மீண்டும் கைகோர்க்கும் ஜெயம் ரவி - ஜெயம் ராஜா.! | ஜெயம் ரவி, ஜெயம் ராஜா

வெளியிடப்பட்ட நேரம்: 12:23 (21/02/2013)

கடைசி தொடர்பு:12:23 (21/02/2013)

மீண்டும் கைகோர்க்கும் ஜெயம் ரவி - ஜெயம் ராஜா.!

’ஜெயம்’, ‘எம்.குமரன். சன் ஆஃப் மகாலட்சுமி’, ’உனக்கும் எனக்கும்’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘தில்லாலங்கடி’ ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றியவர்கள் ஜெயம் ரவி - ஜெயம் ராஜா.

இருவரது கூட்டணியில் உருவான படங்கள் அனைத்துமே வரவேற்பை பெற்ற படங்கள் என்பதால் இவர்களது கூட்டணிக்கு என்பது ஒரு பெரிய ரசிகர்கள் வட்டம் இருக்கிறது.

இந்நிலையில் வேலாயுதம் படத்தினை முடித்தவுடன் விஜயகாந்த் நடித்த ரமணா படத்தின் இந்தி ரீமேக்கை இயக்கப் போகிறார் ஜெயம் ராஜா என்று செய்திகள் வெளியானது.

இவர்களது இணைப்பில் சந்தோஷ் சுப்ரமணியம் படத்தினைத் தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனம் ஒரு புதிய படத்தினைத் தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறது. அப்படத்தில் மீண்டும் அண்ணன் - தம்பி இணைகிறார்கள்.

இப்படம் குறித்து ஜெயம் ராஜா தெரிவித்து இருப்பது " சர்வ நிச்சயமாக இது ஒரு ஆக்‌ஷன் படம்! ஆனால் குடும்ப உறவுகளை மையப்படுத்தியே கதை நகரும்! ஆனால் ஆக்‌ஷன் வகை திரைப்படங்களில் புத்தம்புது டைமன்ஷனில் காட்சிகள் அமைக்கப் போகிறோம்! அந்தவகையில் தமிழ்சினிமாவின் மாஸ் ஹீரோ ஆக்‌ஷன் ஜானர் படங்களில் இந்தப் படம் கண்டிப்பாக புதிய எல்லைகளைத் தொடும். திரைக்கதை அதற்கு துணையாக இருக்கும். " என்றார்.

தற்போது இப்படத்தில் பங்குபெற இருக்கும் மற்ற முக்கிய நட்சத்திரங்கள் மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்களை தேர்வு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் ஜெயம் ராஜா. மே மாதம் முதல் படப்பிடிப்பு துவங்குகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close