அஜித் ஏன் இப்படி?: புலம்பும் தயாரிப்பாளர்!

அஜித் - விஷ்ணுவர்தன் இணைந்துள்ள வலை படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்தது. இப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அஜித்தின் செயலை பார்த்து வாயடைத்து போய் இருக்கிறாராம்.

கில்லி, சிவகாசி போன்ற விஜய்யின் வெற்றி படங்களை தயாரித்தவர் ஏ. எம்.ரத்னம். பாய்ஸ், எனக்கு 20 உனக்கு 18 உள்ளிட்ட படங்களின் தோல்வி இவரை மிகவும் பணக்கஷ்டத்திற்குள்ளாக்கியது.

விஜய்யின் கால்ஷிட் தேதிகள் கேட்டு நடையாய் நடந்தவரை அழைத்து, தனது தேதிகளை ஒதுக்கினார் அஜித். இதனால் அஜித்தின் புகழ் மழை பாடினார் ஏ.எம். ரத்னம். " எனது சம்பளத்தினை படம் முடிவடைந்தவுடன் வியாபாரம் ஆனவுடன் வாங்கி கொள்கிறேன்" என்று கூறினாராம் அஜித்.

இதனால் எவ்வித பிரச்னையும் இல்லாமல், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் படப்பிடிப்பு ஆரம்பமானது. தேதிகள் ஒதுக்கி படப்பிடிப்பு துவங்கியவுடன் அஜித், எனக்கு கொஞ்சம் பணம் வேண்டும் என்று கூறி ஒரு கோடி வாங்கினாராம். சில நாட்கள் மீண்டும் பணம் வேண்டும் என்று கூறி வாங்கி கொண்டே இருந்தாராம்.

மிகவும் பணக்கஷ்டத்தில் இருந்த ஏ.எம்.ரத்னம், படப்பிடிப்பிற்கு வைத்திருந்த பணத்தையும் கொடுத்தாராம். இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் 10 நாட்கள் நடைபெற இருக்கிறது. அதற்குள் தனது மொத்த சம்பளத்தையும் வாங்கி விட்டாராம் அஜித்.

பட வியாபாரம் ஆனவுடன் வாங்கி கொள்கிறேன் என்று கூறியவர், இப்படி செய்து விட்டாரே என்று புலம்பி தள்ளுகிறாராம் ஏ.எம்.ரத்னம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!