலாம்' என வொய் நாட் ஸ்டடூடியோஸ் சசியைத் தொடர்புகொண்டு பேசினேன். ஒரு மாதத்துக்கு முன்னாடியே அந்தத் தலைப்பை அவர் பதிந்துவிட்டதாகச் சொன்னார். ஒருவேளை நான் பதிந்து வைத்திருந்த டைட்டில் காலாவதியாகிவிட்டதோ, எனக் கவுன்சிலில் விசாரித்தபோது, கில்டில் என்னுடைய தயாரிப்பாளர் பெயரில் பதிவு செய்தது மட்டுமே இருக்கிறது. இந்த மாதம் 22-ம் தேதி வரை புதுப்பிப்பதற்கான நேரம் இருக்கிறது. ஆனால், கில்டின் ஜாகுவார் தங்கமும் தலைவரும் தலைப்பைப் புதுப்பிக்கவிடாமல் செய்கின்றனர். காரணம் கேட்டதற்கு, ` இவ்வளவு நாள்கள் படம் எடுக்காமல் இருக்கிறீர்கள். அதனால்தான் அந்த டைட்டிலை வேறு ஒருவர் பயன்படுத்தியிருக்கிறார்' எனப் பதில் கொடுத்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`` என்னைப் பொறுத்தவரை, சில நேரங்கள்ல சில படங்களுக்கான டிஸ்கஷன் மூன்று வருடங்கள்கூடப் போகும். டைட்டிலை வைத்ததற்காக உடனே படம் எடுக்க வேண்டும் என்பதில்லை. இதைக் கேட்டால், கில்டிலிருந்து ஒரு பெண்மணி என்னை மோசமாகப் பேசுகிறார். `இன்னும் ஆறு மாதம் வரைதான் உங்களுக்கு டைம். அதற்குள் படம் எடுத்து முடித்தால் மட்டுமே இந்த டைட்டில் உங்களுக்குக் கொடுப்போம்' என இப்போது நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். அது என்னுடைய டைட்டில், நான் வைத்திருக்கிறேன். அதைக் கொடுக்க மாட்டேன் என்று சொல்வதற்கு இவர்கள் யார்.

gopi nainar
gopi nainar

''பிர்தாஸ் முண்டா' என்ற டைட்டிலுக்கு இப்படித்தான் ஆச்சு. இப்படி என்னுடைய படங்களுக்கு முட்டுக்கட்டைப் போடுவதும், நெருக்கடி கொடுப்பதுமாக இருக்கிறார்கள். இப்போது கடிதம் கேட்கிறார்கள். கில்டில் மட்டும் ஆறு மாதத்துக்கு ஒருமுறை தலைப்பை புதுப்பிப்பதை செய்துகொண்டுதான் இருக்கிறேன். என்னைக் காலாவதியாக்க முயற்சி செய்கிறார்கள். ஒருகட்டத்தில் நடிகர் சங்க கவுன்சில் தலையீட்டால் இப்போது என்னை ரெனிவல் செய்யவிட்டிருக்கிறார்கள். இந்தப் பிரச்னை எப்போது முடியும் எனத் தெரியவில்லை. `அவங்க ஷூட்டிங்கே போயிட்டாங்க, நீங்க இன்னும் ஏன் போகல'னு கேட்கிறாங்க. ஒரு அரசியல் ரீதியான படமாக இருந்தால்கூட சம்மதம் தெரிவித்திருப்பேன். மண்டேலா என்கிற பெயரில் காமெடி படம் எடுக்கிறார்கள். போஸ்டர் டிசைனைப் பார்த்தாலே கஷ்டமாக இருக்கிறது. போஸ்டரில் மண்டேலா என்கிற பெயரில் சவரக்கத்தியை வைத்திருக்கிறார்கள். அதைப் பார்க்கும்போது, ஆதங்கமாக இருக்கிறது'' எனக் கொதிப்புடன் பேசி முடித்தார் கோபி நயினார்.