கில்லாடி ஹன்சிகா!

தமிழ் திரையுலகம் பல்வேறு நடிகைகளை பார்த்து இருக்கிறது. ஆனால் ஹன்சிகா போன்று விவரமான நடிகையை பார்த்தே இல்லை என்கிறார்கள்.

காரணம் என்ன என்று விசாரித்ததில் " படங்களைத் தேர்வு செய்வதில் அம்மணி படு கில்லியாக இருக்கிறாராம். தயாரிப்பு நிறுவனம், சம்பளமும் பெரிதாக இருந்தால் கதை, நாயகன் பற்றி எல்லாம் கவலைப்படுவது இல்லையாம். அதுவே பெரிய ஹீரோ என்று வந்துவிட்டால் கொடுக்குறது கொடுங்கள் என்று கூறி விடுகிறாராம் ஹன்சிகா"

'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் நடிக்க லம்பமாக ஒரு பெரிய பணத்தை பேசி வாங்கியவர், 'வேலாயுதம்' என்றவுடன் சம்பளத்தைப் பற்றி எதுவுமே பேசவில்லை.

அதுமட்டுமன்றி இப்போதுள்ள முன்னணி நடிகைகளில் அதிக படங்களில் நடித்து வரும் நடிகை ஹன்சிகா தான். அம்மணி இப்போது எல்லாம் படத்தில் நடிக்க கால்ஷுட் தேதிகள் யாராவது கேட்டால் கதையை கேட்டுவிட்டு, சம்பளம் என்றவுடன் ஒன்று என விரல் நீட்டுகிறாராம்.

கதையை கூறியவர்கள், பின்னாங்கால் பிடறியில் பட ஒடுகிறார்களாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!