விரைவில் 'கஜினி - 2'? | கஜினி, சூர்யா, அசின்

வெளியிடப்பட்ட நேரம்: 17:08 (03/04/2013)

கடைசி தொடர்பு:17:08 (03/04/2013)

விரைவில் 'கஜினி - 2'?

ஏ.ஆர்.முருகதாஸ் - சூர்யா - நயன்தாரா - அசின் கூட்டணியில் உருவாகி ரசிகர்களின் மனதைக் கொள்ளைக் கொண்ட படம் தான் கஜினி. விரைவில் 'கஜினி - 2' உருவாக இருக்கிறது.

'கஜினி' படத்தினைத் தயாரித்த சேலம் சந்திரசேகரன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் 'கில்லாடி' படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அப்போது தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகரன் "கில்லாடி படம் வெளியானவுடன் 'கஜினி - 2' படத்திற்கான வேலைகள் தொடங்கப்படும். சூர்யாவை சந்தித்து கஜினி - 2 குறித்து பேசுவேன்" என்றார்.

தயாரிப்பாளர் கேயார் "நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு முன்னணி நடிகர்கள் உதவும் காலம் இருந்தது. இப்போது யாருமே அப்படி செய்வது இல்லை. கஜினி தயாரிப்பாளரான சேலம் சந்திரசேகருக்கு, கஜினி -2விற்கு சூர்யா தேதிகள் ஒதுக்க வேண்டும்" என்று தன் பங்குக்கு பேசினார்.

கஜினி - 2 தொடங்குவது உறுதியாகி விட்ட நிலையில், கஜினி கூட்டணி இப்படத்தில் இருக்குமா? என்பது தான் ரசிகனின் கேள்வி!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்