யு.டிவியிடம் 'தீயா வேல செய்யணும் குமாரு'

நாயகனாக நடித்து வந்த சுந்தர்.சி நீண்ட நாட்கள் கழித்து இயக்கிய படம் கலகலப்பு. குஷ்பு தயாரித்த அப்படத்தினை யு.டிவி நிறுவனம் வெளியிட்டது. சுந்தர்.சி பாணியில் வெளிவந்த காமெடி படம் என்பதால் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது.

அதனைத் தொடர்ந்து மீண்டும் குஷ்பு தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கி வரும் படம் தீயா வேல செய்யணும் குமாரு. சித்தார்த், ஹன்சிகா, சந்தானம், கணேஷ் வெங்கட்ராம், பிக் எஃப்.எம் பாலாஜி மற்றும் பலர் நடித்து வருகிறார்கள்.

பீட்சா படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய கோபி அமர்நாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். எங்கேயும் எப்போதும் படத்திற்கு இசையமைத்த சத்யா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

சென்னை, கும்பகோணம், ஹைதராபாத் உள்ளிட்ட படங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று இருக்கிறது. இரண்டு பாடல்களை ஜப்பானில் படமாக்க இருக்கிறார்கள்.

தீயா வேல செய்யணும் குமாரு படத்தினையும் யு.டிவி நிறுவனம் வாங்கி இருக்கிறது. இது குறித்து தனஞ்செயன் " சுந்தர்.சி இயக்கி வரும் அடுத்த படமான தீயா வேல செய்யணும் குமாரு படத்தினையும் யு.டிவி நிறுவனம் மூலம் வெளியிட இருப்பதில் சந்தோஷமாக இருக்கிறேன்.

சித்தார்த், ஹன்சிகா ஆகியோருடன் பணியாற்ற இருப்பதிலும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தீயா வேல செய்யணும் குமாரு படத்தின் FIRST LOOK விரைவில் வெளியிட இருக்கிறோம். இப்படம் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் விதத்தில் இருக்கும்.

மே மாதம் இப்படம் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம். யு.டிவி நிறுவனம் சார்ப்பில் 4 முதல் 5 வாரங்கள் இடைவெளியில் கோடை விடுமுறைக்கு படங்கள் வெளியிட தீர்மானித்து இருக்கிறோம். அனைத்துமே மக்களை கவரும் விதத்தில் இருக்கும் " என்று தெரிவித்து இருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!