தொடங்கியது 'நையாண்டி'! | தனுஷ், சற்குணம், நையாண்டி

வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (21/02/2013)

கடைசி தொடர்பு:12:20 (21/02/2013)

தொடங்கியது 'நையாண்டி'!

மயக்கம் என்ன, 3 என 2012ம் ஆண்டில் தனுஷ் நடித்த படங்கள் யாவுமே மிகவும் சீரியஸ் டைப் படங்கள்! .

அப்படங்களைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வேறு எந்த ஒரு படமும் வரவில்லை. ஆனால் 2013ல் மரியான், ராஜன்ஹா (இந்தி), நையாண்டி ஆகிய படங்கள் வெளிவர இருக்கின்றன.

மரியான், ராஜன்ஹா(இந்தி) இரு படங்களுமே ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவர இருக்கும் படங்கள். இப்படங்களும் மிகவும் சீரியஸ் டைப் படங்கள்தான்.

இந்நிலையில் நீண்ட நாட்கள் கழித்து முழுநீள காமெடி திரைப்படம் ஒன்றில் நடிக்கிறார் தனுஷ். நையாண்டி.என்ற அந்த படத்தினை
களவாணி, வாகைசூட வா உள்ளிட்ட படங்களை இயக்கிய சற்குணம், இயக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக தனுஷ் தஞ்சாவூர் கிளம்பி சென்று இருக்கிறார்.

இன்று முதல் நையாண்டி படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் தனுஷ். தஞ்சாவூர், காரைக்குடி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இப்படத்தில் தனுஷ் ஒரு குத்துவிளக்கு வியாபாரியாக நடிக்கிறாராம்.

இப்படத்தில் தனுஷ் ஜோடியாக நாஷ்ரியா நாஸிம் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close