கார்த்தியை இயக்கும் ஹரி! | கார்த்தி, ஹரி

வெளியிடப்பட்ட நேரம்: 17:11 (03/04/2013)

கடைசி தொடர்பு:17:11 (03/04/2013)

கார்த்தியை இயக்கும் ஹரி!

பிரியாணி, ஆல் இன் ஆல் அழகுராஜா ஆகிய படங்களில் மாறி மாறி நடித்து வரும் கார்த்தி, அப்படத்தினைத் தொடர்ந்து ஹரி இயக்க இருக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

'தில்லு முல்லு' படத்தின் மறுபதிப்பை தயாரித்து வரும் வேந்தர் மூவிஸ் நிறுவனம், கார்த்தி - ஹரி இணையும் படத்தினை தயாரிக்க இருக்கிறது.

சூர்யா நடித்து வரும் 'சிங்கம் 2' படத்தினை இயக்கி வரும் ஹரி, அப்படத்தின் வேலைகள் முடித்தவுடன், கார்த்தி நடிக்கும் படத்தின் பணிகளை துவங்க திட்டமிட்டு இருக்கிறார்.

முந்தைய படங்கள் போலவே இப்படத்தினையும் கமர்ஷியல் காக்டெய்லாகவே இயக்க திட்டமிட்டு இருக்கிறார் ஹரி. எப்போதுமே ஒரு ஊர் சார்ந்து படம் எடுக்கும் ஹரி, இப்படத்தினை கோயம்புத்தூர் சார்ந்து படமாக்க திட்டமிட்டு இருக்கிறாராம்.

முதலில் அண்ணனை சீறவைத்து விட்டு, அப்புறம் தம்பியை என்ன செய்ய திட்டமிட்டு இருக்கிறாரோ...?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close