பாலாவிடம் சசிகுமார் வைத்த கோரிக்கை! | பாலா, சசிகுமார்

வெளியிடப்பட்ட நேரம்: 15:44 (08/04/2013)

கடைசி தொடர்பு:15:44 (08/04/2013)

பாலாவிடம் சசிகுமார் வைத்த கோரிக்கை!

சசிகுமார் - பாலா இணைந்து படம் பண்ண இருக்கிறார்கள் என்பது தான் தமிழ் திரையுலகின் லேட்டஸ் டாக்காக இருக்கிறது.

'பரதேசி' படத்தினைத் முடித்து விட்டு அண்ணன் - தம்பி சம்பந்தப்பட்ட கதை ஒன்றிணை தயார் செய்து வைத்து இருக்கிறார் பாலா.

இப்படத்தில் அண்ணன் வேடத்தில் நடிக்க சசிகுமாரை சந்தித்து பேசி இருக்கிறார். சசிகுமாரும் தனது குருநாதர் பாலா படம் என்றவுடன் உடனே 'நீங்க எப்போ கூப்பிட்டாலும் வர்ரேண்ணே' என்று கூறிவிட்டாராம்.

'பரதேசி' படம் இப்போதுதான் வெளியாகி இருப்பதால், அடுத்த படம் தொடங்க இன்னும் சில மாதம் காலம் பிடிக்குமாம். சசிகுமார் - சந்தானம் இருவரும் இணையும் 'பிரம்மன்' படத்தின் படப்பிடிப்பு 28ம் தேதி முதல் துவங்குகிறது.

திடீரென்று பாலா அழைத்து விடுவாரோ என்று நினைத்த சசிகுமார், பாலாவை தொடர்பு கொண்டாராம். "நீ கவலைப்படாமல் உன் வேலையைப் பார்... நான் ஆரம்பிக்கும் போது சொல்கிறேன்" என்று கூறிவிட்டாராம் பாலா.

இப்படத்திற்கு தனது குருநாதரிடம் ஒரே ஒரு கோரிக்கை மட்டும் வைத்து இருக்கிறாராம். 'எந்த காரணத்தைக் கொண்டும் தாடியை மட்டும் எடுக்க மாட்டேன் என்ற கோரிக்கை தான் அது.

அண்ணன் வேடத்தில் சசிகுமார் நடிக்க, தம்பி வேடத்தில் நடிக்க யானை நாயகனிடம் பேசி வருகிறாராம்.

பாலா இயக்க இருக்கும் படம் என்பதால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை எதுவும் நிரந்தரம் இல்லை. பார்க்கலாம் என்ன நடக்குகிறது என்று.'

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close