அமலா பால் கொடுத்த முத்தம்! | அமலா பால், அல்லு அர்ஜுன்

வெளியிடப்பட்ட நேரம்: 12:11 (21/02/2013)

கடைசி தொடர்பு:12:11 (21/02/2013)

அமலா பால் கொடுத்த முத்தம்!

தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார் அமலாபால்.

தற்போது தமிழில் விஜய்யுடன் தலைவா, தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் Iddarammayilatho படத்திலும் நடித்து வருகிறார். தலைவா படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பினை முடித்து விட்டு ஸ்பெயின் நாட்டில் தொடங்கிய அல்லு அர்ஜுன் படத்தில் நடிக்க சென்று விட்டார்.

Iddarammayilatho படத்தில்  அல்லு அர்ஜுனுடன் ஒரு முத்தக் காட்சியில் நடித்து இருக்கிறாராம் அமலா. இக்காட்சியினை படமாக்கும் முன் அல்லு அர்ஜுன், அமலா பால் இருவரிடம் இயக்குனர் காட்சியினை விளக்கி படமாக்கினாராம்.

ஏற்கனவே வேட்டை படத்தில் ஆர்யாவுடன் ஒரு முத்தக்காட்சியில் நடித்து இருக்கிறார் அமலாபால். தற்போது அல்லு அர்ஜுனுடன் அமலாபால் நடித்துள்ள இந்த உதட்டோடு உதடாக கொடுக்கும் முத்தக்காட்சி, திரையில் நிச்சயம் சூட்டைக் கிளப்பும் என்கிறது டோலிவுட்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close