இளையராஜாவுடன் மிஷ்கின் !

முகமூடி படத்தினைத் தொடர்ந்து மிஷ்கின் Lone Wolf என்கிற தயாரிப்பு நிறுவனத்தினை தொடங்கி இருக்கிறார்.

தனது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற படத்தினை தயாரிக்கிறார். இப்படத்தினை மிஷ்கினே இயக்க, இளையராஜா இசையமைக்க இருக்கிறார்.

இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் மிஷ்கின் அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவில் எழுத்தாளர் பிரபஞ்சன், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, தயாரிப்பாளர் கமீலா நாசர், நடிகர் செல்வா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அவ்விழாவில் பிரபஞ்சன் பேசும் போது " இப்படத்தின் விளம்பரத்தை போலவே தலைப்பும் மிகவும் வித்தியாசமானது. படத்தின் மேல் உள்ள ஆர்வத்தை கூட்டுவதோடு, ரசிகர்கள் மத்தியில் ஒரே நாளில் இந்தப் படம் பிரபலமாகிவிட்டது. மிஷ்கின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பைக் காட்டுகிறது." என்றார்.

வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ஸ்ரீ, அடுத்து நடிக்கும் படம் இதுதான். இப்படம் குறித்து ஸ்ரீ " நான் கொடுத்து வைத்தவன்... முதல் படம் பாலாஜி சக்திவேல், இரண்டாவது படம் மிஷ்கின் என தலை சிறந்த இயக்குனர்களிடம் பணிபுரிவது என் பாக்கியமே. என் முதல் இரண்டு படங்களுமே கதை அமைப்பில் மட்டுமின்றி தலைப்பிலும் மிகவும் வித்தியாசமானவையாக அமைந்துள்ளது. இயக்குனர் மிஷ்கினிடம் நிறையவே கற்று வருகிறேன்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!