விஜய்யின் அடுத்த இயக்குனர் கே.வி.ஆனந்தா? | கே.வி.ஆனந்த், விஜய், ரஜினி, கார்த்தி

வெளியிடப்பட்ட நேரம்: 12:08 (20/02/2013)

கடைசி தொடர்பு:12:08 (20/02/2013)

விஜய்யின் அடுத்த இயக்குனர் கே.வி.ஆனந்தா?

மாற்றான்' படத்தினைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தினை இயக்க போகிறார், கார்த்தி அடுத்து நடிக்கும் படத்தினை இயக்க போகிறார் என்று செய்திகள் வரிசை கட்டுகின்றன.

இச்செய்திகள் வரிசையில் சமீபத்தில் இணைந்து இருப்பது தலைவா, ஜில்லா ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தினை கே.வி.ஆனந்த் இயக்க போகிறார் என்பது தான்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் நடிக்க வேண்டும் என்பது விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி ஆசையாம். துப்பாக்கி படத்தினைப் போலவே இப்படத்தினை கலைப்புலி தாணு தயாரிக்க முன்வந்திருக்கிறாராம்.

இந்நிலையில் ரஜினி, விஜய், கார்த்தி படங்கள் என வரிசை கட்டி செய்திகள் வெளியானலும், கே.வி.ஆனந்த் " படத்தின் கதைக்கு இறுதி வடிவம் கொடுத்து வருகிறேன். நான் எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமோ, நாயகனையோ ஒப்பந்தம் செய்ய்யவில்லை. கதைக்கு இறுதி வடிவம் கொடுத்த பின் நாயகனை முடிவு செய்து அறிவிப்பேன் " என்று தெரிவித்து இருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close