தனியாக குடியேறிய அஞ்சலி?

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வந்தாலும், இப்போது அஞ்சலி பற்றிய செய்தி தான் ஹாட் டாப்பிக்.

‘அங்காடித் தெரு’, ‘எங்கேயும் எப்போதும்’ உள்ளிட்ட படங்கள் அஞ்சலியை முன்னணி நாயகி ஆக்கியது. படவிழாக்கள், பொது நிகழ்ச்சிகள் என அனைத்திலும் தனது தாயாருடன்தான் கலந்து கொண்டார். அது மட்டுமன்றி பத்திரிக்கையாளர்கள் அஞ்சலியை தொடர்பு கொள்ள வேண்டுமானால் இவரது தாயாரிடம்தான் பேச வேண்டும்.

தற்போது அஞ்சலி தனது தாயாரை பிரிந்து விட்டதாகவும் செய்திகள் உலா வருகின்றது. அஞ்சலியுடன் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் உடன் வருவது அவரது சித்தியாம். சித்தியைத்தான் அழைத்து வந்து இங்கு குடியமர்த்தி இருந்தாராம்.

அஞ்சலிக்கு தெரியாமல் பெரிய மோசடி வேலைகளை எல்லாம் செய்து விட்டார்களாம். அதுமட்டுமன்றி நிறைய பணம் வேறு கையாடல் செய்து விட்டார்களாம். அஞ்சலி சித்திக்கு பக்க பலமாக இருந்து இந்த காரியங்களை எல்லாம் இயக்குனர் களஞ்சியம்தான் செய்து வருகிறாராம். அஞ்சலியுடன் பிறந்த அண்ணன், அக்காவை கூட பார்க்க, பேச அனுமதிக்க மறுக்கிறார்களாம்.

இவர்கள் செய்த அனைத்து விஷயங்களும் அஞ்சலிக்கு தெரியவர இப்போது ஹைதராபாத்திற்கு சென்று தனியாக வீடு பார்த்து குடியேறி விட்டாராம். இதுவரை அஞ்சலி சம்பாதித்த பணத்தையும் இருவரும் எடுத்துக் கொண்டார்களாம்.

இந்த பிரச்னைக்கு காரணம் என்ன என்று விசாரித்ததில் ஜெய் - அஞ்சலி இருவரும் காதலித்தில்தான் இந்த பிரச்னை ஆரம்பமானது என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!