காஸ்ட்லி இசையமைப்பாளர் ! | ஹாரிஸ் ஜெயராஜ், யான்

வெளியிடப்பட்ட நேரம்: 15:49 (08/04/2013)

கடைசி தொடர்பு:15:49 (08/04/2013)

காஸ்ட்லி இசையமைப்பாளர் !

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் இப்போதைக்கு காஸ்ட்லியான இசையமைப்பாளர் என்றால் ஹாரிஸ் ஜெயராஜ்தான்.

பாடல் கம்போசிங் என்றால் ஏதாவது வெளிநாட்டிற்கு சென்றால்தான் அவருக்கு ட்யூன் வரும் என்பார்கள். இப்போது நியூயார்க் மற்றும் க்ரூஸ் கப்பலுக்கு சென்று இருக்கிறார் ஏன் தெரியுமா?

ரவி.கே.சந்திரன் இயக்கத்தில் ஜீவா, துளசி நடிக்கும் 'யான்' படத்திற்காக இரண்டு பாடல்களை தயார் செய்ய சென்று இருக்கிறாராம். ஒரு பாடல் நியூயார்க் நகரிலும், ஒரு பாடலை க்ரூஸ் கப்பலிலும் ட்யூன் செய்ய திட்டமிட்டு இருக்கிறாராம்.

மேலும் இப்படத்திற்காக அமெரிக்காவில் உள்ள ராப் பாடகர்களை எல்லாம் பயன்படுத்த திட்டமிட்டு இருக்கிறார். ஹாரிஸ் கூடவே இருந்து பாடல் ட்யூன்களை வாங்கி விட வேண்டும் என்று இயக்குனர் ரவி.கே.சந்திரன் மற்றும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் இருவரும் உடன் சென்று இருக்கிறார்கள்.

பாடல்கள் தயாரான உடன் மொரோக்கோ நாட்டிற்கு சென்று படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்த மூவரின் தற்போதைய பயணத்திற்கு மட்டுமே சில கோடிகளை இறைத்து இருக்கிறார்களாம். எம்மாடியோவ்.....?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close