அமெரிக்க காதலருடன் நடிகை அசின் திருமணம்? | அசின்

வெளியிடப்பட்ட நேரம்: 10:32 (05/03/2013)

கடைசி தொடர்பு:10:32 (05/03/2013)

அமெரிக்க காதலருடன் நடிகை அசின் திருமணம்?

நடிகை அசின் அமெரிக்காவில் வசிக்கும் இளைஞர் ஒருவரை காதலித்து வருவதாகவும், அவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

‘உள்ளம் கேட்குமே’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை அசின்,தமிழை தொடர்ந்து இந்தி பட உலகிலும் புகுந்து முன்னணி கதாநாயகியாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், அசின் அமெரிக்காவில் வசிக்கும் ஒரு இளைஞரை காதல் திருமணம் செய்துகொள்ளப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

 

அசினுக்கு நெருக்கமான உறவினர்கள் பலர் அமெரிக்காவில் வசிக்கிறார்கள். அவர்களை பார்ப்பதற்காக அசின் அமெரிக்கா சென்றபோது, அங்குள்ள ஒரு இளைஞருடன் அறிமுகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இரண்டு பேருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, நாளடைவில் காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

அவருக்கும், அமெரிக்க காதலருக்கும் இடையே உள்ள காதலை இரண்டு பேரின் பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டதாகவும்,இருவருக்கும் திருமணம் செய்து வைப்பது என்று பெற்றோர்கள் முடிவு செய்திருப்பதாகவும், திருமணம் விரைவில் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன் காரணமாக அசின் புதிய இந்தி பட வாய்ப்புகளை ஏற்க மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close