சித்தார்த் - சமந்தா விரைவில் திருமணம்? | சித்தார்த், சமந்தா

வெளியிடப்பட்ட நேரம்: 17:04 (18/03/2013)

கடைசி தொடர்பு:17:04 (18/03/2013)

சித்தார்த் - சமந்தா விரைவில் திருமணம்?

ஒருவழியாக சித்தார்த் - சமந்தா காதல், விரைவில் திருமணத்தை எட்டப்போவது உறுதி என்பது போல் தெரிகிறது.

தமிழில் 'பாய்ஸ்', 'காதலில் சொதப்புவது எப்படி' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சித்தார்த். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இருவரும் இணைந்து சமீபத்தில் 'Jabardasth' என்ற தெலுங்கு படத்தில் நடித்தார்கள்.

அதில் இருந்தே இருவரும் இணைந்தே ஊர் சுற்றி வருகிறார்களாம். கடந்த சனிக்கிழமையன்று இருவரும் ஜோடியாக காளஹஸ்தி கோயிலுக்குப் போய் சாமி கும்பிட்டு இருக்கிறார்கள். இருவருமே தங்களது பெற்றோருடன் சென்று ராகு - கேது பூஜை நடத்தி சாமி கும்பிட்டதை அனைவரும் ஆச்சர்யமாக பார்க்கிறார்கள்.

திருமணச் செய்தி குறித்து சித்தார்த் "‘எங்கள் இருவருக்கும் இப்போது திருமணம் என்ற வார்த்தையை பயன்படுத்துவது பொறுப்பற்றத்தனம். அதில் உண்மையில்லை.

நான் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்யும்போது அது வதந்தியாக இருக்காது. முறைப்படி அது நடக்கும் " என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close