சூர்யாவுடன் மோதும் ஹாலிவுட் வில்லன்! | சூர்யா, சிங்கம் 2, அனுஷ்கா, ஹன்சிகா

வெளியிடப்பட்ட நேரம்: 12:13 (20/02/2013)

கடைசி தொடர்பு:12:13 (20/02/2013)

சூர்யாவுடன் மோதும் ஹாலிவுட் வில்லன்!

சூர்யா, அனுஷ்கா நடித்து ஹிட்டான படம் சிங்கம். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ‘சிங்கம்-2’ என்ற பெயரில் ஹரி இயக்கி வருகிறார். இப்படத்திலும் சூர்யா, அனுஷ்கா நடித்து வருகின்றனர். படத்தின் முதல் பாடலுக்கு அஞ்சலி நடனமாடியிருக்கிறார்.

தன்னுடைய அனைத்து படங்களிலும் பாடல்களுக்கு மட்டுமே வெளிநாட்டு சென்ற ஹரி, சிங்கம் 2 படத்திற்காக சில காட்சிகளையும், ஒரு சண்டைக்காட்சியையும் வெளிநாட்டில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார். இதற்காக தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு இப்படக்குழு விரைவில் செல்லவிருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தில் வில்லனாக ஹாலிவுட் நடிகர் டேனி சபானி நடிக்கவிருக்கிறார். லண்டனைச் சேர்ந்த இவர் டெலிவிஷன் தொடர்களிலும், ‘தி ஆக்ஸ்போர்ட் மர்டர்’, ‘மெர்சினிரீஸ்’ போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தற்போது ஆஸ்கர் விருது இயக்குனர் டேனி பாயல் இயக்கும் ‘ட்ரான்ஸ்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

ஹாலிவுட் வில்லனுடன் சூர்யா மோதவிருப்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close