மாடர்ன் உடை லட்சுமி மேனன்! | லட்சுமி மேனன், கெளதம் கார்த்திக், விஷால், சுசீந்திரன்

வெளியிடப்பட்ட நேரம்: 15:52 (08/04/2013)

கடைசி தொடர்பு:15:52 (08/04/2013)

மாடர்ன் உடை லட்சுமி மேனன்!

'சுந்தர பாண்டியன்', 'கும்கி' ஆகிய படங்களைத் தொடர்ந்து, பல்வேறு கதைகளை கேட்டு வந்தாலும் படங்களை எதுவுமே ஒப்புக் கொள்ளாமல் இருந்தார் லட்சுமி மேனன். காரணம் அவருக்கு பரீட்சை நடைபெற்று வந்தது.

தற்போது அனைத்து பரீட்சைகளும் முடிந்து விட்டதால், அம்மணி படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.

முதலவதாக விஷால் - சுசீந்திரன் இணையும் படத்தின் நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார் லட்சுமி மேனன். இப்படத்தினை விஷால் தனது சொந்த நிறுவனமான 'VISHAL FILM FACTORY' மூலம் தயாரிக்க இருக்கிறார். இமான் இசையமைக்க இருக்கிறார்.

இரண்டாவதாக கெளதம் கார்த்திக் - 'சிலம்பாட்டம்' சரவணன் இணையும் படத்தின் நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார் லட்சுமி மேனன். முதன் முறையாக இப்படத்தில் மாடர்ன் உடை அணிந்து நடிக்க இருக்கிறார்.

அதுமட்டுமன்றி, ஒரு பெரிய பேனரின் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.விரைவில் அப்படத்தில் நடிக்கலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close